|
||||||||||||||||||
கொல்லிமலைக்காட்டிலே… |
||||||||||||||||||
கொல்லிமலைக் காட்டுக்கு சிங்கம்தான் ராஜாண்ணாலும் எல்லாரையும் கேட்டுட்டுத்தான் எந்த முடிவையும் எடுக்கும்.
ஒருநாள் சிங்க ராஜாவுக்கு ஒரு கடிதம் வந்துச்சு. அது ஒரு டைனோஸர் எழுதுன கடிதம். எனக்கு உங்க காட்டில் வாழ அனுமதி கொடுங்க. அப்படிணுண்ணு அந்தக் கடிதத்தில் எழுதியிருந்திச்சு.
சிங்கம் ராஜா கூட்டம்போட்டு எல்லார் கிட்டயும் கேட்டாரு. என்ன டைனோஸரை தங்க அனுமதிக்கலாமா வேண்டாமா?ணு கேட்டுச்சு. எல்லாரும் அதுக்கென்ன வரச்சொல்லுங்க. பத்தோடு பதினொண்ணுண்ணு தங்கட்டும் அப்படீண்ணு சொல்லிச்சுக.
ஆனா அதுக ஒருபெரிய வம்புல மாட்டப்போகுதுண்ணு அவங்களுக்குத் தெரியல.
சிங்கமும் கொல்லிமலைக்காட்டிலுள்ளவங்க உன் வரவை எதிர்பாத்திருக்காங்க அப்படீண்ணு பதிலும் போட்டாரு.
ஒரு பத்து நாளைக்கப்புறம் வந்து நிக்கதுப்பா அந்த டைனோஸரு.
கொல்லிமலை காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தலையைத் திருப்பி அந்த உருவத்தைப் பார்திச்சுக. .
பனையளவு உயரமான கழுத்து, குட்டையான கால்கள், பெரிய தட்டையான வால், ஐந்து யானைகளோட வயிறு ஒண்ணாச் சேர்ந்தால் எவ்வளவு பெரிசா இருக்குமோ அவ்ளவு பெரிசா இருந்திச்சு அதோட வயிறு.
"அம்மாடியோவ்....! யப்பா எவ்வளவு பெரிசு!! இதோட கழுத்தில் ஏறினா சுளுவில தேங்காய் பறிக்கலாம்'' அப்படீண்ணு குரங்கு நினைச்சது
"யாராவது நம்ம புடிக்க வந்தால் பேசாமல் இதோட காலுக்கு எடயிலெ போய் நிண்ணுகிட்டாப்போதும். பாதுகாப்பா இருக்கும். அப்படீண்ணு புள்ளி மான் மிரளும் கண்களால் அந்த உருவத்தைப் பார்த்தபடி நினைச்சது.
அணிலோ டைனோஸர் வந்து நிண்ணுதோ இல்லையோ அப்பவே அதோட முதுகு மேல ஏர்றதும் தாவிக் கழுத்தைப் பிடிக்கறதும் அங்கிருந்து கீழே குதிக்கறதுமாக விளையாடத் தொடங்கிருச்சு.
"கொல்லிமலைக் காட்டுக்கு ஓர் ஆபத்து வந்தால் இந்த டைனோஸர் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். அப்படீண்ணு'' சிங்கம் நெனச்சுது. அது ராஜாவாச்சே அது அப்படித்தானே நெனக்கணும். அப்படி நீலமலைக்காட்டிற்குள் அந்த பெரிய்ய்ய்ய்ய... டைனோஸர் நுழைஞ்சுது.
அதுக்கப்புறம்தான் நாம எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கிட்டோம் கொல்லிமலைக்காட்டிலுள்ள விலங்குகளுக்குப் புரிஞ்சுது.
டைனோஸர் காட்டுக்குள் நுழைஞ்சதுமே... அதோட உடம்பு பட்டு மரங்களெல்லாம் வளைஞ்சு நெளிஞ்சு ஆடத் தொடங்கிச்சு. மரத்திலிருந்த பறவைக எல்லாம் கீச் கீச் என்று அலறிக்கிட்டு பறந்ததுக. சில பறகளோடு கூடுக தூரத் தெறிச்சு விழுந்திச்சு. பாவம் அந்தக் கூட்டில இருக்கற குஞ்சுக குய்யோ முறையோணு கத்திச்சுக. .
