LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

குலதெய்வம்-சங்கர் ஜெயகணேஷ்

கடந்த ஒரு வருடமாவே சரவணன் நடத்தி வந்த பலகார கடை, பாத்திர கடை அனைத்தும் நட்டத்தில் நடக்க ஆரம்பித்தன; சரவணன் உடல்நிலையும் சரியாக இல்லை, சர்க்கரை வியாதி, கால் வலி என்றும் அவதி பட ஆரம்பித்தான்.  அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிறைய சண்டைகள் இவனுக்கும் மனைவிக்கும் இடையே, இது எல்லாம் போதாது என்று பூர்வீக சொத்து ரூபத்தில் பங்காளி பிரச்சனை வேறு வந்தது.  சரவணன் பல பிரச்சனைகளால் திக்கி திணறினான்.

என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் அவன் குடும்ப ஜோசியர் ஜோதிட சிகாமணி சிங்காரம் நினைவுக்கு வந்தார், அவரிடம் சென்று தன் ஜாதகத்தை காட்டி பரிகாரம் கேட்கலாம் என்று முடிவு செய்தான்.

அவர் இவன் ஜாதகத்தை அலசி பார்த்துவிட்டு உனக்கு இப்ப கேது திசை நடக்குது; ராகுவும் சரியான இடத்தில் இல்லை, அதனால் எந்த ஒரு காரியம் செய்யும் முன் பல தடவை யோசித்து செய்ய வேண்டும்.  ஒரு முறை உங்க குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் பிரச்சனையில் இருந்து தப்பலாம், ஆனால் முழுவதும் தப்ப முடியாது என்று கூறிவிட்டார்.

சரி என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே குடும்ப சூழ்நிலை சரியில்லை, இதுல அவளை  எல்லாம் கூட்டி கொண்டு போக முடியாது என மனதில் நினைத்து கொண்டு தனியாக போக முடிவு செய்தான்.  அய்யனார் இவன் குலதெய்வம்; அதுவும் திருநெல்வேலி அருகில் உள்ளது. இவன் கோவில்லுக்கு சென்று சுமார் ஒரு ஐந்து வருடம் ஆயிற்று.  சரி ரொம்ப நாள் கழித்து போகிறோம், வருகின்ற அம்மாவாசை பூஜைக்கு போக முடிவு செய்தான். மாதந்தோறும் அம்மாவாசை  இரவில் அங்கு பெரிய படையில் இட்டு அய்யனாருக்கு ஒரு பூஜை நடக்கும், தாயாதிகள் சில பேர் மட்டும் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள்.  மகாளய அம்மாவாசை பூஜை தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலிக்கு போகும் போது  பழைய நினைவுகள் இவன் நினைவுக்கு வந்தன. ஒருவழியாக  திருநெல்வேலியை அடைந்து மதியம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டவுண்பஸ் பிடித்து குலதெய்வ கோவிலுக்கு சென்றான்.  பஸ்சில் இருந்து இறங்கி வயக்காட்டு பக்கமாக நடந்தான், போகும் போது  இவன் பால்ய நண்பன் குமாரை பார்த்தான்; பார்த்தவுடன் வியப்படைந்தான்.  ஐந்து வருடம் முன்பு பார்க்கும் போது கஞ்சிக்கு வழியாமல் ஒரு கிழிந்த சட்டை போட்டு ஊர் சாவடியில் படுத்து கிடந்தவான் தான் இந்த குமார்.  இப்ப பார்த்தால் வெள்ளையும் சொள்ளையும் மட்டும் இல்லாமல், கழுத்து நிறைய தங்க சங்கலியும் மின்னியது.

என்ன குமாரு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்ட என்று கேட்டான்.  

என்ன சரவணா இந்த பக்கம் என்று இவன் கேள்விக்கு பதில் கூறாமல்  மறு கேள்வி கேட்டான்?

ஏன் நான் உன்னை பார்க்க வர கூடதா?

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை?  ஒரு ஐந்து வருடமா நீ கோவில் திருவிழாவுக்கு கூட வரவில்லை அதனால் தான் என இழுத்தான்.

