LOGO

ஸ்ரீ போத்திராஜா

  கோயில்   ஸ்ரீ போத்திராஜா
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   போத்திராஜா
  பழமை   
  முகவரி
  ஊர்   சொக்கநாதன்புத்தூர்
  மாவட்டம்   விருதுநகர் [ Virudhunagar ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

தென்தமிழகமாம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூர் கிராமத்தின் எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ போத்திராஜா திருக்கோவில் பற்றிய சிறுதொகுப்பு தான் இது.


கோவில் உருவான வரலாறு:
திருநெல்வேலி மாவட்டம் (தற்போதைய தென்காசி மாவட்டம்) கடையநல்லூர் நகராட்சியில் ஒரு காட்டுக்குள்ளே எங்கள் குலதெய்வமான ஸ்ரீ போத்திராஜா மண்புற்று போல வளர்ந்து வந்ததாம். வருடத்திற்கு இரண்டு நாட்கள் (மாசி மஹா சிவராத்திரி & சர்வ அமாவாசை [மாசிப்படைப்பு]) மட்டும் எங்கள் குலதெய்வ வகையறாவைச் சேர்ந்த உறவினர்கள் வழிபட்டு வந்தார்களாம்.

புற்று வளர்ந்த இடத்தின் உரிமையாளரோ 'எந்த நம்பிக்கையில் இந்தப்புற்றை வணங்குகிறார்கள்' என்ற நோக்கோடு புற்றை இடித்ததாகக்கூறப்படுகிறது. உடனே நம் தெய்வமோ வயதான கிழவன் வடிவம் பூண்டு இடம் தேடி சொக்கநாதன்புத்தூர் கிராமம் வந்தாராம். சுமார் 60 முதல் 70 வருடங்களுக்கு முன்பு, கிராம எல்லையிலே பனைமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளரும் இடத்தில் தான் குடிகொள்ளப்போவதாக மருளாளி (சாமியாடி) மூலமாக அருள்வந்து எம் வகையறா மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கடையநல்லூரில் அய்யன் குடியிருந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்துவந்து பீடம் அமைத்து வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்.


முதலில் மண்பீடம் அமைத்துதான் வழிபட்டோம், அதன்பின்னர் சிமெண்ட் சிலை, 2011ல் கற்சிலை அமைத்து குடமுழுக்கும் நடத்தினோம். தற்போதும் கொடைநாளில் அய்யன் முதலில் நிலையம் பெற்றிருந்த கடையநல்லூர் காட்டுக்குள்ளே ஒரு ஊற்றில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிசேகம் செய்யப்படுகிறது. இன்றளவும் அந்த பனைமரம் பாதிமுறிந்த நிலையில் கோவில் கருவறையை ஒட்டி இருக்கத்தான் செய்கிறது. மூலவருக்கு படைக்கப்படும் அத்தனையும் பனைமரத்துக்கும் படைக்கப்படுகிறது. கோவிலில் மூலவர் போத்திராஜா குதிரை வாகனத்தோடும் லாடசன்னாசி என்ற தவமுனியும் ஒரே கருவறையில் இருப்பது தனிச்சிறப்பு. அதுபோக விநாயகர், சங்கிலிபூதத்தான், பேச்சியம்மன் மற்றும் கருப்பசாமி போன்ற பரிவார தெய்வங்களுக்கு தனி சன்னதிகளும் உண்டு. போத்திராஜா & லாடசன்னாசிக்கு உடையாத்தேங்காய், நனையாப்பச்சரிசி & பழங்கள் படையலாகப் படைப்பது வழக்கம். உடையா முக்கண்தேங்காயை படைக்கவேண்டி சிவபெருமானிடம் வரம் வாங்கினாராம் அய்யன் போத்திராஜா. காவல் தெய்வங்களான பேச்சியம்மன் & கருப்பசாமிக்கு கிடாய் வெட்டி, முட்டை, முருங்கை & கருவாடோடு படையல் போடுவதுண்டு மாசிக்கொடை நாளில்.

கொடைவிழா & விசேச நாட்கள்:

 மாசி மகா சிவராத்திரி மற்றும் அதற்கு அடுத்தநாள் வரக்கூடிய அமாவாசை தினங்களில் கொடைவிழா சிறப்பாக நடைபெறும். ஊரிலிருந்து மேளதாளங்களோடு தீர்த்த,பால் குடங்கள் வந்து சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டு சாமக்கொடை எனும் பெரும்படைப்பு நடைபெறும். அது தவிர சித்திரை மாதப்பிறப்பு, ஆனி முப்பழம், திருக்கார்த்திகை தீபம், ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல் மற்றும் பிரதி மாதந்திர வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தலைக்கட்டு வரிதாரர்கள் மற்றும் பெண்ணடி மக்களை சேர்த்து கிட்டத்தட்ட நூறு குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் இருந்து எங்களைக் காத்துவருகிறார். மண்தரையாய் இருந்த கோவில் இன்று ஓரளவிற்கு உருப்பெற்றுள்ளது. சிறு சிறு திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

-Murugan KM 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி , விருதுநகர்
    அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் மடவார்வளாகம் , விருதுநகர்
    அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிவகாசி , விருதுநகர்
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் சாத்தூர் , விருதுநகர்
    அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தேவதானம் , விருதுநகர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில் திருத்தங்கல் , விருதுநகர்
    அருள்மிகு வேணுகோபாலர் திருக்கோயில் சர்வசமுத்திர அக்ஹாரம் , விருதுநகர்
    அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில் சோலைக்கவுண்டன்பட்டி , விருதுநகர்
    அருள்மிகு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் வத்திராயிருப்பு , விருதுநகர்
    அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் காரிசேரி , விருதுநகர்
    அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் திருவண்ணாமலை , விருதுநகர்
    அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர் , விருதுநகர்
    அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல் , விருதுநகர்
    அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில் மாந்தோப்பு , விருதுநகர்
    அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில் வத்திராயிருப்பு , விருதுநகர்
    அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி , விருதுநகர்
    ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார், மேலப்புதுக்குடி,தூத்துக்குடி மாவட்டம் மேலப்புதுக்குடியில் , தூத்துக்குடி

TEMPLES

    பிரம்மன் கோயில்     அய்யனார் கோயில்
    முருகன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     பட்டினத்தார் கோயில்
    பாபாஜி கோயில்     முனியப்பன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அறுபடைவீடு     திருவரசமூர்த்தி கோயில்
    நவக்கிரக கோயில்     சனீஸ்வரன் கோயில்
    மற்ற கோயில்கள்     சிவாலயம்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சித்தர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்