LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சமூகப் பங்களிப்பு

குத்தம்பாக்கம் இளங்கோ - தன்னிறைவு பெற்ற கிராமப் பொருளாதாரம் சாத்தியம் என்று சாதித்துக் காட்டியுள்ளார்

 

சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி பிடித்த 
பகுதி. கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், 
இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது. எப்படி இது சாத்தியம்? ஒரு தனி மனிதனின் சிந்தனை இதை 
சாத்தியப்படுதியுள்ளது. 
இரசாயனப் படிப்பில் பொறியியல் பட்டதாரியான இளங்கோ ஒரிஸ்ஸாவில் எண்ணை நிறுவனத்தில் தம் பணியைத் தொடங்கி சென்னையில் CSIR என்னும் 
மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும் பணி புரிந்தார். 90களில் சென்னையில் பணி புரியும் போது அவருக்குத் தம் ஊரான குத்தம்பாக்கம் 
(சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகில்) மிகவும் பின் தங்கி இருப்பதும் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் போன்ற சமூக விரோதிகளின் ஆதிக்கம் 
அதிகரித்திருப்பதும் வருத்தமளித்தன. இவற்றை மாற்றும் முடிவுடன் அவர் தம் பணியைத் தொடங்கினார். கள்ளச்சாராய எதிர்ப்பில் அவருக்கு மிரட்டல்கள் 
நிறைய வந்தன. ஒரு முறை அவரைத் தாக்கினர். அப்படித் தாக்கியவர்களுள் ஒருவர் பின்னாளில் அவரது உதவியாளரானார். 1994ல் தம் வேலையை விட்டு 
கூத்தம்பாக்கத்தில் தங்கித் தன் பணியைத் தொடங்கிய இவர் 1996ல் பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
கிராமத்தின் தன்னிறைவு என்பதையே இவரது மிகப் பெரிய சாதனை மற்றும் தொலைநோக்குக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு கிராமம் எப்படி இருக்க 
வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது குத்தம்பாக்கம் . சாதிப் பிரிவினைகளில் சிதறுண்டு கிடந்த கிராமத்து மக்களை ஒன்று படுத்தினார். இவருக்குத் 
திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவரது துணைவியார் பணிபுரிந்து குடும்பத்தின் பொறுப்பு மற்றும் பொருளாதாரத்தை கவனிக்கிறார். இவர் தம்மை 
இந்தக் கிராமத்தின் பணிக்கெனவே அர்ப்பணித்துள்ளார். தமது வெற்றி அதாவது இந்த கிராமத்தின் வெற்றி திட்டமிட்ட ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சாதனை. 
இதைக் கற்றுத் தேற உலக அளவிலும் இந்திய அளவிலும் இவரை அணுகும் போது இவர் அவர்களுக்கு வழிகாட்டுவதிலிருந்து பின் வாங்குவதில்லை. 
இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கங்கள் மற்றும் பயிலரங்கங்களில் இவர் உரையாற்றி இருக்கிறார்.
சுய உதவிக் குழுக்களை முறையாக ஒழுங்கு படுத்தி உருவாக்கி கிராம தன்னிரைவிற்கு பயன்படுத்தியுள்ளார். உலகத் தரம் வாய்ந்த சாலைகளைத் தம் 
கிராமத்தில் அமைத்திருக்கிறார். இவரது அணுகு முறை கிராமத் தன்னிறைவு என்பதே. குத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து 
வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் 
கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. ஐந்து கோடிக்கு மேல் ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு இந்த வலைப்பின்னலில் உள்ள மக்கள் 
அவ்வளவு பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, 
பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள் போன்ற வாழ்வின் 
தினசரி தேவைகளாகும். 
உதாரணமாக கிராமத்தில் சாக்கடை அமைக்கும் பணியில் மலிவான ஆனால் தரமான கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்து முடித்தார். 