வியாபாரம் ஒன்னும் சரியில்லை, குடும்பத்திலும் ஆயிரம் பிரச்னை, அது தான் இந்த பக்கம் தலை வைக்க முடியவில்லை.

உனக்கு வியாபாரம் எப்படி என்று கேட்டான்.

எதோ ஆண்டவன் புண்ணியத்தில் இப்ப வியாபாரம் நல்ல போகுது.  அக்கம் பக்கம் யாரும் வருகிறார்களா என்று பார்த்து விட்டு, எல்லாம் இந்த ஒரு மோதிரத்தால் தான் என்று சொல்லிவிட்டு தன் கையை கட்டினான்.  

இது என்ன ராசிக்கல் மோதிரமா என்று கேட்டான் சரவணன்

ஆம் இது ஒரு விலை உயர்ந்த ராசிக்கல் மோதிரம், இதற்க்கு பெயர் நாகரத்தினம் என்று கூறிவிட்டு மறுபடியும் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து விட்டு ஒரு ரகசியம் சொல்றேன் என்று இவன் காதில் ஒன்றை சொன்னான்.   பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் ஒரு சிவப்புக் கல் இருக்கும், அதுக  அம்மாவாசை போன்ற நாள்களில் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு வசதியாக இதைப் வெளியில் வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.  ஒரு நாள் அம்மாவாசை அன்று இரவு குளத்துக்கு போகும் போது எனக்கு ஒரு பெரிய நாகரத்தினகல் கிடைத்தது இதை யாரிடமும் சொல்லாதே என்றும் கூறினான்.   அதுமட்டுமில்லாமல் அந்த கல்லை நான் அதிக விலைக்கு விற்று விட்டேன், ஒரு சிறிய அளவு கல்லை என் விரலில் மோதிரமாக போட்டு கொண்டேன்.  

நாகரத்தினத்தை அணியும் ஒருவனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது வீட்டில் குபேரன் காசு  பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளிடம் இருந்தும் தப்பிக்கலாம் என்றும் கூறினான்.  இருவரும் கொஞ்சம் நேரம் வேற வேற விசயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு இறுதியில் நான் குலதெய்வ கோவிலுக்கு வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   

இரவு அம்மாவாசை பூஜையில் கலந்து கொண்டு, மனமுருக அய்யனாரை பிராத்தனை செய்தான், பூஜை முடியவே இரவு 2 மணி ஆனதால் கோவிலில் தூங்கினான்.

அதிகாலையில் எழுந்து வயக்காட்டு பக்கம் நடந்து வரும் போது தான் பார்த்தான் குமார் இறந்துகிடப்பதை; ஊரே அதிகாலையில் கூடி நின்று வேடிக்கை பார்த்தது, குமாரின் காலுக்கடியில் ஒரு பாம்பும் அடிபட்டு இறந்துகிடந்தது.  குமார் கைகளில் சாணியும் ஒரு பாம்பை அடித்த ஒரு கம்பும் இருந்தது.   வாரம் வாரம் தவறாமல் பாம்பு புற்றுக்கு பால் வார்பார்; அது மட்டுமில்லாமல் நாகரத்னகல் வேற கையில் போட்டு இருந்தார், இருந்தும் பாம்பு அவர் உயிரை பலிவாங்கிவிட்டது என்று ஊர்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தது அவன் காதில் கேட்டது, உடனே அவனுக்கு நேற்று குமார் சொன்ன நாகரத்தினகல் நினைவுக்கு வந்தது. குமார் இறந்த இடங்களை சுற்றி சுற்றி நோட்டம் விட்டான், ஒரு இடத்தில் ஒரு சிறிய கல் போன்ற சாணிகுவியலை பார்த்தான்.  உடனே யாருக்கும் தெரியாமல் அந்த சாணி குவியலை எடுத்து பையில் போட்டு கொண்டான். நண்பனின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் உடனே ஊருக்கு திரும்பினான்.   திருநெல்வேலி வந்து அடைந்ததும் அந்த சாணியை கழுவினான்; நாகரத்தினகல் மின்னியது, அவன் கண் கூசியது.  உடனே திருநெல்வேலியில் உள்ள ஒரு பொற்கொல்லர், வீட்டிற்கு சென்று அந்த கல்லை கொடுத்து விலை பேசினான்; ஒரு வழியாக அந்த கல்லை பல லட்சங்களுக்கு விற்றான்.  இவனுக்கும் அதில் ஒரு சின்ன மோதிரமும் செய்து கொண்டான், ஒரு நாள் முழுவதும் சந்தோசமாக இருந்துவிட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பினான்.

