LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஒட்டக் கூத்தர் நூல்கள்

குலோத்துங்க சோழன் உலா - மூவருலா-2

 

மங்கை
உருவ வரிக்க ணொழுக வொழுகப்
புருவ முடன்போதப் போத - வெருவி 178
வனமுலை விம்மி வளர வளரப்
புனைதோள் புடைபோதப் போத - வினைவர் 179
அருங்கலை யல்கு லகல வகல
மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 180
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
வரவர வாற்றாத மங்கை - பொரவரு 181
தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி
தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் 182
அமுத மதியத் தலர்நிலா முற்றும்
குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 183
கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள
வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் 184
தண்டா மரையா டலைவனை யாமும்போய்
கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 185
ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்
தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் 186
வாவிக் கரையில் வரநீ ரரமகளிர்
சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 187
புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத்
தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே 188
னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா
வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய 189
முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங்
கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய 190
பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்
கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் 191
உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்
வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 192
மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்
கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர் 193
நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க
நீலமே யன்றி நினையாதாள் - நீலமே 194
முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்
தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர் 195
நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்
ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே 196
இறங்கிய கற்பக வல்லியு மேறி
உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க 197
வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்
டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் 198
கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு
ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் 199
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் 200
வௌியே தருவேன் விரையாரத் தொங்கல்
கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ 201
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்
போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே 202
எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ
உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் 203
சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்
சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் 204
கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின்
மடமானே தானே வருங்காண் - கடிதென்று 205
கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன்
பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள 206
அலகில் குலநீல ரத்னா பரணம்
விலகி வெயிலை விலக்க - உலகிற் 207
பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி
இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208
ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்
நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் 209
மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே
மின்னனை யாளையு மீதூரா -முன்னர் 210
கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும்
இடமாதும் யாமென்பார் போலப் - படமாய் 211
இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம்
நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் 212
முலையாய் வளரு முரட்குவடு கொண்டு
மலையாய் நெருங்க வருவார் - தொலையாத 213
பாய பருமுத்தின் மாலை பலதூக்கித்
தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற் 214
கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும்
பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 215
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்
தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத் 216
தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும்
பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் 217
நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்
பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள் 218
தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா
நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் 219
இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்
நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று 220
மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத்
தானூங் களிறுந் தடையுண்ட - கோனும் 221
தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை
அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த 222
திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்
ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை 223
எய்தி யனங்க னெழப்போனான் மாதரும்
உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற் 224
றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ
தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் 225
துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம்
புகிலும் புகாமே பொராமே - அகினாறும் 226
பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய்
வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை 227
மடந்தை
பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர்
முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் 228
வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து
கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந் 229
தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும்
தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் 230
கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற
வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் 231
எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட
கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் 232
அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து
கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் 233
ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப்
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் 234
சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும்
உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும் 235
கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும்
அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி 236
அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை
மறுகு திருமலர வந்தான் - குறுகும் 237
முறுகு கதிரின் முகந்திரிய வேற்று
மறுகு திருமலர வந்தான் - குறுகும் 238
நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட்
குடையாய வெள்ளமுங் கூடி - அடைய 239
மதியுதய மென்று வணங்க வனச
பதியுதய மென்று பணிய - துதியில் 240
ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும்
இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில் 241
நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து
மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய 242
பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற்
போய மருங்குற் புறநோக்கார் -சாயா 243
முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்
நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால் 244
உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின்
கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும் 245
பருவக் கொடிவதன பங்கே ருகத்தின்
புருவக் கொடி முடியப் போகா - உருவக் 246
களிக்கும் புடவி சதகோடி கற்பம்
அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் 247
கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக்
கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா 248
முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற்
புகுந்த திதுவென்று போனான் - திகந்த 249
முழுதா ளபயனை முகிணகையுந் தோளும்
தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் 250
திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும்
சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் 251
முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்
கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே 252
ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத்
தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம் 253
கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை
தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து 254
துளவ முகிற்கிது வந்தது தூய
வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த 255
வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல்
புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் 256
இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக்
கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின் 257
வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை
மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும் 258
பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே
திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக் 259
செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன
பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே 260
தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும்
பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் 261
பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய்
மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262
அரிவை
தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத்
தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை 263
வளவர் பெருமான் வரும்பவனி யென்று
கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத் 264
தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன்
பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா 265
என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும்
நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் 266
அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம்
எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன் 267
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த
காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன் 268
சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று
காமித் திகழின் கடைதிறப்ப - நேமி 269
மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித்
தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் 270
வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில்
இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக் 271
கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம்
நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக் 272
களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும்
கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப் 273
பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை
பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை 274
அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத
விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப் 275
பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி
எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர் 276
தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில்
தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் 277
போல விழுந்து மெழுந்தும் புடையாயம்
கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் 278
எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக்
கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும் 279
மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து
வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் 280
வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல்
எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து 281
வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்
சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய 282
பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த
செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் 283
புறவுஞ் சகோரமும் பூவையு மானும்
பிறவு மினமென்று பெட்ப - உறவாய் 284
அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம்
தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் 285
மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு
மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே 286
அலகு முகமுங் குவிகையு மாகி
மலரு முகளமுமானப் - பலர்காணத் 287
தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி
மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் 288
தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி
விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் 289
ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து
நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் 290
சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம்
நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் 291
அரிவை துகினெகிழ வல்கு லரவின்
உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் 292
மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப்
பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும் 293
ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல்
மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய 294
வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை
ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த 295
பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும்
ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் 296
அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள்
இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற் 297
பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர்
பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப் 298
பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்
கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை 299
என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை
தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப் 300
தெரிவை
பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்
இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப் 301
போதும் பெருமாள் புகுது மளவுமிங்
கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் 302
பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று
வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் 303
கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே
அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே 304
கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்
கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி 305
எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்
கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து 306
முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்
கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் 307
அடியு மிருகையு மம்புய மென்று
படியு மொழுங்கிற் பயில -முடியும் 308
தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க்
கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய 309
விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்
எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால் 310
ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை
ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும் 311
கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை
ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ 312
திலக நுதலிற் றிருவேயென் றோதி
உலகு வியப்பவென் றோத - அலகிறந்த 313
பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட
வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை 314
பெருமா னனபாயன் பேரிய மூன்றும் 
தருமா வாரந் தழந்த - ஒருமாதர் 315
ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் 316
தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப்
போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச் 317
சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்
பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர் 318
ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத் 319
தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்
இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் 320
உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு
பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம் 321
அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை
விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க் 322
கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி
ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் 323
இழியு மொருசாம ரேகையு முந்திச்
சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய 324
இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்
திசையின் புடையடையச் செல்ல - மிசையே 325
பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ
சுறையு மரகத மொப்ப - அறையும் 326
சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்
உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல 327
தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று
பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே 328
ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்
தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் 329
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய
வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி 330
இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க
ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் 331
மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு
சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் 332
ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக்
கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள 333
நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்
வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி 334
முருகு கமழ முகந்து முகந்து
பருகு மடமகளைப் பாரா - அருகு 335
மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் 336
நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்
நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத 337
தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்
துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப் 338
பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்
கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி 339
அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று
தௌிப்பச் சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி 340
பேரிளம்பெண்
மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே
செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் 341
தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை
மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு 342
மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்
தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண் 343
டேந்தி முகம னியம்பி யிருந்தொரு
காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி 344
குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும்
விதலை யுலகில் விளைத்து - நுதலை 345
வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை
அயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா 346
அருகிருந்த பாணனை நோக்க அவனும்
குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக் 347
காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும்
கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன் 348
குரகத மேழு முழுகிக் குளிப்ப
மரகத சோதி வயங்கப் - புருவ 349
இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப்
புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக 350
ஏக முருக்கு மலர விளம்பாளைப்
பூக மிடறு வரப்பொதிய - போகப் 351
பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்
பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய 352
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்
குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து 353
சலித்துத் தனியிள வஞ்சி தளரக்
கலித்துக் கதலி கவின - ஒலித்தே 354
அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்
களிக்கு மயூர கணமும் - விளிக்கும் 355
புறவுந் தொடர்ந்துடனே போத வவையே
பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் 356
காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்
சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் 357
தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக்
கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல் 358
வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்
பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் 359
செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய
பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் 360
உய்ய விருகாது மூக்கு முடுபதியை
நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய 361
பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்
கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக் 362
சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப்
பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின் 363
சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்
அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் 364
ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்
வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி 365
முடைதழுவு தோளும் முலையுந் தழுவ
விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக் 366
கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை
மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் 367
ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்
கால வுததி கலக்கவும் - சால 368
வருந்தா வகைவருந்த வாழி பெயரும்
பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய 369
குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால்
வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக் 370
கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த
ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய 371
சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய
மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் 372
முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி 373
மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர் 374
தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்
றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த் 375
தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்
எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் 376
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக் 377
காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்
வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் 378
வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த
மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் 379
சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்
சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ் 380
அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப
வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா 381
உடல்பிள வோட வொருதேரிடட் டூரும்
அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் 382
அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்
இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல 383
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் 384
எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று
மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே 385
தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா
மையலார் போலராய் மன்றேற - வையம் 386
பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்
ஒருகுடையான் போந்த னுலா. 387
வெண்பா
என்றினி மீள்வ தரிதி னிரணியனை
அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே 
ஆவின்பின் போன வனக னனபாயன்
மாவின்பின் போன மனம்
கட்டளைக் கலித்துறை
ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்
பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே. 2
குலோத்துங்க சோழன் உலா முற்றிற்று.

