|
||||||||
குழம்பிச் சண்டையிட்டு பிறகு புன்னகைத்து... |
||||||||
முட்டைகளை விட்டு வௌியேறிய
குஞ்சுகள் மாதிரி
மனிதர்கள்
மீண்டும் நகருக்கு வந்தார்கள்.
மரத்தை மரம் கிள்ளியது.
மண்ணோடு மண் உரஞ்சியது.
பொதுக் கட்டடங்களில் கூரைக்குப் பாரம் வைத்திருந்த
காகங்கள் கண்கெழித்துப் பார்த்தன.
இவர்களும், இவர்களுடைய கூத்தும்
என்று நினைத்தது தெருநாய்.
பல நாள் அடைப்பட்ட மனிதன்-
கோடுகளைப் போட்டுச் சீரழிந்த சாதி-
வருகின்றான் என்று
மாடு கத்தியது சாணம் விழ.
இவர்கள்
பழையபடி சிரித்தார்கள்.
எதுவுமே நடக்காத மாதிரி
ஆடை உடுத்துத் திரிந்தார்கள்.
அந்த ஆடைக்குள் இருந்தது
மானம்.
காக்கைக்கும் நாய்க்கும்
ஆடைகள் இல்லை.
முட்டைகளை விட்டு வௌியேறிய குஞ்சுகள் மாதிரி மனிதர்கள் மீண்டும் நகருக்கு வந்தார்கள்.
மரத்தை மரம் கிள்ளியது. மண்ணோடு மண் உரஞ்சியது. பொதுக் கட்டடங்களில் கூரைக்குப் பாரம் வைத்திருந்த காகங்கள் கண்கெழித்துப் பார்த்தன.
இவர்களும், இவர்களுடைய கூத்தும் என்று நினைத்தது தெருநாய்.
பல நாள் அடைப்பட்ட மனிதன்- கோடுகளைப் போட்டுச் சீரழிந்த சாதி- வருகின்றான் என்று மாடு கத்தியது சாணம் விழ.
இவர்கள் பழையபடி சிரித்தார்கள். எதுவுமே நடக்காத மாதிரி ஆடை உடுத்துத் திரிந்தார்கள். அந்த ஆடைக்குள் இருந்தது மானம்.
காக்கைக்கும் நாய்க்கும் ஆடைகள் இல்லை.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|