உலகப் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் 89வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மதிப்பிற்குரிய லதா சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடைய அபூர்வமான பணியினால், கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்புக்கு உரியவராக உள்ளீர்கள். நம்முடைய நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் மிக்கவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் அமைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்து உள்ளார்.
|