LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

கீதார்த்தசங்கிரகம்

தனியன்
கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி
னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் - சிட்டர்தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப்
பாதம் புயமடியேன் பற்று.

கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்
பாதார விந்தமலர் பற்று.

15.1:
கருமமு ஞானமுங் கொண்டெழுங் காதலுக் கோரிலக்கென்
றருமறை யுச்சியு ளாதரித் தோது மரும்பிரமந்
திருமக ளோடு வருந்திரு மாலென்று தானுரைத்தான்
றரும முகந்த தனஞ்சய னுக்கவன் சாரதியே.

15.2:
உகவை யடைந்த வுறவுடை யார்பொர லுற்றவந்நாட்
டகவுட னன்பு கரைபுர ளத்தரு மத்தளவின்
மிகவுள மஞ்சி விழுந்தடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுட னுண்மை யுரைக்க வமைந்தன னாரணனே.

15.3:
உடல மழிந்திடு முள்ளுயி ரொன்றழி யாதெனைப்போல்
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்குயிர் காட்டு நினைவத னாலுளதாம்
விடுமய லென்று விசயனைத் தேற்றினன் வித்தகனே.

15.4:
சங்கந் தவிர்ந்து சகஞ்சதிர் பெற்ற தனஞ்சயனே
பொங்குங் குணங்கள் புணர்ப்பனைத் தும்புக விட்டவற்று
ணங்கண் ணுரைத்த கிரிசை யெலாமென வுந்நவின்றா
ரெங்கும் மறிவர்க ளேயென்று நாத னியம்பினனே.

15.5:
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளுந்
துறவாக் கிரிசைக டூமதி தன்னாற் றுலங்குகையு
மிறவா வுயிர்நன் னிலைகண் டிடுமுல கின்னிலையு
மறைவாழு மாயவ னேயனுக் கன்றறி வித்தனனே.

15.6:
கண்டெளி தாங்கரு மம்முயிர் காட்டக் கடுகுதலு
மண்டி யதன்படி யின்மனங் கொள்ளும் வரிசைகளுங்
கண்டறி யாவுயி ரைக்காண லுற்ற நினைவுகளும்
வண்டுவ ரேச னியம்பினன் வாசவன் மைந்தனுக்கே.

15.7:
யோக முயற்சியும் யோகிற் சமநிலை நால்வகையும்
யோகி னுபாயமும் யோகுத னால்வரும் பேருகளும்
யோகு தனிற்றன் றிறமுடை யோகுதன் முக்கியமு
நாகணை யோகி நவின்றன னன்முடி வீரனுக்கே.

15.8:
தானின்ற வுண்மையைத் தன்றனி மாயை மறைத்தமையுந்
தானன்றி மாயை தனைத்தவிர்ப் பான்விர கற்றமையு
மேனின்ற பத்தர்க ணால்வரின் ஞானிதன் மேன்மைகளுந்
தேனின்ற செங்கழ லான்றெளி வித்தனன் பார்த்தனுக்கே.

15.9:
அராத செல்வமு மாருயிர் காணு மரும்பயனும்
பேராது தங்கழற் கீழம ரும்பெரு வாழ்ச்சிகளுஞ்
சோரா துகந்தவர் தூமதி கொள்வதுஞ் செய்வனவுந்
தேரா விசயனுக் குத்திரு நாரணன் செப்பினனே.

15.10:
தன்மேன்மை யுந்தன் பிறப்பிற் றளராத் தனிநிலையும்
பன்மேனி நண்ணினன் பாற்பிரி யாவன்ப ராசைகளும்
புன்மேனி விண்ணவர் பாற்புரி யாததன் பத்திமையு
நன்மேனி நாரணன் றானர னுக்கு நவின்றனனே.

15.11:
எல்லை யிலாததன் சீலமா மின்னமு தக்கடலு
மெல்லை யிலாத விபூதி யெலாந்தன தானமையு
மெல்லையில் பத்தி தனையெழு விக்கத் திருவருளா
லெல்லையி லீச னியம்பின னிந்திரன் மைந்தனுக்கே.

