லண்டனின், ஹறோ நகரத்தின் துணை மேயராக சுரேஸ் கிருஷ்ணா தேர்வாகியுள்ளார்.
லண்டன் மாநகரத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி, ஹறோ.
இந்த பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்ற சுரேஸ் கிருஷ்ணா 2010 ம் ஆண்டு முதல் ஹரோ றேனர்ஸ் லேன் வோர்ட் கவுன்சிலராக இருந்து வருகின்றார்.
சமீபத்தில் சுரேஸ் கிருஷ்ணாவின் சமூக சேவைகளுக்காக சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். சமூக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அத்துடன் அறக்கட்டளை நிறுவனங்களுக்காக நிதி திரட்ட நடத்தப்படுகின்ற போட்டிகள் மற்றும் விளையாட்டுக்களிலும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றார்..
|