டைனோஸரோட கழுத்து பனையளவுக்கு உயரமா இருக்கா. ஆனா அதோட கண்ணு சின்னக்கண்ணு அதனால கீழே என்ன இருக்குதுணு அதாலே பாக்க முடியாது.
அதோட காலுக்கடியிலெ பட்டு சட்னியாயிருவோம்ணு முயல் மான் நரி எல்லாம் பயந்து நடுங்கிச்சுக.
அது மட்டுமா பத்து யானைகள் பத்து நாள் சாப்பிடற சாப்பாட்டை இந்த குண்டோதரன் டைனோஸர் ஒரே நாளில் திண்ணுடும். அதனால் உணவுப் பற்றாக்குறை வந்துடுமோணு யானைகளும் வருத்தப்பட்டுச்சுக.
"எல்லாரும் ஓடி வந்து சிங்கராஜாகிட்ட சொன்னாங்க. அந்த டைனோஸர் வந்ததிலிருந்து எங்க நிம்மதி போச்சு. அன்னைக்கு மனசுக்கு வந்த பயம் இந்த நிமிஷம் வரைக்கும் போகல. அது கூடிக்கிட்டே இருக்கு. அதை எப்படியாவது நம்ம காட்டை விட்டே அனுப்பீருங்க" அப்படிணு கேட்டிச்சுக. . அதுக்கு சிங்க ரஜா "இங்க பாருங்க நான் இந்தகாட்டுக்கு ராஜா. நான் உங்கக்கிட்ட கேட்டுட்டுத்தானே அத வரச்சொன்னேன். நான் வாக்குக் கொடுத்தா அதை மீறமாட்டேன். வந்த ரெண்டே நாள்லெ வெளியே போண்ணு எப்படிச் சொல்றது. என்னாலே முடியாது" அப்படீண்ணு சொல்லிருச்சு. இனி யார் நம்மைக் காப்பாத்துவாங்க... கடவுள் தான் காப்பாத்தணும் அப்படீண்ணு எல்லாரும் "கடவுளே... எங்க ராஜா வாக்குக் கொடுத்திட்டாரு. ஒரு நாளும் நாங்க ராஜாவுக்கு எதிரா பேசமாட்டோம். அதனாலே இந்த டைனோஸர் காட்டிலேயே இருக்கட்டும். ஆனால் அது இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டாம். அதக் கொஞ்சம் சின்னதாக்கிடுங்க" ணு வேண்டுச்சுக. ஒராளு ரெண்டாளா வேண்டனாங்க. கொல்லிமலைக்காட்டிலுள்ள எல்லாருமே வேண்டனாங்க .பறவைகெல்லாம் வேண்டிச்சு, பாம்புகெல்லாம் வேண்டிச்சு. முயலுகெல்லாம் வேண்டிச்சு. மான் மயிலு, நரி நாய் எல்லாம் வேண்டிச்சுக.
அப்படி எல்லாரும் வேண்டினா கடவுளாலெ கேட்காம இருக்கமுடியுமா? ஒராள் வேண்டிக்கிட்டதை மட்டும் கேட்டா அடுத்தவங்களுக்கு கோபம் வராது அதனால் எல்லாரோட வேண்டுதலுக்கும் கடவுளும் செவி சாய்ச்சாரு.
டைனோஸர் சின்னதாச்சு. சின்னதாச்சு... சின்னதாச்சு... ரொம்ப சின்னதாச்சு ரொம்ப ரொம்ப சின்னதாச்சு. அதுதான் நம்ம வீட்டிலிருக்கற பல்லி. அம்மாம் பெரிசாயிருந்த நான் இத்ணூண்டாயிட்டனேண்ணு வெட்கப்பட்டு அது காட்டிலிருந்து நாட்டுக்கு வந்து நம்ம வீடுகளில் வசிக்குது. |
||||||||||||||||||
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|