15.12:
எல்லந் தனக்குரு வாயிலங் கும்வகை தானுரைத்துச்
சொல்லா லறிந்தது சோராமற் கண்டடி வேண்டுமென்ற
வில்லாள னுக்கன்று மெய்க்கண் கொடுத்திது வேறுமுண்டோ
நல்லவர்கண் காண்பாரென் றுநவின் றானங்க ணாயகனே.

15.13:
தன்கழ லிற்பத்தி தாழா ததுமதன் காரணமா
மிங்குண சிந்தையு மீதறி யார்க்கவ் வடிமைகளுந்
தங்கரு மங்க ளறியா தவர்க்கி லகுநிலையுந்
தங்கழ லன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே.

15.14:
ஊனின் படியு முயிரின் பிரிவு முயிர்பெறுவார்
ஞானம் பெறுவகை யுஞ்ஞான மீன்ற வுயிர்ப்பயனு
மூனின் றதற்கடி யும்முயிர் வேறிடு முளவிரகுந்
தேனின்ற பாதன் றெளிவித் தனஞ்சிலைப் பார்த்தனுக்கே.

15.15:
முக்குண மேயுயிர் முற்றவுங் கட்டிட மூண்டமையு
முக்குண மேயனைத் தும்வினை கொள்ள முயன்றமையு
முக்குண மாயை கடத்தலு முக்கதி தந்தளிப்பு
முக்குண மற்ற பிரான்மொழிந் தான்முடி யோன்றனக்கே.

15.16:
மூவெட் டினுமதின் மோக மடைந்த வுயிர்களினு
நாவெட் டெழுத்தொடு நல்வீடு நண்ணின நம்பரினு
மேவெட்டு வன்குண விண்ணோர் களினும் விசயனுக்குத்
தாவிட் டுலகளந் தான்றனை வேறென்று சற்றினனே.

15.17:
ஆணை மறாதவர் தேவரல் லாவழக் கோரசுரர்
கோணை மராத குணச்செல்வ நீகுறிக் கொண்மறையைப்
பேணிய தத்துவ மும்பிணி யற்ற கிரிசைகளுங்
காணித னால்விச யாவென்று கண்ண னியம்பினனே.

15.18:
மறைபொருந் தாதவை வல்லசு ரர்க்கு வகுத்தமையு
மறைபொருந் துந்நிலை யின்வன் குணப்படி மூவகையு
மறைநிலை தன்னை வகுக்குங் குறிமூன்றின் மேன்மையுமம்
மறையுமிழ்ந் தானுரைத் தான்வாச வன்றன் சிறுவனுக்கே.

15.19:
சத்துவ வீடுடை நற்கரு மந்தா னுகந்தமையுஞ்
சத்துவ முள்ளது தான்குறிக் கொள்வகை செய்ததுவுஞ்
சத்துவ நற்கிரி சைப்பய னுஞ்சர ணாகதியுஞ்
சத்துவ மேதரு வானுரைத் தான்றனிப் பார்த்தனுக்கே.

15.20:
வன்பற் றறுக்கு மருந்தென்று மாயவன் றானுரைத்த
வின்பக் கடலமு தாமென நின்றவிக் கீதைதனை
யன்பர்க் குரைப்பவர் கேட்பவ ராதரித் தோதுமவர்
துன்பக் கடலுட் டுளங்குகை நீங்கித் துலங்குவரே.

15.21:
தீதற்ற நற்குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன்
மாதுற்ற மார்வன் மருவவின் கீதையின் வண்பொருளைக்
கோதற்ற நான்மறை மௌலியி னாசிரி யன்குறித்தான்
காதற் றுணிவுடை யார்கற்கும் வண்ணங் கருத்துடனே.

ஸ்ரீ நிகமாந்தமஹாதேசிகாய நம:
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு: கருமமும், உகவை, உடலம், சங்கம்,
பிறவாமை, கண்டெளி, யோக, தானின்ற,
ஆராத, தன்மேன்மை, எல்லையில்லாத,
எல்லாந், தன்கழல், ஊனின், முக்குணமே,
மூவெட்டினும், ஆணை, மறை, சத்துவ, வன்பற்று,
தீதற்ற, அருதரும்.-

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.