LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை, டிச. 15- சென்னையில் டாக்டர் குமரேசன், நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.     இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

டாக்டர்  குமரேசன் ஆதிகாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.  அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை அளித்து, அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார்.

இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளைச்  சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சைப்  பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையை அவர் 2 பேருக்கு சொல்லிகொடுத்து இருப்பதாக கூறினார். அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும்.டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும்.

கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து, தமிழக மருத்துவ  துறையில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். டாக்டர் மருத்துவர் குமரேசன் மூலம் ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவ அறிவியல் கழக தலைவர் டாக்டர்கமலி ஸ்ரீபால், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்’ கழகத்தின் தலைவர்லியோனி, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவின் ஜோதிமணி, தலைவர் டாக்டர்கள் சொக்கலிங்கம், காந்தராஜ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மற்றும் திரு.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

by Bharathidasan P   on 24 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா
இலக்கியவாதிகளா?  வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு
தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக  இயற்கை எய்தினார் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்
பத்மஸ்ரீ  முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி
வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  பல்வேறு முன்னெடுப்புகளும் வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.