|
||||||||
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் |
||||||||
குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்கத் தொடங்குகிறது:
குவைத் அரசின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ் அக்டோபர்-26,2025 முதல் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வணிக(பயணிகள்) விமானங்களை மீண்டும் இயக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
புதிய விமான இயக்கத் திட்டப்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன், வியாழன் மற்றும் வெள்ளி என்று நான்கு விமானங்களை இயக்கும். கொழும்பு தனது பயணிகளுக்கு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகத் திகழ்வதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் தங்கள் விமானப் பயணச்சீட்டுகளைத் தற்போது முன்பதிவு செய்யலாம் எனவும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகளுக்குக் கூடுதல் விருப்பங்களைக் கண்டறிந்து உலகளாவிய வழித்தடங்களில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது
|
||||||||
| by hemavathi on 02 Sep 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|