LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோச்சடையான் வெற்றி படமா !! தோல்வி படமா !! தயாரிப்பாளரின் பளிச் பதில்கள் !!

சுமார் 160 கோடியில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம் கடந்த 23 ம் தேதி வெளியானது, ரிலீசான முதல் மூன்று நாட்களில் சுமார் 42 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. 


அதை வைத்து ரஜினியின் முந்தைய படமான எந்திரனின் வசூலை கோச்சடையான் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில், கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவிவிட்டது என பட வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 


கோச்சடையான் படத்தின் வெற்றி, தோல்வி குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறியதாவது, 


"குறுகிய கால அவகாசத்திலும், குறைந்த பட்ஜெட்டிலும் கோச்சடையான் படத்தைத் தயாரித்தோம். எனவே படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருப்பது உண்மைதான். 


இப்போது படத்தைப் பார்க்கும்போது, இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கோச்சடையான் அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.


அதே சமயம், மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. 


தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஹிந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 


வட இந்தியாவில் கோச்சடையான் படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மைதான். தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 


இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். 


ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறோம்" என்று சொல்கிறார் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.  


அப்படினா.... கோச்சடையான் பிளாப்பா.......

by Swathi   on 04 Jun 2014  0 Comments
Tags: Kochadaiyaan   கோச்சடையான்                 
 தொடர்புடையவை-Related Articles
ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !! ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !!
உலக பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படுகிறது !! உலக பட விழாக்களில் கோச்சடையான் திரையிடப்படுகிறது !!
கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!! கோச்சடையான் 2ம் பாகம் பற்றி தயாரிப்பாளர் பதில்!!
கோச்சடையான் வெற்றி படமா !! தோல்வி படமா !! தயாரிப்பாளரின் பளிச் பதில்கள் !! கோச்சடையான் வெற்றி படமா !! தோல்வி படமா !! தயாரிப்பாளரின் பளிச் பதில்கள் !!
கோச்சடையான்-2 சௌந்தர்யாவின் சீக்ரட் பிளான் !! கோச்சடையான்-2 சௌந்தர்யாவின் சீக்ரட் பிளான் !!
கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !! கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !!
கோச்சடையான் - திரை விமர்சனம் !! கோச்சடையான் - திரை விமர்சனம் !!
கோச்சடையான் அறிந்ததும் !! அறியாததும் !! ஒரு சிறப்பு முன்னோட்டம் !! கோச்சடையான் அறிந்ததும் !! அறியாததும் !! ஒரு சிறப்பு முன்னோட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.