|
||||||||
கூழ் வடகம்(Kool Vadagam ) |
||||||||
தேவையானவை : புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தண்ணீர் - 4 லிட்டர் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு புளித்த மோர் - 1 லிட்டர் பச்சை மிளகாய் - 5 செய்முறை : 1.முதல் நாளே அரிசியை ஊறப் போட்டு பச்சை மிளகாய்,பெருங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும். மறுநாள் காலையில் ஒரு பெரிய பத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மோர் விட்டு கரைத்த கூழை ஊற்றி தேவையான உப்பு போட்டு அடிபிடிக்காமல் கிளறவும். 2. பாத்திரத்தில் உள்ள கூழ் நன்கு பக்குவமாக வெந்ததும் ஆற வைத்து வெயிலில் துணியை விரித்து சிறிய கரண்டியில் எடுத்து வட்டமாக ஊற்றவும். காய்ந்த பின் எடுத்து டப்பாக்களில் போட்டு மூடி வைக்கவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|