இதற்கு தேவையானவற்றை சந்தையில் வாங்கினால் பல மடங்கு செலவாகி இருக்கும். ஆனால் இதையே காரணம் காட்டி சந்தையில் வாங்காதது முறைகேடு 
என்னும் அடிப்படையில் 1999ல் அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். ஆனால் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அது பின்னர் கைவிடப் பட்டது. 
ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற அந்தக் கிராமத்தின் அனைத்து மக்களும் இணைந்து பாடுபட வேண்டும். இளங்கோ குத்தம்பாக்கத்தில் உள்ள எல்லா 
குடும்பங்களின் விவரங்களை வைத்துக் கொண்டு அவர்களின் கல்வி, வருமானம் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்தின் 
தலைவர் குடும்பத்திற்கு திட்டமிடுவதுபோல் ஒட்டுமொத்த பஞ்சாயத்திற்கும்  திட்டம் தீட்டி செயல்படுத்தினார். இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 
40000 மாத வருமானத்துக்கு வழி ஏற்படுத்தியுள்ளார்.
இளங்கோ ரங்கசாமிக்கு இதுவரை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கும் விருது, The WEEK 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் (Man of the year 2013) 
என்னும் பாராட்டு போன்ற பல்வேறு பெருமைகளை பெற்றுள்ளார். 
இது எப்படி சாத்தியமானது? இதற்கு 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை 
மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த 
மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant போன்றவற்றை கொண்டு அரிசி 
மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் 
உள்சந்தையில், வலைப்பின்னலுக்கு உள்ளே விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட 
சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.நெல்லை 
அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் 
அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை, உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் 
ஆனது.
ஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற 
நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார்.
இந்த மாதிரி கிராமத்தை உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்.
இதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா? இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் 
செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.
இல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார். 
அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும். 
இந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா? இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம் 
என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று 
பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை 
சமாளிப்பதாகச் சொல்கிறார். 
அவர் இதுகுறித்து கூறுகையைல், சுதந்திரம் வாங்கி 61 வருஷம் ஆச்சு. இன்னும் நம்ம நாட்ல எத்தனை மக்கள் குடிசையிலும் கூரையில்லாமலும் கிடந்து கேவலப்படுறாங்க. கிராமப் பஞ்சாயத்தோட முதல் வேலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான கல் வீடு கட்டிக்க உதவி செய்றதுதான். அதைத்தான் நாங்க பண்ணினோம்.  இப்போ எங்க கிராமத்தில் ஒரு குடிசைகூட கிடையாது. எல்லோருக்கும் கல் வீடுதான்!'' என ஆரம்பித்தவர், மாற்றம் உருவான கதையைச் சொல்கிறார்...
''குற்றங்களும் தவறுகளும் எங்கே சார் உருவாகுது... வேலையில்லாததும் வறுமையும்தானே முதல் காரணம். நோய் என்னன்னு தெரியாம, மருந்துக்கு 
