|
|||||
கேரளாவில் ஒன்றாம் வகுப்பில் சேரும் வயது 6-ஆக உயர்கிறது |
|||||
2026-27 கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு.
"இதுவரை ஐந்து வயதில் குழந்தைகளை 1-ஆம் வகுப்பில் சேர்க்க முடியும் என்றும், ஆனால் ஆறு வயதுக்குப் பிறகு அவர்கள் முறையான கல்விக்குச் சிறப்பாகத் தயாராக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்றும் கேரளாவின் பொதுக் கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி கூறினார்.
“அதனால்தான் வளர்ந்த நாடுகள் பலவும் முறையான கல்விக்கான நுழைவு வயதை ஆறு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் என்று நிர்ணயித்துள்ளன” என்றும் சிவன் குட்டி கூறினார். கேரளாவில், பெற்றோர்கள் பாரம்பரியமாக ஐந்து வயதில் குழந்தைகளை 1 ஆம் வகுப்பில் சேர்க்கிறார்கள். இருப்பினும், 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இப்போது ஆறு வயதில் பள்ளியைத் தொடங்குகிறார்கள். இந்தப் போக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார் சிவன் குட்டி.
|
|||||
by hemavathi on 29 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|