LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

கேடயம் அதிலோர் ஓவியம்

"டம், டம், டம்..."

அரச முரசின் முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிச்சது. முரசொலி கேட்ட மக்கள் இட்டது இட்டபடி அரக்கப் பரக்க நாற்சந்திக்கு ஓட்டமும் நடையுமா வந்தாங்க.. எல்லோருடைய முகத்திலும் ஓர் எதிர்பார்ப்பு இருந்திச்சு.

மகிழ்ச்சியான செய்தியா.. வருத்தம் தரும் செய்தியா... ண்னு தெரிஞ்சுக்கற ஆவல் மக்களோட முகத்தில் தெளிவாகக் தெரிஞ்சுது.

அரச சேவகன் ஒருவன் உயர்ந்த இடத்தில் ஏறி நிண்ணுட்டு கையிருந்த ஓலையை வாசிக்கத் தொடங்கினான்.

"இதனால் இந்திரபுரி மக்களுக்கு அறிவிப்பதென்னவென்றால்...." அப்படீண்ணு உரத்த குரலில் தெளிவாக வாசிக்கத் தொடங்கினான். செய்தியைக் கேட்ட இந்திரபுரி மக்கள் பயத்திலெ செலைமாதிரி நிண்ணுட்டாங்க..

இந்திர புரி நாட்டோட யுத்தத்திற்கு பக்கத்து நாடான அனந்த புரி தயாராக இருக்காம். அனந்தபுரியோ பெரிய நாடு அதனால் படையில் இருக்கிறவங்க போர்ப் பட்டறைக்கு உடனே வரணும்ங்கிறதுதான் அந்தச் சேதி.

யுத்தம் இல்லாத காலங்கிலே போர்வீர்கள் அவங்க குடும்பத்தோட இருப்பாங்க வேற வேலைகள் செய்வாங்க அப்படி இருக்கிறவங்களை யுத்தத்திற்கு வரச் சொல்லறாங்க.

செய்தியைக் கேட்க அடிச்சுப் புடிச்சு வந்தவங்க திரும்பிச் போகும் போது எதுவும்பேசாம அமைதியாகப் போனாங்க. இந்த செய்தியைக் கேட்டு இயற்கையும் கூட அமைதியாக இருந்திச்சு.. எங்கும் சின்னச் சத்தம் கூட இல்லை. காற்றும் வீசல.. மரங்களிலுள்ள இலைகளும் அசையல. நடைப்பிணங்களப் போல எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குப் போனாங்க.

அடுத்த நாள்...

குடும்பத்தில சந்தோஷமா இருந்தவங்க போர்ப் பட்டறைக்குப் புறப்பட்டாங்க புள்ளைக்குத் தாயும் கணவனுக்கு மனைவியும் நெற்றியில வீரத்திலகமிட்டு அனுப்பி வைச்சாங்க.

இந்திரபுரியின் போர்ப் பட்டறையில் எங்கும் கல கலன்னு சத்தம் கேட்கத் தொடங்கிச்சு. போர் வீரர்கள் அவங்கவங்க உடை வாளையும் கேடயத்தையும் நல்ல தொடச்சு எண்ணெய் போட தொடங்கினார்கள். நன்கு துடைத்து எண்ணெ போடத் தொடங்கனாங்க. நல்லா தொடச்ச வாளோட ஓரமும் நுனியும் பள பளன்னு மின்னிச்சு. அதப் பாத்தா குட்டிச் சூரியன் ஒண்ணு வாளோட ஓரத்தில் வந்து ஒட்டிகிச்சோ அப்பாடீண்ணு தோணும். வீரர்கள் எல்லாம் அவங்கவங்க வாள்களை வரிசையாக அடுக்கி வச்சாங்க.. அதைப் பாக்கறதுக்கு அழகாக இருந்திச்சு.

யுத்தத்திலே இந்த வாள்களெல்லாம் மின்னலைப் போல சுழலப் போகுது. எதிரிகளோட தலைகளைக் கொய்யப் போகுது. எதிரிகளோட ரத்தத்தைக் குடிக்கப்போகுது.

வாளையெல்லாம் தொடச்சு முடிச்சுட்டு கேடயத்தை துடைக்கத் தொடங்கினாங்க எதிரிகளோட வாள் எந்தப் பக்கம் பாயும்ணு புரிஞ்சுகிட்டு அதைத் இந்தக் கேடயம் தடுக்கும். போர் வீரர்கள் தங்களோட இடது கையில கேடயத்தை மாட்டிக்கிட்டு அப்படியும் இப்படியும் அசைத்துப் பார்த்தாங்க.

கேடயத்துக்கு எண்ணெய் போட்டு வச்சுட்டு அதில பல வண்ண ஒவியங்களே வரையத் தொடங்கினாங்க... சீறும் சிங்கம்... பாயும் புலி... வாயைப் பிளந்தபடி

நிற்கும் மலைப்பாம்பு... அப்படீண்ணு பல ஓவியங்களை வரைஞ்சாங்க. அப்படி வரையும்போது போர்க்களத்திலெ சிங்கத்தைப் போலவும் புலியைப் போலவும்
சண்டபோடற மாதிரி கற்பனையும் செய்துகிட்டாங்க.

அதே நேரத்திலே ஒரு போர் வீரர் மட்டும் தன்னோட கேடயத்திலெ சற்று வித்தியாசமான படத்தை வரஞ்சிட்டிருந்தாரு. அந்நதப் படத்தை எல்லாரும்
ஆச்சரியமாப் பாத்தாங்க. அது ஒரு ஈ யோட படம். சின்னதா இருந்துச்சு. அதைப் பாத்தவங்க அந்த போர் வீரரை கேலி செய்து சிரிச்சாங்க.. ஆனா அவரு அதைக்
கண்டுக்கவே இல்லை. தம் பாட்டுக்கு ஈ யோட படத்தை வரைஞ்சிட்டிருந்தாரு.

போர் நடந்துச்சு இந்திர புரி போரிலெ ஜெயிச்சுது.. போரிலெ அதிக எதிரிகளைத் தாக்கியதுக்கு ஈயின் படம் வரைஞ்ச அந்த வீரருக்கு அரசர் தங்க வாள்
பரிசாகக் கொடுத்தாரு.

ஈயோடு படம் வரைஞ்சதாலே அவராலெ எப்படி நெறைய ஏதிரிகளைத் தாக்க முடிஞ்சுது அப்படீண்ணு நெனக்கிறீங்களா.

சண்டபோட வர எதிரிக கேடயத்திலெ என்னாடாண்ண சின்னதா ஒரு படம் இருக்குதே. அது என்ன படம்ணு பாப்பாங்க இல்லையா. அந்த நேரத்திலே அவங்க
கவனம் செதறுமில்லையா அப்படி அவங்க கவனமில்லாம இருக்கற அந்தக் கண்ணிமைக்கற நேரத்தில இந்த வீரரு ஏதிரிகளைத் தாக்கீருவாரு.

அந்த வீரரோடு யோசனை நல்ல யோசனை இல்லையா?

by Swathi   on 30 Mar 2015  0 Comments
Tags: Kedayam   Oviyam   கேடயம்   ஓவியம்           
 தொடர்புடையவை-Related Articles
கேடயம் அதிலோர் ஓவியம் கேடயம் அதிலோர் ஓவியம்
ஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை ஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.