LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- சிறுநீரகம் (Kidneys)

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 


இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.


கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.


எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.


இஞ்சி ஒத்தடம்:இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.


பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.உணவு முறைசிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.பொட்டாசியம், பாஸ்பரஸ்: உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.புரதங்கள் (ப்ரோடீன்): புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.நீர்: நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.சேர்த்து கொள்ள வேண்டியவைஒமம்: ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.புளி: புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.மஞ்சள்: மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.காய்கறிகள்: பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.பழங்கள்: ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்தவிர்க்க வேண்டியவைகாய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்குபழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்

தொடர்புக்கு

 Elayapari

shan1938@yahoo.com

Ph:93600 09019

curetrust@gmail.com

This is a non-profit service disseminated by Shanmugam Foundation

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்: உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்): புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்: நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்: ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி: புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்: மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்: பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்: ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி
எண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
by Swathi   on 03 Oct 2014  52 Comments
Tags: சிறுநீரக செயல் இழப்பு   சிறுநீரகம் பாதிப்பு   சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம்   சிறுநீரக நோய்களுக்கு பாட்டிவைத்தியம்   Kidney Problems   Kidney Problems Patti Vaithiyam   Siruneeragam Pathippu  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற
கருத்துகள்
17-Jan-2020 12:54:48 Sowndariya said : Report Abuse
Sir enga ammaku vayachu 43 avangalku kidney surikituchi solraga sir athanala dialysis Panna solranga dialysis pannama sidha la kunam pattutha mudiyuma sir pls sollunga sir
 
03-Aug-2019 05:35:02 Suresh said : Report Abuse
குட் மொரங் சார், என் அன்னிக்கு இரண்டு கிட்னியும் சரியா செயல்படவில்லை கிரீடிவிட்டி பாயிண்ட் 8 ஆகி விட்டது என்ன செய்வது இப்பொது ஆயுர்வேத மருந்து எடுக்கிறாள்கள் ஒவ்வொரு மாதமும் மாரி மாரி இருக்கிறது இதெற்கு தேர்வு சொல்லுங்கள் ப்ளீஸ் .
 
10-Jul-2019 12:27:58 amutha said : Report Abuse
எனது கணவருக்கு ஒரு கிட்னி செயலிழந்து விட்டது. ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்று சொல்ஹிறார்கள் இதற்க்க்கு நட்டு மருந்து பலனளிக்குமா சீக்கிரமா பதில் சொன்னீங்கன்னா நான் ஆபரேஷன் தவிர்த்து மருந்து ட்ரை பண்ணுவேன் அவர் என்ன உணவு சாப்பிடலாம் எப்படி சாப்பிடலாம் ப்ளீஸ் சொல்லுங்க 8883132142
 
11-Jun-2019 09:09:44 சித்திக் said : Report Abuse
ஐயா எனது அம்மாவுக்கு கிட்னியி பாதிக்கப்பட்டு கஷ்ட படுற, கால் கை வீக்கம் வலி நாள் கஷ்ட படுற அண்ணா செய்யலாம்
 
15-Apr-2019 05:47:34 இராஜேஷ் said : Report Abuse
எனது மகன் ஒன்பது வயது இரண்டு சீறுநீரகம் பழது அடைந்து டையாலிசிஸ் செய்ய படுகிறது குனமடைய வழி இருக்கா
 
18-Feb-2019 18:23:03 Karthi said : Report Abuse
Sir, I have pain in left kidney side while pressing previous years some times pain came but that is different backpain then next morning I drunk banana stem juice it will reduce in a day so many times I did this but this time I'm scared because it's different not that much pain but I have a dought, pls suggest me , b'coz I don't want to go to the hospital in school college time I had a bad habbit urine control.pls reply me, pls help me.
 