அலைஞ்சா எப்படிச் சரியாகும்? அதைக் கண்டுபிடிச்சு சரி பண்ணினதுதான் மாற்றத்துக்கான முதல் விதை. குடிசைகள்தான் கூடாது. கிராமங்களுக்கு குடிசைத் 
தொழில்கள் அவசியம் வேணும். அதை உருவாக்கி இந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்தோம். எங்க ஊர்ல விளையுற நெல்லை அரைக்க, நாங்களே 
ரைஸ் மில் ஆரம்பிச்சோம். துவரம்பருப்பை பாலிஷ் போடும் தொழிற்சாலையிலிருந்து வீடு கட்டப் பயன்படுத்தும் கட்டடப் பொருட்கள் வரை அத்தனையையும் 
நாங்களே தயாரிக்கிறோம். ஊர்ல காய்க்கிற தேங்காய்களில் இருந்து மொத்தமா எண்ணெய் எடுக்கிறோம். எண்ணெயில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம். 
மண்ணெணெய் ஸ்டவ்விலிருந்து தெரு விளக்குகளைப் பொருத்தத் தேவையான அலுமினியக் கூடுகள் வரை செஞ்சு வெளியூர்களுக்கு சப்ளை பண்றோம். 
எங்கள் கிராமத்து செய்நேர்த்தியைப் பார்த்துட்டு வெளிநாடுகள் வரை இப்போ ஆர்டர்கள் வருது. பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்துக்குத் தேவைப்படும் 
பாண்டேஜ் துணி முதல் ஸ்ரெட்ச்சர் துணி வரை பேக் பண்ணி அனுப்புவது குத்தம்பாக்கத்துப் பெண்கள்தான். ராணுவத்தினர் அடிபட்டால், உடனடி 
நிவாரணத்துக்குத் தேவைப்படும் 'திடீர்' ஐஸ் கட்டிகளையும் செய்து அனுப்புகிறோம். படித்த பெண்களுக்கு வேலை கொடுக்க பி.பி.ஓ. ஆரம்பிச்சிருக்கோம்'' 
என அழைத்துப் போய் சுற்றிக் காட்டுகிறார். 
இளங்கோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ''சார், இது என் சொந்த ஊர். என்னை வளர்த்த மண். கெமிக்கல் 
இன்ஜினீயரா நான் நல்லா இருக்கேன். ஆனா, என் ஊர் அப்படியே இருக்குதேன்னு வருத்தப்பட்ட நான், வேலையை வீசிட்டு ஊருக்கே வந்தேன். சாராயமும் 
சாதிச் சண்டையுமா கிடந்த கிராமத்தில் என்னால் முதலில் எதுவும் பண்ண முடியலை. அதிகாரம் கையில் இருந்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர 
முடியும்னு தோணுச்சு. தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவங்ககூட என் நல்ல நோக்கத்தைப் 
புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஊர் நன்மைதான் முக்கியம்னு ஒவ்வொரு வங்கியா ஏறி இறங்கினேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு கதவையும் 
ஓயாமத் தட்டினேன். அரசிலும் வங்கிகளிலும் என்னவெல்லாம் திட்டங்கள் இருக்கோ, அத்தனையையும் குத்தம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தேன். நினைச்சது 
நான்... ஆனா, ஊரே ஒண்ணு கூடி நடத்திக்காட்டினாங்க. இன்னிக்கு, சுத்துவட்டாரமே மரியாதையா, முன்னோடியாப் பார்க்கிற அளவுக்கு 
குத்தம்பாக்கத்தைச் சுத்தம்பாக்கம் ஆக்கிட்டோம்!'' என்கிறார் இளங்கோ நெகிழ்ச்சியாக! 
 ''இந்த ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, தமிழ்நாடு முழுக்கப் பரவணும் சார். உண்மையில் கிராமத்தின் தேவைகள் ரொம்பக் குறைவு. 
போக்குவரத்து, சரியான சாலை வசதி, மின்சாரம், சுத்தமான தண்ணீர், சின்ன மருத்துவமனை, ஆர்வமுள்ள ஆசிரியர்களைக்கொண்ட தரமான 
பள்ளிக்கூடம். இதுதான் முதல் தேவைகள். விவசாயத்தை நவீனமயமாக்கவும், அதை லாபகரமான, மரியாதைக்குரிய தொழிலா மாற்றுவதும் அப்புறம் 
தன்னால நடக்கும். மாற்றம் என்பது முதலில் நம் மனசுக்குள் இருந்து ஆரம்பிக்கணும் சார். 
நம் வாழ்வாதாரமே கிராமங்கள்தான். காந்தி கண்ட உண்மையான கிராம ராஜ்யம் இன்னும் கனவாவே இருந்தா எப்படிங்க. வாங்க, எல்லோருமா சேர்ந்து 
அந்தக் கனவை நனவாக்குவோம்!'' என இளங்கோ அழைக்கிறார்!
இவரோடு கருத்து பரிமாற: panchayat@yahoo.com

சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி பிடித்த பகுதி. கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால்,  இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது. எப்படி இது சாத்தியம்? ஒரு தனி மனிதனின் சிந்தனை இதை சாத்தியப்படுதியுள்ளது. 


இரசாயனப் படிப்பில் பொறியியல் பட்டதாரியான இளங்கோ ஒரிஸ்ஸாவில் எண்ணை நிறுவனத்தில் தம் பணியைத் தொடங்கி சென்னையில் CSIR என்னும்  மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும் பணி புரிந்தார். 90களில் சென்னையில் பணி புரியும் போது அவருக்குத் தம் ஊரான குத்தம்பாக்கம்  (சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகில்) மிகவும் பின் தங்கி இருப்பதும் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் போன்ற சமூக விரோதிகளின் ஆதிக்கம்  அதிகரித்திருப்பதும் வருத்தமளித்தன. இவற்றை மாற்றும் முடிவுடன் அவர் தம் பணியைத் தொடங்கினார். கள்ளச்சாராய எதிர்ப்பில் அவருக்கு மிரட்டல்கள்  நிறைய வந்தன. ஒரு முறை அவரைத் தாக்கினர். அப்படித் தாக்கியவர்களுள் ஒருவர் பின்னாளில் அவரது உதவியாளரானார். 1994ல் தம் வேலையை விட்டு  கூத்தம்பாக்கத்தில் தங்கித் தன் பணியைத் தொடங்கிய இவர் 1996ல் பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று பஞ்சாயத்துத் தலைவராகப் பொறுப்பேற்றார்.


கிராமத்தின் தன்னிறைவு என்பதையே இவரது மிகப் பெரிய சாதனை மற்றும் தொலைநோக்குக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு கிராமம் எப்படி இருக்க  வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது குத்தம்பாக்கம் . சாதிப் பிரிவினைகளில் சிதறுண்டு கிடந்த கிராமத்து மக்களை ஒன்று படுத்தினார். இவருக்குத்  திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவரது துணைவியார் பணிபுரிந்து குடும்பத்தின் பொறுப்பு மற்றும் பொருளா தாரத்தை கவனிக்கிறார். இவர் தம்மை  இந்தக் கிராமத்தின் பணிக்கெனவே அர்ப்பணித்துள்ளார். தமது வெற்றி அதாவது இந்த கிராமத்தின் வெற்றி திட்டமிட்ட ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சாதனை. 


இதைக் கற்றுத் தேற உலக அளவிலும் இந்திய அளவிலும் இவரை அணுகும் போது இவர் அவர்களுக்கு வழிகாட்டுவதிலிருந்து பின் வாங்குவதில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கங்கள் மற்றும் பயிலரங்கங்களில் இவர் உரையாற்றி இருக்கிறார். சுய உதவிக் குழுக்களை முறையாக ஒழுங்கு படுத்தி உருவாக்கி கிராம தன்னிரைவிற்கு பயன்படுத்தியுள்ளார். உலகத் தரம் வாய்ந்த சாலைகளைத் தம்  கிராமத்தில் அமைத்திருக்கிறார். இவரது அணுகு முறை கிராமத் தன்னிறைவு என்பதே. குத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. ஐந்து கோடிக்கு மேல் ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு இந்த வலைப்பின்னலில் உள்ள மக்கள் 
அவ்வளவு பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள் போன்ற வாழ்வின் தினசரி தேவைகளாகும். 


உதாரணமாக கிராமத்தில் சாக்கடை அமைக்கும் பணியில் மலிவான ஆனால் தரமான கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்து முடித்தார்.  இதற்கு தேவையானவற்றை சந்தையில் வாங்கினால் பல மடங்கு செலவாகி இருக்கும். ஆனால் இதையே காரணம் காட்டி சந்தையில் வாங்காதது முறைகேடு  என்னும் அடிப்படையில் 1999ல் அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். ஆனால் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அது பின்னர் கைவிடப் பட்டது. 


ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற அந்தக் கிராமத்தின் அனைத்து மக்களும் இணைந்து பாடுபட வேண்டும். இளங்கோ குத்தம்பாக்கத்தில் உள்ள எல்லா  குடும்பங்களின் விவரங்களை வைத்துக் கொண்டு அவர்களின் கல்வி, வருமானம் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒரு குடும்பத்தின்  தலைவர் குடும்பத்திற்கு திட்டமிடுவதுபோல் ஒட்டுமொத்த பஞ்சாயத்திற்கும்  திட்டம் தீட்டி செயல்படுத்தினார். இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 40000 மாத வருமானத்துக்கு வழி ஏற்படுத்தியுள்ளார்.


