LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !!

கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கோவை சரளா. 


கோவை தமிழில் பேசி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் கவுண்டமணி-செந்தில், வடிவேலு ஆகியோருடன் பல படங்களில் நடித்ததால் காமெடி நடிகையாக தன்னை நிறுத்திக்கொண்ட கோவை சரளா, தமிழ் சினிமாவின் பெண் காமெடி நடிகை என்ற பெருமைக்குரியவராகவும் திகழ்கிறார். 


குறிப்பாக, சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அவருடன் டூயட் பாடி தனது தரத்தை உயர்த்திக்கொண்ட கோவை சரளாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேக்க நிலை ஏற்பட்டது.


ஆனாலும், லாரன்ஸ் இயக்கி நடித்த முனி, காஞ்சனா படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்தது. அப்படத்தில் அம்மா வேடத்தில் நடித்தபோதும் கோவை சரளாவின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக, அதே படம் தெலுங்கிலும் வெளியானதால், தமிழை விட அங்குதான் அவருக்கு அதிகமான படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் திகில் படங்களிலேயே நடித்த கோவை சரளா, தமிழிலும் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கோவை சரளாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 


இந்நிலையில் தற்போது அதே ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3 கங்கா படத்தில் நடித்து வருகிறார் கோவை சரளா. 


காஞ்சனா படத்தில் தேவதர்ஷினி, ஸ்ரீமனுடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்த கோவை சரளா, இந்த படத்தில் ஸ்ரீமனுடன் இணைந்து நடித்துள்ளாராம். முக்கியமாக, காஞ்சனாவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் வகையில் நடித்து அவர் ஸ்கோர் பண்ணியிருந்ததால், இந்த படத்தில் இன்னும் கூடுதலான காட்சிகளை கோவை சரளாவுக்கு கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ்.

by Swathi   on 19 Nov 2014  0 Comments
Tags: கோவை சரளா   முனி 3   கங்கா   Ganga   Muni 3 Ganga   Kovai Sarala     
 தொடர்புடையவை-Related Articles
கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !! கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !!
முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !! முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !!
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !! டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !!
கோவை சரளா அரசியல்வாதி ஆகிறாரா? கோவை சரளா அரசியல்வாதி ஆகிறாரா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.