|
|||||
வள்ளுவர் கோட்டத்தில் திறக்கப்பட்டுள்ள குறளங்காடிக்கு பெரும் வரவேற்பு |
|||||
![]()
கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் தற்போது ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. நீரூற்று நடனம் உள்ளிட்ட மக்களைக் கவரும் பல்வேறு ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டுள்ளன. முத்தாய்ப்பாக, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே குறளங்காடி என்ற திருக்குறளுக்கேயான பிரத்தியேக வணிக மையம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. 275 சதுர அடிப் பரப்பில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குறளங்காடியில் 5 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை மதிப்புள்ள திருக்குறள், திருவள்ளுவர் சார்ந்த பொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.
கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவின் போது, திருக்குறளால் வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் முதல்முறையாக குறளங்காடி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது முதல்முறையாக வள்ளுவர் கோட்டத்தில் முதல் குறளங்காடி திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் நிற்கும் சிற்பங்கள், போதிமரத்தில் அமர்ந்திருக்கும் சிற்பங்கள், வள்ளுவர் கோட்டத்தின் சிற்பங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு விலைகளில் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கலைஞரின் குறளோவியம், திருக்குறள் கலைஞர் உரை உள்படத் தமிழில் திருக்குறள் சார்ந்து வெளிவந்துள்ள நூல்கள், பல்வேறு மொழி பெயர்ப்புகள், திருக்குறளுக்கேயான பிரத்தியேகமாக இயங்கும் வலைத்தமிழ் பதிப்பகத்தின் வெளியீடுகள், வள்ளுவர் படம் போட்ட பைகள், திருக்குறள் ஸ்டிக்கர்கள், திருக்குறள் பண்பாட்டுக் கையேடு, திருக்குறள் அலங்காரப் பதாகைகள், ஓவியங்கள், கைவினைப் பொருள்கள், ஓலைச்சுவடிகள், நாட்குறிப்புகள், வள்ளுவர் மற்றும் திருக்குறள் அச்சிடப்பட்ட பேனாக்கள், எழுதுகோல்கள், தொப்பிகள், ஆயத்த ஆடைகள், வள்ளுவ நெறியை விளக்கும் சிறார் நூல்கள் என ஏராளமான பொருள்கள் இந்த குறளங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்க வரும் மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த குறளங்காடிக்குச் சென்று பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்.
"குறளங்காடி மாவட்டம் தோறும் அமைக்கப்படும். இத்தகைய பொருட்கள் வெளிநாடுகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும். இணையதளம் வாயிலாகவும் இப் பொருட்களைப் பெறலாம். கடைகளின் வழியாகவும் கைவினைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் தயாரிப்பு வழியாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கிட்டும். மக்கள் பரிசுப் பொருட்களாகவும், நூல்களாகவும், அலுவல் பரிசுப் பொருட்களாகவும் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என்கிறார் குறளங்காடியின் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி.
|
|||||
by hemavathi on 29 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|