01-Feb-2019 11:13:31 தேவி ர said : Report Abuse
என் சன் 3 வயசு ஆகுது வாமிட் பண்ரான்னு டாகடர் கிட்ட போனேன் ஒரு கிட்டினியா விட ஒன்னு வீக்கம் இருக்குன்னு சொன்ன நான் மேடிசன் கொடுக்கணும் ப்ளீஸ் சொல்லுங்க
 
27-Jan-2019 11:44:48 Mohideen said : Report Abuse
Ennakku creatine 5.8 urea75
 
31-Oct-2018 10:05:11 suganya said : Report Abuse
அய்யா என் தாயாருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது அவரை குணப்படுத்த வலி கூறுங்கள் அவர் என்ன சாப்பிட வேண்டும் என்றும் கூறுங்கள்
 
31-Oct-2018 10:01:07 suganya said : Report Abuse
அய்யா வணக்கம் என் தாயாருக்கு கிட்னி ப்ரோப்லேம் உள்ளது சால்ட் இந்த அளவு அதிகமாக உள்ளது அவர் என்ன என்ன சாப்பிட வேண்டும் அந்த சால்ட் தன்மையை எப்படி குறைப்பது என்று டிப்ஸ் வேண்டும் அய்யா என் தாயாருக்கு இரண்டு கிட்னியும் செயலாலந்து விட்ட்து அவரை காப்பாற்ற வலி கூறுங்கள்
 
07-Aug-2018 04:16:50 ayesha said : Report Abuse
Rendu kidney lighta vali iruku.enna reasona irukum
 
01-Jul-2018 17:23:19 shafiq said : Report Abuse
enga amma ku kidney 50 percent failure creatinine 4.8 iruku urea 68 iruku sir idhuku solution solunga sir hospital dialysis pana solranga
 
14-Jun-2018 13:18:37 Divya said : Report Abuse
ஐயா வணக்கம்..கணவருக்கு.சிறுநீரகத்தில் Protein லீகாஜ் இருக்கு. 5year tablet எடுக்குறாறு இதற்கு தீர்வு ..
 
22-Feb-2018 08:25:50 Appusamy said : Report Abuse
என் தம்பி. சிறுநீரகம் செயல். இழந்துவிட்டது கிரிட்டினின். 6 பாயிண்ட். உள்ளது. டயாலிஸ். செய்கிறோம் சரி செய்ய வழி கூறூவம்
 
26-Jan-2018 04:42:20 செந்தில் குமார் said : Report Abuse
எங்க அப்பாக்கு கிட்னி பெய்லியர்னு சொல்லிட்டாங்க.கிரியேட்டின் அளவு அதிகம் ஆய்ட்டே போகுது.இவருக்கு இரத்தத்துல உப்பு அதிகம் ஆய்ருச்சி.டையாலிசிஸ் தா பன்னனும்னு சொல்ராங்க...என்ன பன்றது..என்ன வழி னு சொல்லுங்க..நாங்கலும் சேலம் கோயம்புத்தூர்னு எல்லா மருத்துவமனைலயும் பார்த்துட்டோம்.தயவு செய்து உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவ முறை எதாது இருந்தால் சொல்லுங்கள். நன்றி... இப்படிக்கு மதி
 
03-Jan-2018 16:06:40 ஷாஹுல் said : Report Abuse
சார் எனக்கு சிறுநீர் வருகிற மாதிரி உணர்வு இருக்கு அதற்கு என்ன பண்ணலாம், ஆற்றல் மீறி வருகிற உணர்வு இருக்கு. சிலசமயம் வந்து விட்டது. அதற்கு எதாவது பயிற்சி இருக்க?
 
17-Sep-2017 14:25:59 Murugavel said : Report Abuse
வணக்கம் ஐயா. எனது நண்பருக்கு கிரேட்டின் அளவு 9 உள்ளது அதை சரி செய்ய முடியுமா?10 நாட்களுக்கு முன் தான் தெரிய வந்தது. நன்றி
 
14-Aug-2017 22:18:51 sangeetha said : Report Abuse
கிட்சனி பேஷண்ட் காஜிஹ் என்ன செய்யலாம்
 
12-Aug-2017 08:57:38 A.ramesh said : Report Abuse
Iyya enathu appakku intha prachanai irukkirathu hospitala maruthuvam pannitu irukkom thanala kekkaran iyya mathirai marunthu sapitum poluthu ithai seyyalama
 
16-Jul-2017 11:07:42 கருப்புசாமி said : Report Abuse
சார் என்னுடைய Kidney சுசுருங்கி விட்டது Right 79 lift 74 ப்ளீஸ் save to my லைப்
 
13-Jul-2017 14:24:38 kanimozhi said : Report Abuse
ஐயா என்னோட அப்பாவுக்கு ரெண்டு கிட்னியும் failurenu டாக்டர் சொல்லிட்டாங்க.. இப்ப அவருக்கு டியாலிசிஸ் ஒரு வாரமா பண்ணிட்டு இருக்கோம்..... டாக்டர் கிட்னி ட்ரான்ஸ்பிளண்டஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க... அவருக்கு முழுவதுமா குணமடைய ஏதாச்சும் ஒரு வழி சொல்லுங்க ஐயா.... அப்பாக்கு 48 வயது ஆகுது.....
 