இளங்கோ ரங்கசாமிக்கு இதுவரை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கும் விருது, The WEEK 2013ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் (Man of the year 2013)  என்னும் பாராட்டு போன்ற பல்வேறு பெருமைகளை பெற்றுள்ளார். 


இது எப்படி சாத்தியமானது? இதற்கு 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை  மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant போன்றவற்றை கொண்டு அரிசி மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் உள்சந்தையில், வலைப்பின்னலுக்கு உள்ளே விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட 
சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.நெல்லை அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை, உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் ஆனது.


ஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார். இந்த மாதிரி கிராமத்தை உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார். இதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா? இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.


இல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார்.  அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும்.  இந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா? இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம்  என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை  சமாளிப்பதாகச் சொல்கிறார். 


அவர் இதுகுறித்து கூறுகையைல், சுதந்திரம் வாங்கி 61 வருஷம் ஆச்சு. இன்னும் நம்ம நாட்ல எத்தனை மக்கள் குடிசையிலும் கூரையில்லாமலும் கிடந்து கேவலப்படுறாங்க. கிராமப் பஞ்சாயத்தோட முதல் வேலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான கல் வீடு கட்டிக்க உதவி செய்றதுதான். அதைத்தான் நாங்க பண்ணினோம்.  இப்போ எங்க கிராமத்தில் ஒரு குடிசைகூட கிடையாது. எல்லோருக்கும் கல் வீடுதான்!'' என ஆரம்பித்தவர், மாற்றம் உருவான கதையைச் சொல்கிறார்...


''குற்றங்களும் தவறுகளும் எங்கே சார் உருவாகுது... வேலையில்லாததும் வறுமையும்தானே முதல் காரணம். நோய் என்னன்னு தெரியாம, மருந்துக்கு  அலைஞ்சா எப்படிச் சரியாகும்? அதைக் கண்டுபிடிச்சு சரி பண்ணினதுதான் மாற்றத்துக்கான முதல் விதை. குடிசைகள்தான் கூடாது. கிராமங்களுக்கு குடிசைத்  தொழில்கள் அவசியம் வேணும். அதை உருவாக்கி இந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்தோம். எங்க ஊர்ல விளையுற நெல்லை அரைக்க, நாங்களே ரைஸ் மில் ஆரம்பிச்சோம். துவரம்பருப்பை பாலிஷ் போடும் தொழிற்சாலையிலிருந்து வீடு கட்டப் பயன்படுத்தும் கட்டடப் பொருட்கள் வரை அத்தனையையும் நாங்களே தயாரிக்கிறோம். ஊர்ல காய்க்கிற தேங்காய்களில் இருந்து மொத்தமா எண்ணெய் எடுக்கிறோம். எண்ணெயில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம். மண்ணெணெய் ஸ்டவ்விலிருந்து தெரு விளக்குகளைப் பொருத்தத் தேவையான அலுமினியக் கூடுகள் வரை செஞ்சு வெளியூர்களுக்கு சப்ளை பண்றோம். 


எங்கள் கிராமத்து செய்நேர்த்தியைப் பார்த்துட்டு வெளிநாடுகள் வரை இப்போ ஆர்டர்கள் வருது. பல ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்துக்குத் தேவைப்படும்  பாண்டேஜ் துணி முதல் ஸ்ரெட்ச்சர் துணி வரை பேக் பண்ணி அனுப்புவது குத்தம்பாக்கத்துப் பெண்கள்தான். ராணுவத்தினர் அடிபட்டால், உடனடி  நிவாரணத்துக்குத் தேவைப்படும் 'திடீர்' ஐஸ் கட்டிகளையும் செய்து அனுப்புகிறோம். படித்த பெண்களுக்கு வேலை கொடுக்க பி.பி.ஓ. ஆரம்பிச்சிருக்கோம்'' என அழைத்துப் போய் சுற்றிக் காட்டுகிறார். 