மங்கை
உருவ வரிக்க ணொழுக வொழுகப்புருவ முடன்போதப் போத - வெருவி 178
வனமுலை விம்மி வளர வளரப்புனைதோள் புடைபோதப் போத - வினைவர் 179
அருங்கலை யல்கு லகல வகலமருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 180
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கைவரவர வாற்றாத மங்கை - பொரவரு 181
தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்விதாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் 182
அமுத மதியத் தலர்நிலா முற்றும்குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 183
கானின் மடமயிற்கே காணியோ தண்ணிளவேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் 184
தண்டா மரையா டலைவனை யாமும்போய்கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 185
ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் 186
வாவிக் கரையில் வரநீ ரரமகளிர்சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 187
புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத்தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே 188
னிரையர வந்தரு செய்குன்ற நீங்காவரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய 189
முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங்கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய 190
பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் 191
உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 192
மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர் 193
நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்கநீலமே யன்றி நினையாதாள் - நீலமே 194
முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர் 195
நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே 196
இறங்கிய கற்பக வல்லியு மேறிஉறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க 197
வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் 198
கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்குஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் 199
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் 200
வௌியே தருவேன் விரையாரத் தொங்கல்கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ 201
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே 202
எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீஉங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் 203
சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் 204
கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின்மடமானே தானே வருங்காண் - கடிதென்று 205
கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன்பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள 206
அலகில் குலநீல ரத்னா பரணம்விலகி வெயிலை விலக்க - உலகிற் 207
பெரிய பெருமாள் பெரும்பவனி வீதிஇரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208
ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் 209
மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதேமின்னனை யாளையு மீதூரா -முன்னர் 210
கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும்இடமாதும் யாமென்பார் போலப் - படமாய் 211
இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம்நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் 212
முலையாய் வளரு முரட்குவடு கொண்டுமலையாய் நெருங்க வருவார் - தொலையாத 213
பாய பருமுத்தின் மாலை பலதூக்கித்தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற் 214
கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும்பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 215
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத் 216
தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும்பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் 217
நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள் 218
தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணாநின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் 219
இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று 220
மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத்தானூங் களிறுந் தடையுண்ட - கோனும் 221
தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கைஅடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த 222
திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை 223
எய்தி யனங்க னெழப்போனான் மாதரும்உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற் 224
றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீதடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் 225
துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம்புகிலும் புகாமே பொராமே - அகினாறும் 226
பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய்வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை 227

மடந்தை
பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர்முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் 228
வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்துகொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந் 229
தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும்தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் 230
கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்றவலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் 231
எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்டகதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் 232
அடல்விடு மல்குற் பரவைக் குடைந்துகடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் 233
ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப்போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் 234
சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும்உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும் 235
கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும்அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி 236
அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றைமறுகு திருமலர வந்தான் - குறுகும் 237
முறுகு கதிரின் முகந்திரிய வேற்றுமறுகு திருமலர வந்தான் - குறுகும் 238
நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட்குடையாய வெள்ளமுங் கூடி - அடைய 239
மதியுதய மென்று வணங்க வனசபதியுதய மென்று பணிய - துதியில் 240
ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும்இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில் 241
நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்துமருங்கு வருகின்ற மாரன் - திருந்திய 242
பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற்போய மருங்குற் புறநோக்கார் -சாயா 243
முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால் 244
உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின்கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும் 245
பருவக் கொடிவதன பங்கே ருகத்தின்புருவக் கொடி முடியப் போகா - உருவக் 246
களிக்கும் புடவி சதகோடி கற்பம்அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் 247
கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக்கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா 248
முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற்புகுந்த திதுவென்று போனான் - திகந்த 249
முழுதா ளபயனை முகிணகையுந் தோளும்தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் 250
திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும்சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் 251
முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே 252
ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத்தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம் 253
கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலைதருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து 254
துளவ முகிற்கிது வந்தது தூயவளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த 255
வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல்புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் 256
இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக்கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின் 257
வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகைமயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும் 258
பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரேதிருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக் 259
செங்கே ழெறித்து மறிக்குந் திருநயனபங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே 260
தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும்பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் 261
பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய்மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262

