LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 25 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

இரவு மணி எட்டு: தன் பேச்சைத் தொடங்கிய பேச்சாளர் "இந்த இனிய மாலை நேரத்தில்' என்று தொடங்கினார். உடனே, இல்லை மாலை நேரம் போய்விட்டது. இப்போது இரவாயிற்று என மாற்றினார். உண்மையில் பத்துமணி வரை மாலை என்பதுதான் தமிழர் வகுத்துள்ள கணக்கு.
காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்), இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓராண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்)
"சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வுத் தீர்வைகளும்' எனும் தலைப்பில் ஒரு நூல் நமது மதிப்புரைக்காக அனுப்பப்பட்டு வந்திருந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு நம்மைத் திகைக்க வைத்தது. நீளமாக இருப்பதால் அன்று. ஆய்வு தீர்வை எனும் சொல் கண்டு மலைத்தோம். ஆயத் தீர்வை நாம் அறிந்ததுண்டு. இஃது என்ன ஆய்வுத் தீர்வை? ஆய்வுத் தீர்வுகள் எனும் சொல்லைத் தீர்வைகள் (நிலவரி) ஆக்கியமை எத்துணை பெரிய தவறு!
நூல்கள் பதிப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய பொது நூலகத்துறை இயக்குநரை, பொதுநலத்துறை இயக்குநர் என்று ஒரு நாளிதழ் அச்சிட்டிருந்தது. சில எழுத்துகள் மாறி அச்சுப் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய பொருள் வேறுபாடு? நூலகத்துறையை நலத்துறையாக ஆக்கிவிட்டதே! ஆங்கிலப் பத்திரிகைகளில் இப்படி வந்திருந்தால் ஆசிரியர்க்குக் கடிதம் எழுதி கிழி கிழி என்று கிழித்திருக்கமாட்டார்களா?
பத்து ஆண்டுகள் முன் ஒரு வார ஏட்டில் ஒரு கவிதை படித்தேன். அதில் "அக்கினிப் பிரவேசம் அயோத்தியில் நடந்தது' என்று ஒரு வரி. இராமன்  இராவணனைக் கொன்ற பின், சீதையை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பும் முன்பு, சீதை அப்பழுக்கற்றவள் எனக் காட்டத் தீக்குளிக்கச் சொன்னான். அந்த அக்கினிப் பிரவேசம் இலங்கையில் நடைபெற்றது. இவரோ அயோத்தியில் என்று எழுதியுள்ளார். அரைகுறையாய் அறிந்த செய்தி கொண்டு மோனை அழகுக்காக இப்படி எழுதினாரோ!
தஞ்சை மாவட்டத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றில், "பஸ் நின்ற பின் இரங்கவும்' என்று எழுதியிருக்கிறார்கள். "ஐயோ இந்த ஓட்டைப் பேருந்தில் பயணம் செய்தோமே' என்று தன்னிரக்கம் கொள்ள வேண்டியதுதான்.
இதுமட்டுமன்று: டிரைவருக்கு இடையூராகப் பேசாதீர்' என்று ஓர் அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது.
பட்டுக்கோட்டையில் ஏறினால் தஞ்சாவூரில்தான் இறங்க வேண்டும் போலும். இடையில் உள்ள ஊர்கள் பற்றிப் பேசக் கூடாதாம். தமிழ் எப்படி விளையாடுகிறது!
தொகையும் விரியும்
"வேற்றுமை உருபு விரிந்து வரும்போது' என்று எழுதியுள்ளீர்கள்? விரிந்து வருதல் என்றால் என்ன என ஓர் அன்பர் வினவினார். தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்) விரி எனில் விரிந்து வருதல் (வெளிப்படையாக வருதல்) மறைந்தும் வெளிப்படையாகவும் வரும் என்றால் விளங்கவில்லையே! எவை அப்படி வரும்? வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என ஐந்து. இவற்றின் உருவுகள் மறைந்துவந்தால், வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்பர் இலக்கண நூலார்.
"வீடு சென்றான்' எனில் வீட்டிற்குச் சென்றான் எனப் பொருள். இதில் "கு' எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம். வீடு சென்றான் என்பதை வீட்டிற்குச் சென்றான் என எழுதும்போது  இது வேற்றுமை விளி.
எரிந்த, எரிகின்ற, எரியும் தழல் எரிதழல்- இது வினைத் தொகை. நேற்றும் எரிந்த தழல்; இன்று எரிகின்ற தழல், நாளை எரியும் தழல் என முக்காலமும் உணர்த்தும். எரிகின்ற தழலில் எண்ணெய் ஊற்றினாற் போல- எரிகின்ற என்பதில் காலம் வெளிப்படை. இது தொகையாகாது.
செந்தாமரை -  இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம்.
கபில பரணர் வந்தார். இது கபிலரும் பரணரும் வந்தார்கள் என்று விரியும். உம் எனும் இடைச் சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை. "உம்' வெளிப்பட்டு நின்றால் அது விரி.
புலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும். போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.