24-Jun-2017 16:34:19 priyanka said : Report Abuse
சார் என் அப்பாவிற்கு ஆறு மாத காலமாக சிறுநீரகம் ஒன்று சுருங்கி உள்ளது மற்றொன்று செயலிழந்து விட்டது .கிரியாட்டினின் அளவு 6லிருந்து 18ஆக தற்போது உயர்ந்துள்ளது.அப்பா தற்போது டையாலிசிஸ் செய்து வருகிறார்.தயவு செய்து ஒரு நல்ல ஆலோசனை தருமாறு நம்பிக்கையுடன் கேட்டு கொள்கிறேன். தொடர்புக்கு:8508430928
 
03-Apr-2017 07:42:17 suburaj said : Report Abuse
எனது கிட்னி சுருக்கத்தின் காரணம் என்ன.9842909611 ±974 74724241
 
29-Mar-2017 02:15:56 C.Arumugam said : Report Abuse
என் உடைய சகோதரி டிஆலோசிஸ் கிரீடின்யா அலவ 4.௧ ஏஜ் 60 செல் நோ : 9626248181
 
24-Feb-2017 12:51:43 fyfa said : Report Abuse
சார் என்னக்கு அடிக்கடி சிறுநீர் போக தோணுது அப்படியே சிறுநீர் போனாலும் அவ்வளவு எளிதில் சிறுநீர் வருவதில்லை ஐந்து முதல் பத்து நொடிகள் கழித்து தான் வருகிறது அப்படி வந்தாலும் இடையில் நின்று நின்று வருகிறது சில சமயங்களில் முக்கினாள் தான் வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் எல்லாரையும் மாதிரி சிறுநீர் கழிக்க முடியவில்லை அருகில் யார் இருந்தாலும் சிறுநீர் வருவதில்லை யாரும் இல்லாத இடத்தில் தனிமையில் இருந்தால் தான் வருகிறது .இதுநாள் சிறுநீரை அடிக்கடி அடக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் சார் .....
 
02-Feb-2017 07:55:43 sam said : Report Abuse
super
 
11-Nov-2016 09:44:01 akshaya said : Report Abuse
vanakam iya , ennoda ammavuku kidney rendume infection irukunu sonnanga doctor atha sari panni kuttidu veedu vandhutom but two times ithu mathiri nadanthu iruku six monthukula illana three monthukula avangaluku marupadium valikuthu solluranga ippo oru one weeka stomach pain na iruku solluranga scan eduthu pathathula kidney veekama irukunu solluranga DR pl sir antha vali varama iruka veedu vaithiyam ethavathu iruntha sollunga sir amma age 55 ithuku oru vazhi nenga than sollanum avanga vairu valiyala kashda padum pothu ennaku romba kavaliya iruku iyya
 
01-Nov-2016 22:55:47 க ராபர்ட் said : Report Abuse
ஐயா எனக்கு சிறு நீர் அடிக்கடி வருதுங்க ஐயா அதுவும் கொஞ்சம் தாங்க ஐயா வருது தூங்கவே முடியல ஐயா அதுவும் உடனடியா வரமாட்டுது ரோம்ப நேரம் முக்க வேண்டியதா இருக்குங்க அப்போ தாங்க வருது சில நேரம் வைத்துள்ள கைய வச்சி அழுத்தினா தாங்க வருது இதுக்கு ஏதாச்சும் ஒரு வழி சொல்லுங்க ஐயா
 
01-Nov-2016 08:41:36 sudha said : Report Abuse
ஐயா .என்னுடன் வேலை செய்யும் அக்கா ஒருவருக்கு ஒரு கிட்னி செயல்படாமல் இருந்து operation செய்து 4 அல்லது 6 மாதம் இருக்கும்.இப்பொழுது அவர்களுக்கு stomac pain இருக்கு சிறுநீர் போகும்போதும் வலி மற்றும் எரிச்சல் இருக்கிறதென்று மேகயும் கஷ்டப்படுகிறார்.இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் ஐயா .
 
