|
||||||||
நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுக்கு நோபல் பரிசுக்கு இணையாக, சுவீடன் நாடு வழங்கும் `வாழ்வுரிமை விருது' |
||||||||
நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுக்கு நோபல் பரிசுக்கு இணையாக, சுவீடன் நாடு வழங்கும் `வாழ்வுரிமை விருது' இந்த ஆண்டு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் -சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். கணவர் ஜெகந்நாதன் (94) சுதந்திர போராட்ட தியாகி. கிருஷ்ணம்மாள், ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்து பல்கலைக்கழகம்வரை பயின்று, காந்தியடிகளின் சர்வோதய இயக்கத்தில் ஈடுபட்டவர்.
ஜெகந்நாதன் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, கல்லூரிப் படிப்பை கைவிட்டு முழுநேர காந்தியத் தொண்டராகத் திகழ்ந்தவர். தொண்டால் இணைந்த இருவரும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் திருமணம் என முடிவு செய்து, அதன்படி 1950-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
1968ல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் மக்கள் 44 பேர் நிலச்சுவான்தாரர்களால் உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டனர். அந்த சம்பவம்தான் கிருஷ்ணம்மாளை திண்டுக்கல்லிலிருந்து நாகை மாவட்டத்திற்கு அழைத்து வந்தது.
கூத்தூரில் நில மீட்புப் பணியை தொடங்கி அதன்பிறகு லாப்டி என்ற அமைப்பை உருவாக்கினார். அடுத்து வினோபா ஆசிரமத்தை நிறுவினார்.
அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தி உழைக்கிற ஏழை மக்களுக்கு நிலத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று நில உரிமையாளர்களிடம் போராடி பல பிரச்னைகளையும் சந்தித்தவர்.
திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட த்தின் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை நிலச்சுவான்தாரர்களிடமிருந்து மீட்டு ஏழை மக்களுக்கு சொந்தமாக்கினார். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கண்டு கொஞ்சம் கூட பின்வாங்காமல் எதிர்த்து போராடி ஏழை மக்களின் வாழ்வை வளப்படுத்தி வருபவர் கிருஷ்ணம்மாள்.
லாப்டி சார்பில் கம்ப்யூட்டர்சென்டர், பாய் நெய்யும் யூனிட், எலக்ரிக்கல் அண்ட் பிளம்மிங் யூனிட் என்று பல வேலைகளை செய்து வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறார். இவருடைய சாதனைகளை பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும்.
நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுக்கு நோபல் பரிசுக்கு இணையாக, சுவீடன் நாடு வழங்கும் `வாழ்வுரிமை விருது' இந்த ஆண்டு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் -சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.
|
||||||||
by Swathi on 30 Mar 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|