ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பிர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
|