|
||||||||
வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக விளக்கி மனித குலத்திற்கு பயன்படும்படி செய்த காயகல்ப பயிற்சி குறித்து நம் சித்தர்கள் பாடல்களில் உள்ள சில குறிப்புகள்: |
||||||||
![]() வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக விளக்கி மனித குலத்திற்கு பயன்படும்படி செய்த காயகல்ப பயிற்சி குறித்து நம் சித்தர்கள் பாடல்களில் உள்ள சில குறிப்புகள்: உங்கள் அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் வாழ்க வளமுடன் அமைப்பில் சென்று இதை ஒரு மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். ஆகத்தியர் பாடல்: ================ உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும். பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு. தின்னும்காய் இலைமருந்தும் அதுவே யாகும். தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் மண்ணு(நூ)ழி காலமட்டும் வாழ்வார் பாரு. மரலிகையில் அகப்படவும் மாட்டார் தாமே. (மறலி -எமன் ) தாயுமானவர் பாடல்: =================== கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின் மேலேழும்பில் தேகம் விழுமோ பராபரமே.. (கால் -காற்று ) சிவவாக்கியார் பாடல்: =================== மூலமாங் குளத்தினில் முளைத்தெழுந்த கோரையைக் காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல், பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம் . ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே! ஒளவையார் பாடல்: ================= வாயு வழக்க மருந்து செறிந்தடங்கில் ஆயுட் பெருக்கமுண் டாம்.
|
||||||||
by Swathi on 06 Sep 2014 1 Comments | ||||||||
Tags: காயகல்ப பயிற்சி Kayakalpa Yoga Vethathiri Maharishi | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|