01-Nov-2016 08:20:42 sudha said : Report Abuse
 
21-Oct-2016 14:35:17 Nithu said : Report Abuse
My sis has been suffered by kidney failure its crossed in 2nd stage. How it could be stopped by this disease. is have any way. pls suggest.
 
16-Oct-2016 23:32:12 Subha said : Report Abuse
என் அம்மா கு கிட்னி சுருக்கம் 6 இடதில் இருகிறது. என பண்ணனும் சொல்லுக ப்ளீஸ்
 
13-Oct-2016 11:05:52 ஜெயக்குமார் said : Report Abuse
அய்யா , என் வயது 66 வ ; ஆண்..எனக்கு 3-4 மாதங்களாக சிறுநீர் துர்நாற்றமாக இருக்கிறது .நிறமும் வேறு பட்டுள்ளது என்ன காரணம்
 
08-Oct-2016 07:25:20 aasiya said : Report Abuse
Sir என் husbanduku கிரேட்டின் 2.3 இருக்கு யூரிக் ஆசிட் லெவல் 6.3 இதை கிட்னி டிசீஸ் சொல்றாங்க இதை குணமாக்க mmudiyuma முடியும் என்றல் அதற்கான பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்
 
15-Sep-2016 08:38:02 muthukumar said : Report Abuse
வணக்கம் சார் எனது அம்மாவுக்கு 2year கிரீட்டின் அளவு 1.7 urea40 illana45 இந்த மஹாதிரி நிலையில இருக்கு age 61 கிட்நீ அளவு வலது 8.2 *7.9 இந்த அளவுல அம்மாவுக்கு சாப்பாடுல உப்பு செக்கிறது இல்ல லோக்கல் ஹாஸ்பிடல் பாக்குறோம் அப்படி இருந்தும் அம்மா சப்புடா முடியல எங்களுக்கு பயமா இருக்கு.எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார் pls
 
07-Aug-2016 17:55:53 மு.ரவி பூஷணம் said : Report Abuse
ஐயா , எனது தந்தைக்கு வயது 78 ஆகிறது அவருக்கு 4.1 கிரீட்டின் அளவு உள்ளது அவருக்கு ஹை ப்ரெசுரே இருந்தது இப்பொழுது கட்டுப்பாட்டில் இருக்கிறது அவர் ஆங்கில மருந்து எடுத்து வருகிறார் அவருக்கு உங்களால் உதைவி செய்ய வேண்டும் என்று பணிவாக கேட்டு கொள்கிறேன் மொபைல் நம்பர் :9840188512
 
14-Jul-2016 23:13:52 NAGARAJ said : Report Abuse
எனக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது எனது மனைவிக்கு வயது 23 சிறுநீரக குறைவாக செயல்படுகிறது கிரீட்டின் 2.3 yuரிய 53 சரியாகும் வாய்ப்புகள் உள்ளதா அப்படி இருந்தால் எப்படி சரிசெய்வது எனது போனே நம்பர் 9952527533
 
22-Jun-2016 17:37:23 m ulaganathan said : Report Abuse
sir எனக்கு மூன்று வருடமாக சிறுநீரக பிரச்சனை இருக்கு . கிரடீனின் 4.5 அளவு இருக்கு , யூரியா 72 இருக்கு , எனக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் . எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் .வயது 3 தன் ஆகுது . எனது தொலைபேசி என் 9500063761 , 9841328369.
 
27-May-2016 10:00:21 அணில் KUMAR said : Report Abuse
ஹொவ் மனி டைம்ஸ் வி ஷௌல்து டூ திஸ் பேர் வீக்? நொவ் creatian லெவல் இச் 4.1 நொவ் வர் ஆர் தோஇங் டியாளிசிசெஸ் வீக்லி த்ரீ times. பெபிபூர் டியாளிசெசெஸ் இட் வாஸ் 7.1
 
12-May-2016 02:00:40 dharmalingam said : Report Abuse
KEDNEY FAILUR TREATMENT IN GINGER THERAPHY IS A USEFUL TREATMENT.
 
