LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஒட்டக் கூத்தர் நூல்கள்

குலோத்துங்க சோழன் உலா - மூவருலா-1

 

நூல்
தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் 1
மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர
உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற் 2
பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத் 3
துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர்
எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் 4
அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்
ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை 5
எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப
வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் 6
போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்
மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் 7
வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள
மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப் 8
பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்
டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி 9
மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்
தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா 10
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்
கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் 11
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க 12
வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய 13
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் 14
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு
மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத் 15
தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த
வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக் 16
கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத்
துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு 17
மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள் 18
பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு
மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு 19
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச் 20
சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்
ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப் 21
பிரம வரக்க னகலம் பிளந்து
பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் 22
தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்
ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் 23
ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை
நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக் 24
கங்கா நதியுங் கடாரமுங் கைவரச்
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் 25
புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர் 26
போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்
ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார் 27
விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் 28
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்
முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை 29
இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில்
வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை 30
மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்
காதற் பெயரன் கனகளபன் - யாதினும் 31
தீட்டக் கரிய திருவே திருமாலை
சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு 32
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு 33
மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்
பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் 34
தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத
போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில் 35
ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்
தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க 36
புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும்
அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் 37
தில்லையிற் செய்த திருப்பணிகள்
ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக்
கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற் 38
றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் 39
றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல்
அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன் 40
அலகை யிகந்த அசலகுல வச்ரப்
பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக் 41
காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை
தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் 42
தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்
டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய 43
தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த
பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய 44
பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால்
திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க 45
நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த
கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான் 46
ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர
மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப் 47
பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய
வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள் 48
நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க
மலையேழு மென்ன வகுத்துத் - தலையில் 49
மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச்
சிகரங்க ளாகித் திகழ - நிகரில் 50
எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்
விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற் 51
கடாரப் பனிநீர் கவினிக் கனபொற்
றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் 52
றற்பக லாக வனந்த சதகோடி
கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண் 53
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
சுரமகளி ராகித் துறும - ஒருதான் 54
பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம்
மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும் 55
இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்
திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர் 56
புனையா மணியாலும் பொன்னாலு மின்ன
மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் 57
திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப்
பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 58
பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்
கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் 59
புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம்
பவனி யெழுச்சி பணித்துக் -கவினும் 60
மடமயி லொக்க மகுடங் கவித்தாள்
உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் 61
அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென
மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 62
வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத்
தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் 63
கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை
வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும் 64
உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத்
திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப் 65
பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்
கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர 66
வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத்
திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற் 67
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்
பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல் 68
வந்த வனச மகளேபோன் மற்றது
தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச் 69
சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த
உரக பணாமணி யொப்ப - விரவி 70
மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச்
சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில் 71
முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில்
வடியு நிலவு மலையப் - படியில் 72
வயங்கு கடக மகுடாதி மின்னத்
தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய 73
செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம்
வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 74
நாவியு மான்மதச் சாந்து நறையகில்
ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய 75
தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக்
கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை 76
வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப்
போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் 77
மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்
வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட் 78
கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்
வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா 79
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய் 80
அபயங் கொடுக்கு மயிரா பதத்தை
உபய வயக்கோட் டுருமை - விபவ 81
நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற்
றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க 82
பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க
வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய 83
ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு
மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக் 84
கவரி யிரட்டக் கடவுண் முரசார்த்
துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் .85
சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும்
எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து 86
விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப்
பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின் 87
மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச்
சிலையான் வரவு தெரியத் - தொலையாது 88
வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால்