அரிவை
தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத்தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை 263
வளவர் பெருமான் வரும்பவனி யென்றுகிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத் 264
தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன்பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா 265
என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும்நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் 266
அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம்எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன் 267
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்தகாலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன் 268
சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்றுகாமித் திகழின் கடைதிறப்ப - நேமி 269
மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித்தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் 270
வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில்இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக் 271
கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம்நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக் 272
களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும்கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப் 273
பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகைபூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை 274
அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோதவிளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப் 275
பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனிஎழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர் 276
தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில்தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் 277
போல விழுந்து மெழுந்தும் புடையாயம்கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் 278
எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக்கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும் 279
மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்துவெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் 280
வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல்எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து 281
வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய 282
பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்தசெம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் 283
புறவுஞ் சகோரமும் பூவையு மானும்பிறவு மினமென்று பெட்ப - உறவாய் 284
அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம்தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் 285
மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்குமீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே 286
அலகு முகமுங் குவிகையு மாகிமலரு முகளமுமானப் - பலர்காணத் 287
தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவிமானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் 288
தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்திவிடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் 289
ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்துநித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் 290
சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம்நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் 291
அரிவை துகினெகிழ வல்கு லரவின்உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் 292
மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப்பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும் 293
ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல்மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய 294
வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றைஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த 295
பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும்ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் 296
அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள்இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற் 297
பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர்பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப் 298
பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை 299
என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழைதன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப் 300

தெரிவை
பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப் 301
போதும் பெருமாள் புகுது மளவுமிங்கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் 302
பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்றுவந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் 303
கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதேஅம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே 304
கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி 305
எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து 306
முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் 307
அடியு மிருகையு மம்புய மென்றுபடியு மொழுங்கிற் பயில -முடியும் 308
தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க்கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய 309
விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால் 310
ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனைஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும் 311
கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவைஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ 312
திலக நுதலிற் றிருவேயென் றோதிஉலகு வியப்பவென் றோத - அலகிறந்த 313
பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்டவந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை 314
பெருமா னனபாயன் பேரிய மூன்றும் தருமா வாரந் தழந்த - ஒருமாதர் 315
ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோபோந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் 316
தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப்போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச் 317
சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர் 318
ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத் 319
தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் 320
உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டுபச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம் 321
அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கைவிசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க் 322
கோல வயிறுதர பந்தனக் கோணீங்கிஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் 323
இழியு மொருசாம ரேகையு முந்திச்சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய 324
இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்திசையின் புடையடையச் செல்ல - மிசையே 325
பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூசுறையு மரகத மொப்ப - அறையும் 326
சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல 327
தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்றுபாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே 328
ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் 329
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனையவெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி 330
இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்கஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் 331
மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்புசிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் 332
ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக்கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள 333
நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி 334
முருகு கமழ முகந்து முகந்துபருகு மடமகளைப் பாரா - அருகு 335
மடுத்து முயங்கி மயங்கிய தாயர்எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் 336
நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத 337
தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப் 338
பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி 339
அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்றுதௌிப்பச் சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி 340

பேரிளம்பெண்
மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனேசெற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் 341
தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளைமட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு 342
மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண் 343
டேந்தி முகம னியம்பி யிருந்தொருகாந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி 344
குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும்விதலை யுலகில் விளைத்து - நுதலை 345
வியரா லலங்கரியா வேந்தன் கொடுமைஅயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா 346
அருகிருந்த பாணனை நோக்க அவனும்குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக் 347
காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும்கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன் 348
குரகத மேழு முழுகிக் குளிப்பமரகத சோதி வயங்கப் - புருவ 349
இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப்புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக 350
ஏக முருக்கு மலர விளம்பாளைப்பூக மிடறு வரப்பொதிய - போகப் 351
பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய 352
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து 353
சலித்துத் தனியிள வஞ்சி தளரக்கலித்துக் கதலி கவின - ஒலித்தே 354
அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்களிக்கு மயூர கணமும் - விளிக்கும் 355
புறவுந் தொடர்ந்துடனே போத வவையேபிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் 356
காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் 357
தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக்கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல் 358
வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் 359
செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறியபந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் 360
உய்ய விருகாது மூக்கு முடுபதியைநைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய 361
பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக் 362
சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப்பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின் 363
சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் 364
ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி 365
முடைதழுவு தோளும் முலையுந் தழுவவிடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக் 366
கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியைமெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் 367
ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்கால வுததி கலக்கவும் - சால 368
வருந்தா வகைவருந்த வாழி பெயரும்பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய 369
குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால்வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக் 370
கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்தஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய 371
சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசியமாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் 372
முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி 373
மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர் 374
தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த் 375
தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் 376
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக் 377
காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் 378
வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்தமென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் 379
சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ் 380
அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோபவெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா 381
உடல்பிள வோட வொருதேரிடட் டூரும்அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் 382
அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல 383
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்தகண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் 384
எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்றுமைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே 385
தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலாமையலார் போலராய் மன்றேற - வையம் 386
பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்ஒருகுடையான் போந்த னுலா. 387

வெண்பா
என்றினி மீள்வ தரிதி னிரணியனைஅன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே ஆவின்பின் போன வனக னனபாயன்மாவின்பின் போன மனம்

கட்டளைக் கலித்துறை
ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே. 2குலோத்துங்க சோழன் உலா முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.