கோணங்கித்தனமாக கோமாளியின் ஒப்பனையுடன் ஆடும் ஆட்டம் கோணங்கி ஆட்டம் எனப்படும். இக்கலை மூன்று தலைமுறைக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் இக்கலை நிகழ்கிறது. கோணங்கி ஆட்டக்காரர் கோமாளியைப்போல் ஒப்பனை செய்து கொள்வார். தலையில் கோமாளித் தொப்பி, நெற்றி கன்னங்களில் நாமம், நரைத்த மீசை, தாடி, கழுத்தில் துளசி மாலையுடன் இவர் தோன்றுவார். இவ்வாட்டத்தை நிகழ்த்துபவர் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் அக்கலைஞர் ஒரு வாரம் விரதம் இருக்க வேண்டுமென்ற நியதி உள்ளது.
|