வாசவன் வந்த வரவறியக் - கூசாதே 89
யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள
தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் 90
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்
தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப் 91
பரவி யுலகிற் பலமண்ட லீகர்
புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் 92
விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம்
எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி 93
இரவிக்கு நிற்பன வேழு மொழியப்
புரவிக் குலமுழுதும் போத - விரவி 94
உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய
அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 95
எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்
விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய 96
விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்
மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய 97
மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்
பூகத ராயினார் போற்பரவ - நாகர் 98
கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத்
தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள 99
கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து
மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 100
சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் 101
தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்
நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் 102
மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்
சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும் 103
இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத்
திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட 104
கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்
பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு 105
நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன்
இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் 106
மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக்
காகாள மென்னும் படிகலிப்பப் - போகத் 107
தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்
மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் 108
சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர்
சேனா பராக மெனத்திகழப் - பூநாறும் 109
கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்
வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் 110
இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்
மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 111
முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் 112
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்
எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் 113
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய 114
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை 115
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை
இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் 116
சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் 117
துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்
நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே 118
வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக்
கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி 119
முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்
பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் 120
பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி
தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் 121
உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி
வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் 122
பேதை
இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்
புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர் 123
ஆடாத தோகை யலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் 124
தளிராத சூதந் தழையாத வஞ்சி
குளிராத திங்கட் குழவி - அளிகள் 125
இயங்காத தண்கா விறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க் 126
கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம்
ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும் 127
நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே
முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம் 128
தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை
மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார் 129
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் 130
மன்னன் புனையுந் திருமுத்த மாலையை
அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் 131
கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும்
பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை 132
அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை
மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி 133
தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை
மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப் 134
பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய
பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத் 135
தற்புத வல்லி யவளே பிறந்துடைய
கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர் 136
பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க
வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி 137
போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய
பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன் 138
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய
பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 139
இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்
அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 140
முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்
கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் 141
சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற
கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து 142
விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம்
கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா 143
வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்
றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை 144
கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச்
சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி 145
இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன
மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் 146
பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக்
கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் 147
சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே
வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக் 148
கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர்
ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய் 149
காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ
ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய 150
பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த
மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந் 151
தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ
காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் 152
செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ
பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் 153
கூறு மவையிவை யென்று குறுந்தொடி
வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் 154
ஒருத னடியின் மடிய வுபய
மருது பொருது வயவன் - விருதன் 155
விலையி லமுத மதன விமலை
முலையின் முழுகு முருகன் - வலைய 156
கனக சயில வெயிலி கணவன்
அனக னதுல னமலன் - தினகரன் 157
வாசவன் றென்னன் வருண னளநேசன்
கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 158
ஆழிப் பெருமா னபய னனபாயன்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது 159
சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து
நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் 160
கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி
ஓடு நகாதே யுடையாதே - பீடுற 161
வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை
நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த் 162
தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று
மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் 163
சூதள வல்ல துணைமுலை தூயகண் 
காதள வல்ல கடந்தனபோய் - மாதர் 164
உருவத் தளவன் றொளியோக்க மாக்கம்
பருவத் தளவன்று பாவம் - தெருவத் 165
துடைவ துடையாதா முள்ள முறவோர்ந்
தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து 166
சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்
தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும் 167
ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன்
காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந் 168
தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன்
காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் 169
எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ
கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் 170
மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்
செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் 171
வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக்
கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை 172
ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்
வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் 173
நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்
புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய 174
பல்லிய மன்று பரராச கேசரி
வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய 175
கல்லார மன்று கதிரோன் றிருமருமான்
மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 176
அருத்தி யறிவா ரவையிவை யென்று
திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி 177