ஒரு சில மாதங்கள் முதலில் கொஞ்சம் பழைய கடன்களை அடைத்தான், வேறு சில தொழில்களிலும் சிந்தனையை திருப்பினான்.  மோதிர ராசியோ என்னவோ இவன் மனைவியும் இப்போது சண்டை சச்சரவு இல்லாமல் பழக ஆரம்பித்தாள்.

இவனது பண செழிப்பை பார்த்து இவன் மனைவி எந்நேரமும் பாச மழையும் பொழிந்தாள்.  ராசிக்கல் வந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது.  இவனும் கையில் இருந்த பணத்தில் புது புது வியாபாரங்களை தொடங்கினான்.  அனைத்திலும் இவனுக்கு வெற்றியே கிடைத்தது.

புதிதாக சில வீடு மற்றும் தோட்டங்களை வாங்கினான், இவன் ஊரில் இருக்கும் ஒரு பாம்பு புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளி கிழமையும் சென்று பால் ஊற்றி வழிபடுவான். அது மட்டும்மில்லாமல் ஒவ்வொரு மாதமும் அன்னதானமும் செய்தான்.  வியாபாரம் பல மடங்கு பெருகியது, மறு வருடம் குடும்பத்துடன் குல தெய்வ கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, கோவிலுக்கு ஒரு மணியும், அய்யனாருக்கு ஒரு வேலும் சாத்திவிட்டு வந்தான்.

குலதெய்வ வழிபட்டால் மன நிறைவு அடைந்ததாக மனைவியிடம் சொன்னான்; ஆனால் ஒரு முறை கூட தப்பி தவறி கூட ராசிக்கல் மோதிரம் பற்றியோ நாகரத்தினம் பற்றியோ யாரிடமும் இவன் சொல்லவில்லை; அதை ஒரு தெய்வ ரகசியமாகவே அவன் மனதிற்குள் மட்டும் வைத்து கொண்டான்.

இப்படியே இரண்டு வருடம் ஓடியது, பணம் பெருக பெருக இவன் ஒரு துறவி போலவே மாறினான்; எந்த நேரமும் ஏதாவதொரு கோவிலுக்கு செல்வதும், ஒவ்வொரு கோவிலுக்கும் நன்கொடை வாரி வழங்குவதும் என இருந்தான். மறுவருடம் குலதெய்வவிழா கொடை கொடுக்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது காரில் திருநெல்வேலியை நோக்கி வண்டியில் சென்று கொண்டு இருந்தான், போகும் வழியில் கோவில்பட்டி அருகில் மதிய உணவை முடித்துக்கொண்டு சர்வருக்கு 50 ரூபாய் டிப்ஸ் தந்து விட்டு மறுபடியும் பயணத்தை தொடர்ந்தனர்.     புறவழி சாலை வழியாக திருநெல்வேலியை நெருங்கும் போது; சாலையில் கிடந்த ஒரு கயிறை பாம்பு என நினைத்து போட்ட தீடிர் பிரேக்கால் வண்டி நிலை குலைந்து மிக பெரிய விபத்தில் முடிந்தது.  விபத்தில் வண்டி ஓட்டிய டிரைவர் தவிர அனைவரும் சம்பவ இடத்தில் இறந்தனர்.  ராசி கல் மோதிரத்தால் விபத்தை......

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்குலதெய்வம்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

kulatheivam - sankar jayaganesh
by jayaganesh sankar   on 13 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.