 

இளங்கோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். ''சார், இது என் சொந்த ஊர். என்னை வளர்த்த மண். கெமிக்கல்  இன்ஜினீயரா நான் நல்லா இருக்கேன். ஆனா, என் ஊர் அப்படியே இருக்குதேன்னு வருத்தப்பட்ட நான், வேலையை வீசிட்டு ஊருக்கே வந்தேன். சாராயமும் சாதிச் சண்டையுமா கிடந்த கிராமத்தில் என்னால் முதலில் எதுவும் பண்ண முடியலை. அதிகாரம் கையில் இருந்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு தோணுச்சு. தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவங்ககூட என் நல்ல நோக்கத்தைப்  புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஊர் நன்மைதான் முக்கியம்னு ஒவ்வொரு வங்கியா ஏறி இறங்கினேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு கதவையும் ஓயாமத் தட்டினேன். அரசிலும் வங்கிகளிலும் என்னவெல்லாம் திட்டங்கள் இருக்கோ, அத்தனையையும் குத்தம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தேன். நினைச்சது 

நான்... ஆனா, ஊரே ஒண்ணு கூடி நடத்திக்காட்டினாங்க. இன்னிக்கு, சுத்துவட்டாரமே மரியாதையா, முன்னோடியாப் பார்க்கிற அளவுக்கு குத்தம்பாக்கத்தைச் சுத்தம்பாக்கம் ஆக்கிட்டோம்!'' என்கிறார் நெகிழ்ச்சியாக!  ''இந்த ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, தமிழ்நாடு முழுக்கப் பரவணும் சார். உண்மையில் கிராமத்தின் தேவைகள் ரொம்பக் குறைவு. போக்குவரத்து, சரியான சாலை வசதி, மின்சாரம், சுத்தமான தண்ணீர், சின்ன மருத்துவமனை, ஆர்வமுள்ள ஆசிரியர்களைக்கொண்ட தரமான பள்ளிக்கூடம். இதுதான் முதல் தேவைகள். விவசாயத்தை நவீனமயமாக்கவும், அதை லாபகரமான, மரியாதைக்குரிய தொழிலா மாற்றுவதும் அப்புறம் தன்னால நடக்கும். மாற்றம் என்பது முதலில் நம் மனசுக்குள் இருந்து ஆரம்பிக்கணும் சார். நம் வாழ்வாதாரமே கிராமங்கள்தான். காந்தி கண்ட உண்மையான கிராம ராஜ்யம் இன்னும் கனவாவே இருந்தா எப்படிங்க. வாங்க, எல்லோருமா சேர்ந்து அந்தக் கனவை நனவாக்குவோம்!'' என இளங்கோ அழைக்கிறார்!


இவரோடு கருத்து பரிமாற: panchayat@yahoo.com

by Swathi   on 12 Apr 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
முத்துராமலிங்க தேவர் முத்துராமலிங்க தேவர்
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலம் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலம்
தடம் பதித்த இயக்குநர் சேரன் தடம் பதித்த இயக்குநர் சேரன்
புகழ்பெற்ற தமிழ்‌ அறிஞர்‌ ஜி.யு.போப்‌புக்கு அவர் பிறந்த கனடாவின்‌ பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவில்‌ உள்ள பெடெக்‌ நகரத்தில்‌ சிலை வைக்கிறது கனேடிய தமிழர்‌ பேரவை புகழ்பெற்ற தமிழ்‌ அறிஞர்‌ ஜி.யு.போப்‌புக்கு அவர் பிறந்த கனடாவின்‌ பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவில்‌ உள்ள பெடெக்‌ நகரத்தில்‌ சிலை வைக்கிறது கனேடிய தமிழர்‌ பேரவை
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார். பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
கருத்துகள்
23-Mar-2017 02:36:43 வெங்கடேசன் சிப் said : Report Abuse
ரொம்ப நல்ல காரியம் பண்ணறீங்க. பெருமையா இருக்கு நீடுடி வாஷனும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.