12-Feb-2016 11:43:30 Suppaiya L&T said : Thank you
Enakku siruneer varum pothu siruneerga ooruppil rombaa pain aakuthu athu ethenaale appadi pain aakuthu pls sollunga
 
21-Jan-2016 21:18:25 Mithra said : Thank you
My father is a diabetic patient. Now blood urea is 60 mg%and serum creatinine level is 1.9mg%.. So I want to know How to recover from these problems.. Tel me a solution by natural way. Reply pls
 
24-Jul-2015 22:22:15 gayathri jayagopi said : Report Abuse
sir nan 6 Martha karbini .en kuzhanthaiku oru side pelvic kidney inoru pakam mcdk kidney irupathaga scan moolamaga theriyavanthulathu.ithai iyarkai marunthu moolam sari seiyalama?enaku ethavathu theervu sollunga doctor plz .jayagopibap@gmail.com endra mail I'd Ku pathil alikavum plz..... doctor
 
16-Jun-2015 05:06:11 வளர்மதி said : Report Abuse
எனது அப்பாவுக்கு 3 வருடங்களாக கிட்னி பெயில் ஆகிவிட்டது அதனால் அவருடைய CRIEATIVITY 6 பாயிண்ட் அதிகரித்துஉள்ளத்தால் அதை குறைத்து மறுபடியும் என் அப்பாவுடைய கிட்னி நார்மலாக செயல் பட தயவு செய்து தங்களுடைய மருத்துவ அல்லோசனை எங்களுக்கு கூறுமாறு கேட்டு கொள்கிறேன்
 
27-Apr-2015 23:19:48 dinakaran said : Report Abuse
Dear sir my father was kidney failure . Doctor told him to dialysis but after the consult of sidda the creatine reduced from 11 to 7 . Give your advice
 
24-Apr-2015 23:39:03 சரவணன் (Mobile:9443310909) said : Report Abuse
ஐயா, என்னக்கு சிறுநீர் வரும் வேகம் குறைவாக உள்ளது அதற்க்கு ஆங்கில மருத்துவத்தில் "Alfoo" என்கிற மாத்திரை தினம் 1 ஐ சாப்பிடுகிறேன் இதற்க்கு தகுந்த தங்களின் மேலான ஆலோசனை தாருங்கள். நன்றி.
 
11-Apr-2015 08:47:41 rasa said : Thank you
எனது 2 kidney failure creating 8.1 என்ன seiya முடியும் சார் ? எனக்கு வாடி 30 தன் எனது கிகிட்னி மறுபடியும் வேல seiseiya என்ன seiyalam
 
03-Apr-2015 05:38:02 M.Haribabu said : Report Abuse
very use message.my father attack kiddny deasse.how treat ment your clinc
 
24-Mar-2015 06:38:44 paramagurunathan said : Report Abuse
ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத சிறுநீரக பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கொடுத்தமைக்கு நன்றி நான் ஆறு ஆண்டுகாலமாக சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன் எனது சிறுநீரகம் இரண்டும் வயத சதவீதம் செயல்படுவதாகவும் உணவு கட்டுபாடு மற்றும் மருத்துவ ஆலோசனை மூலம் வாழ்ந்துவருகிறேன் மேலும் சித்தமருத்துவரின் ஆலோசனைப்படி மூக்கிரட்டை கீரை மற்றும் துத்திவேர்கசாயம் மேலும் சித்தா மாத்திரைகள் எடுத்துவருகிறேன் எனக்கு வயது எனது43 .எனது சிறுநீரகங்கள் பூரணகுணமடைய தங்களின் ஆலோசனை தேவை .செல்.நொ9788738055
 
14-Mar-2015 00:26:19 ஜகதேஷ்_789@யாஹூ.கோ.in said : Report Abuse
இ திட் நாட் நோ தமிழ் பட் மி மதர் ஹவெ ப்ரொப்லெம் கிட்னி டிசெஅச் கேன் யு செண்ட் கின்கேர் தெரபி புல் தேட்டில் இன் இங்கிலீஷ் ஓர் கன்னட மி மொபைல் நோ. 7795780759 மி ஈமெயில் ஈத் ஜகதேஷ்_789@யாஹூ.கோ.in
 
30-Jan-2015 23:02:55 suhaib said : Report Abuse
நன்றி ஐயா அறுமை
 
24-Dec-2014 22:29:20 Nizam said : Report Abuse
Mihavum arumayana thahaval.ippzhudhulla paraparappana soolalil adhihamana makkal idhupondra iyarkai maruthuva muraihalai kadaipidippadhillai enbadhe unmai. Irundhalum pakkavilaivuhai illadha elimayana maruthuvamuraihal patri makkalidam vizhippunarvu erpaduthavendum. Nandri. saho_ PARI
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.