LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

கிருஷ்ண ஜெயந்தி - சூர்யா சரவணன்

மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம். ஓவ்வொரு ஆண்டிலும் ஆவணி மாதத்தில் இந்தப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரம் என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். ஏனெனில் கிருஷ்ண அவதாரத்தில்தான் அர்ஜூனனுக்கு போர்க்களத்தில் கிருஷ்ணர் ஆலோசனைகளைக் கொடுத்தார். அதுவே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை’.



இந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணர் சிலைகளை அலங்கரித்தும், குழந்தைப் பாதம் போட்டும் கொண்டாடுவார்கள்.

புராண வரலாறு:

                தேவகியும், கம்சனும் உடன்பிறப்புகள். தன்னுடைய தங்கைக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் 8-வது குழந்தையால் தனக்கு மரணம் நேரும் என்பதை அறிந்த கம்சன் அவளைக் கொல்லப் போனான். அதைக் கண்ட வாசுதேவர் அந்தக் குழந்தையை அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறினார். ஆயினும் அவர்களை சிறையில் அடைத்தான் கம்சன். அவர்களின் எட்டாவது குழந்தையே அவனின் மரணத்திற்கு காரணமாக இருக்க, அவன் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொன்றான். தேவகி எட்டாவது முறையாக கர்ப்பம் தரித்தாள். அப்பொழுது வசுதேவன் நண்பரான நந்தகோபாலன் மனைவி யசோதையும் கருவுற்றாள்.



இந்நிலையில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்தான். அதே சமயத்தில் யசோதைக்கு பெண்குழந்தை பிறந்தது. அப்பொழுது சிறையில் விஷ்ணு தோன்றி அந்தக் குழந்தையை நந்தகோபாலடம் சேர்த்துவிட்டு, அங்கிருக்கும் பெண்குழந்தையை சிறைக்கு கொண்டு வருமாறு கூறினார். வசுதேவரும் அவ்வாறே செய்தார். அவர் கொண்டுவந்த பெண்குழந்தையை கம்சன் கொல்ல முற்பட அது காளிதேவியாக உருமாறி, அவனைக் கொல்லப்போகும் கிருஷ்ணன் பிறந்து, வேறொரு இடத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறினாள்.



அவள் கூறியதைப் போலவே கிருஷ்ணனும் வளர்ந்து வந்து மாமனைக் கொன்று, தன்னுடைய பெற்றோரை சிறை மீட்டான். அவன் பிறந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. தற்பொழுது உலகில் வாழும் இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்

விழாக் கொண்டாட்டங்கள்:



                இந்த பண்டிகையை இந்தியா முழுவதிலும் பல்வேறு விதங்களில் கொண்டாடுகின்றனர். முக்கியமாக ‘மனித பிரமீடுகளை’ எழுப்பும் விழா தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அதாவது மிக உயர்ந்த இடத்தில் வெண்ணெய் நிரப்பப்பட்ட பானை ஒன்று கட்டித் தொங்க விடப்படும். அதை இளைஞர்கள் பிரமீடு போன்ற தோற்றத்தில் ஒருவர் மீது ஒருவர் ஏறி, அந்தப் பானையை உடைத்து அதிலிருக்கும் வெண்ணெய்யை உண்பதாகும். கோகுலத்தில் இருந்த கிருஷ்ணர் அனைத்து வீட்டிலும் உள்ள வெண்ணெய் பானைகளை உடைத்து அதிலிருந்த வெண்ணெய்யை சாப்பிடுவார். அதை நினைவுக் கூறும் விதமாகவே இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

பண்டிகைக்கால உணவு:


                மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறோம். ஓவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரம் என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை.


இந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணா; சிலைகளை அலங்கரித்தும், குழந்தைப் பாதம் போட்டும் கொண்டாடுவார்கள்.

                          **********************

Krishna Jayanth (Sep 8th)i

Krishna Jayanthi is coming on Sep 8th.  Krishna Jayanthi is very important festival for Hindus.  

by Swathi   on 31 Jul 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
01-Sep-2019 05:18:52 Kalaiyarasu said : Report Abuse
Krishnarin udanpirappu yaar
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.