நூல்

தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் 1
மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீரஉருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற் 2
பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத் 3
துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர்எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் 4
அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை 5
எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்பவழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் 6
போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் 7
வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாளமந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப் 8
பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி 9
மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா 10
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக்கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் 11
பதுமக் கடவுள் படைப்படையக் காத்தமுதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க 12
வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டுதூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய 13
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்துமேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் 14
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்குமலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத் 15
தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்தவில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக் 16
கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத்துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு 17
மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள்கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள் 18
பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டுமணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு 19
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டுகொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச் 20
சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப் 21
பிரம வரக்க னகலம் பிளந்துபரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் 22
தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும்ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் 23
ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகைநூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக் 24
கங்கா நதியுங் கடாரமுங் கைவரச்சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் 25
புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர் 26
போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார் 27
விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப்பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் 28
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை 29
இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில்வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை 30
மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்காதற் பெயரன் கனகளபன் - யாதினும் 31
தீட்டக் கரிய திருவே திருமாலைசூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு 32
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு 33
மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் 34
தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாதபோதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில் 35
ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க 36
புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும்அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் 37

தில்லையிற் செய்த திருப்பணிகள்
ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக்கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற் 38
றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் 39
றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல்அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன் 40
அலகை யிகந்த அசலகுல வச்ரப்பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக் 41
காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கைதூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் 42
தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய 43
தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்தபாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய 44
பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால்திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க 45
நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்தகோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான் 46
ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுரமாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப் 47
பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போயவலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள் 48
நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்கமலையேழு மென்ன வகுத்துத் - தலையில் 49
மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச்சிகரங்க ளாகித் திகழ - நிகரில் 50
எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற் 51
கடாரப் பனிநீர் கவினிக் கனபொற்றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் 52
றற்பக லாக வனந்த சதகோடிகற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண் 53
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்தசுரமகளி ராகித் துறும - ஒருதான் 54
பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம்மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும் 55
இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர் 56
புனையா மணியாலும் பொன்னாலு மின்னமனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் 57
திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப்பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 58
பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் 59
புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம்பவனி யெழுச்சி பணித்துக் -கவினும் 60
மடமயி லொக்க மகுடங் கவித்தாள்உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் 61
அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதெனமஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 62
வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத்தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் 63
கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியைவளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும் 64
உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத்திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப் 65
பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர 66
வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத்திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற் 67
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல் 68
வந்த வனச மகளேபோன் மற்றதுதந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச் 69
சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்தஉரக பணாமணி யொப்ப - விரவி 70
மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச்சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில் 71
முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில்வடியு நிலவு மலையப் - படியில் 72
வயங்கு கடக மகுடாதி மின்னத்தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய 73
செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம்வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 74
நாவியு மான்மதச் சாந்து நறையகில்ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய 75
தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக்கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை 76
வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப்போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் 77
மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட் 78
கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா 79
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய் 80
அபயங் கொடுக்கு மயிரா பதத்தைஉபய வயக்கோட் டுருமை - விபவ 81
நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற்றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க 82
பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்கவெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய 83
ஒற்றை வலம்புரி யூத வதன்பின்புமற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக் 84
கவரி யிரட்டக் கடவுண் முரசார்த்துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் .85
சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும்எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து 86
விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப்பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின் 87
மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச்சிலையான் வரவு தெரியத் - தொலையாது 88
வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால்வாசவன் வந்த வரவறியக் - கூசாதே 89
யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ளதேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் 90
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப் 91
பரவி யுலகிற் பலமண்ட லீகர்புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் 92
விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம்எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி 93
இரவிக்கு நிற்பன வேழு மொழியப்புரவிக் குலமுழுதும் போத - விரவி 94
உடைய நிதிக் கடவு ளூர்தி யொழியஅடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 95
எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய 96
விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய 97
மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர்பூகத ராயினார் போற்பரவ - நாகர் 98
கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத்தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள 99
கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்துமைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 100
சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் 101
தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் 102
மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும் 103
இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத்திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட 104
கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு 105
நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன்இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் 106
மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக்காகாள மென்னும் படிகலிப்பப் - போகத் 107
தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் 108
சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர்சேனா பராக மெனத்திகழப் - பூநாறும் 109
கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் 110
இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 111
முதுகுல மன்னர் முடிவணங்க வந்தவிதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் 112
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் 113
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய 114
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை 115
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லைஇறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் 116
சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்துநின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் 117
துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே 118
வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக்கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி 119
முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் 120
பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழிதூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் 121
உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடிவளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் 122

பேதை
இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர் 123
ஆடாத தோகை யலராத புண்டரிகம்பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் 124
தளிராத சூதந் தழையாத வஞ்சிகுளிராத திங்கட் குழவி - அளிகள் 125
இயங்காத தண்கா விறக்காத தேறல்வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க் 126
கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம்ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும் 127
நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கேமுலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம் 128
தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனைமிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார் 129
வணங்க வணங்கி வழுத்த வழுத்திஅணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் 130
மன்னன் புனையுந் திருமுத்த மாலையைஅன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் 131
கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும்பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை 132
அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தைமயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி 133
தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையைமான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப் 134
பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடையபூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத் 135
தற்புத வல்லி யவளே பிறந்துடையகற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர் 136
பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்கவலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி 137
போரார வாரப் பொலன்கொடி பெற்றுடையபேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன் 138
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாயபூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 139
இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 140
முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் 141
சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்றகோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து 142
விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம்கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா 143
வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை 144
கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச்சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி 145
இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்னமதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் 146
பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக்கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் 147
சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றேவல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக் 148
கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர்ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய் 149
காக்குங் கடலேழு மாடுங் கடாரமோஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய 150
பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்தமண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந் 151
தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோகாவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் 152
செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோபெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் 153
கூறு மவையிவை யென்று குறுந்தொடிவேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் 154
ஒருத னடியின் மடிய வுபயமருது பொருது வயவன் - விருதன் 155
விலையி லமுத மதன விமலைமுலையின் முழுகு முருகன் - வலைய 156
கனக சயில வெயிலி கணவன்அனக னதுல னமலன் - தினகரன் 157
வாசவன் றென்னன் வருண னளநேசன்கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 158
ஆழிப் பெருமா னபய னனபாயன்சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது 159
சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்துநின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் 160
கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதிஓடு நகாதே யுடையாதே - பீடுற 161
வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றைநொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த் 162
தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்றுமன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் 163
சூதள வல்ல துணைமுலை தூயகண் காதள வல்ல கடந்தனபோய் - மாதர் 164
உருவத் தளவன் றொளியோக்க மாக்கம்பருவத் தளவன்று பாவம் - தெருவத் 165
துடைவ துடையாதா முள்ள முறவோர்ந்தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து 166
சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும் 167
ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன்காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந் 168
தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன்காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் 169
எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோகொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் 170
மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் 171
வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக்கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை 172
ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் 173
நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய 174
பல்லிய மன்று பரராச கேசரிவல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய 175
கல்லார மன்று கதிரோன் றிருமருமான்மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 176
அருத்தி யறிவா ரவையிவை யென்றுதிருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி 177

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.