LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை

எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களின் பிசின் வடிதல் நோய் எனப்படும் பைடடோப்தோரா, போராசிடிகா, பி.பளமிவோரா, பி.சைட்ரோதாரா நோய், கரணை நோய் எனப்படும் எல்சினோ பசெட்டி, சொறிநோய் எனப்படும் ஸ்சண்தோமோனஸ் கேம்பஸ்ட்ரைஸ் பிவி சிட்ரை நோய், தண்டு நலிவு நோய் அல்லது விரைவு நலிவு நோய் எனப்படும் டிரைடிசா நச்சுயிரி, தோலுரிநோய் எனப்படும் நச்சு நோய், பச்சையாதல் எனப்படும் லிபிரோபெக்டர் ஏசியாடிகம் நோய் போன்றவை முக்கியமானது ஆகும்.


பிசின் வடிதல் நோய் தாக்கியதன் முதல் அறிகுறியாக மரப்பட்டையில் கரும் கறையா தோன்றி பிபின்பு மரக்கட்டை வரை இந்நோய் பரவும். மரப்பட்டையின் அடிப்புரத்தில் இந்நோய் பரவி கம்பி வளையம் போல் தோன்றி மரத்தையே அழித்துவிடும். மரப்பட்டைகளின் சில பகுதிகள் வறண்டும், சுருங்கி, வெடித்தும் மற்றும் சிறுசிறு துண்டுகளாக காணப்படும். இதன் விளைவுகள் அதிகரித்து தண்டுபகுதியில் உள்ள மரப்பட்டையிலிருந்து பிசின் வடிவதைக் காணலாம். இதன் பாதிப்பு, வேரின் நுனிவரை பாயும். இந்நோய் தாக்காதவாறு நுனி வேர்கள் அல்லது அடி தண்டை தீங்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டையை போர்டியாக்ஸ் பசையினை தடவ வேண்டும்.


கரணை நோய் பயிரின் இலைகள், குச்சிகள் போன்றவற்றை தாக்கும்.. மழைக்காலங்களில் எலுமிச்சையை இந்நோய் தாக்கும். இந்நோய் முதலில் இளஞ்சிவப்பு புள்ளியாகக் காணப்படும். இலை திசுக்கள் உருக்குலைந்து, புண் போன்று காணப்படும். இவ்வாறு நோயினால் தாக்கப்பட்டு உருக்குலைந்த இலைகளின் திசுக்கள் மேலும் தழும்பு போன்ற நிலத்தில் தோன்றி பின் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். பொதுவாக இலையின் அடிப்புறத்தில் புள்ளி போன்று காணப்படும். இப்புள்ளிகள் இலையில் ஊடுருவி இருபுறமும் காணப்படும். பழங்களில் சொறி அல்லது பொடி போன்று காணப்படும். முதிராத பழங்கள் பால் போன்ற நிறத்திலும் மற்றும் முதிர்ந்த பழங்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இப்பழங்களில் பிஞ்சு நிலையிலும் உதிர்ந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.


சொறி நோயினை ஏற்படுத்தும் பேக்டீரிய இலைத்துளைகள் மூலமாகவோ பூச்சி மற்றும் காற்றில் அசையும் முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ ஊண் ஊட்டும் தாவரத்திற்குள் நுழைகிறது. இவை இலையின் உயிரணுக்களுக்கிடையேயுள்ள இடங்களில் இனப்பெருக்கமடைந்து திசுவரையிலுள்ள நடுச்சுவர் பகுதியை அழித்து விடுகின்றன. இவை இலையின் புறணிப்பகுதியில் நிலையாகின்றன. இவ்விடத்தில் சொறி போன்ற வளர்ச்சி ஏற்பட்டு பேக்டீரியா அதிகளவில் உற்பத்தி செய்யபடுகின்றன. இந்நோய் 20 முதல் 350 சென்டிகிரேடு வரை வெப்ப அளவில் நல்ல மழியுள்ள காலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. நோய் உண்டாவதற்கு இலைகளில் குறைந்தது 20 நிமிடங்களுக்குள் ஈரம் இருக்க வேண்டும். இந்நோயைக் கட்டுப்படுத்த நோயுற்று, கீழே விழுந்து கிடக்கும் இலைகள் மற்றும் தீக்குச்சிகள் முதலியவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும். நோயில்லாத மரத்திலிருந்தே கன்றுகள் தயார் செய்ய பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு முன் கன்றுகள் உள்ள இடத்தில் இலைகள் நன்றாக நனையுமாறு தகுந்த மருந்தை தெளிக்க வேண்டும். பழத்தோட்டங்களில் நோயுற்ற மரங்களில் நோயுற்ற சிறுகுச்சிகளை வெட்டிய பின்னர் தகுந்த மருந்துகளைத் தெளிக்க வேண்டும். மரம் துளிர்ந்துவிடும் ஒவ்வொரு சமயமும் மரத்தின் பகுதிகள் அனைத்தும் நன்றாக நனையுமாறு மருந்து தெளித்த மிகவும் அவசியம். மரங்களை செழிப்பான தன்மையுடன் வைத்திருக்க நன்கு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எலுமிச்சையில் தோன்றும் இலை துளைப்பான்கள் இநோயை பரப்புவதால் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.


தண்டுநலிவு நோய் எலுமிச்சை நாற்றுகளை எளிதில் தாக்கும். இந்நோய் தாக்கும் பயிரின் வேர்ப்பகுதி அழுகி, கிளைகள் அழிந்துவிடும். பழங்கள் குறைந்து செடி மட்டும் எலும்புக்கூடு போல் காணப்படும். எலுமிச்சை இலைகளில் அதிகளவில் நரம்புப்புள்ளி காணப்படும். மரத்தின் வளர்ச்சி குறைந்து விடும். பழசாகுபடி குறைந்து பழங்களின் அளவு சிறியதாக இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.


பச்சையாதல் நோய் தாக்கிய பயிர்கள், அனைத்து வகையான எலுமிச்சைகளில் வேர்பகுதிகளில் காணப்படும். இலையின் வளர்ச்சி குறைதல், குறைந்த அளவிலான இலைகள், குச்சிகள் அழிதல், பாதிக்கப்பட்ட பயிர்கள் பச்சையாதல் போன்றவற்றை இந்நோய் தாக்கும் பயிரின் அறிகுறிகளாகும். இவற்றைக்கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். நுண்ணுயிரி போன்ற நோய்கள் தாக்காத கன்றுகளைப் பயன்படுத்தலாம்.

by Swathi   on 20 Mar 2014  1 Comments
Tags: Lemon Crop Disease   எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்கள்                 
 தொடர்புடையவை-Related Articles
எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை
கருத்துகள்
01-Sep-2015 08:21:50 தீப said : Report Abuse
மாவு பூச்சியை கட்டுபடுத்துவது எப்படி. தயவு செய்து யோசனை கூறுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.