LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

விமானத்தில் பயணம் செய்கிறார்கள், தொலைக்காட்சியில் தலைகாட்டுகிறார்கள் என்று குருமார்களை சாடி ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு சத்குரு அளித்த பதில் இந்தப் பதிவில்…
சில குருமார்கள் தொலைக்காட்சியில் ஏன் அடிக்கடி தலைகாட்டுகிறார்கள்? குளிரூட்டப்பட்ட அறை, விமானப் பயணம் என்றெல்லாம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார்கள்?
சத்குரு:
தொலைக்காட்சி என்பது தொழில் திறனின் முன்னேற்றம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமா? துறவிகள் தங்கள் வேலையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா?
லட்சம் பேர் கூடியிருக்கும் இடத்தில், தொழில்திறனைப் பயன்படுத்தி மைக்கில் பேசாமல் குரு எப்படிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் படிக்கும் இந்தக் காகிதத்தில் அச்சாவது கூட தொழில் திறன்தான். குருவிடம் சென்று குருகுல வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா?
துறவிகளும், குருமார்களும் நடந்துதான் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மாட்டு வண்டியில் பயணம் செய்து ஓரிடத்தை அடைவதற்கு மிகுந்த காலம் பிடிக்கும் என்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது தவறாகுமா? அட, மாட்டு வண்டி என்பது கூட ஒருவிதத் தொழில் திறன் தானே.
வருடத்திற்கு நான்கு முறை வகுப்பெடுப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல நேர்கிறது. விமானம் இன்றி இது எப்படி சாத்தியம்? வாழ்நாள் மிகக் குறுகியது. வாழ்நாள் முடிவதற்குள் அதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
எவ்வளவு தூரம் மற்றவர்களுக்குப் பயன்பட முடியும் என்று வாழ்வைப் பற்றிய சிந்தனை உள்ளவர்கள், அதற்காக சில வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை ஆடம்பரம் என்று எப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியும்?
குரு என்றால் காற்று வராத குகையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பா? அவ்வளவு பழமையானவரா நீங்கள்? கற்காலத்தை விட்டு விலகி வாருங்கள். வாழ்வை வளர்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.