குட்டிப்புலி படத்தை தொடர்ந்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாக்கி வரும் அடுத்த படம் கொம்பன். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்கள் தவிர, ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை லட்சுமி மேனனை தவிர படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
கொம்பன் படம் குறித்து, கார்த்தி கூறுகையில், பருத்தி வீரனுக்குப் பிறகு கிராமத்துக் கதைகளைத் தேர்வு செய்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. காரணம், அந்த சாயலிலேயே நடிப்பதாக குற்றச்சாட்டு வர வாய்ப்பிருக்கிறது.
கொம்பனில் நான் குடிகாரனில்லை, பருத்திவீரனுக்கு நேர் எதிரானவன். இந்தப் படத்தில் எனக்கு மாமனாராக நடித்துள்ள ராஜ்கிரணும், அம்மாவாக நடித்துள்ள கோவை சரளாவும் படத்துக்கு மிக அழுத்தமான உணர்வைக் கொடுத்துள்ளனர்," என்றார்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராஜ்கிரண் கூறுகையில், "இந்தப் படம் பார்த்த பிறகு யாராவது ஒரு மாமனார் - மருமகன் ஈகோ மோதலத் தவிர்த்தாலே போதும்.. அதுதான் இந்தப் படத்தின் வெற்றி," என்றார்
|