LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!

தகவல் பெறும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அங்குசம்' திரைப்படத்தை இயக்கிய திரு. மனு கண்ணன் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது.

முன்னதாக திரு. மனு கண்ணன் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுவின் மீது ஒரு மாத காலத்திற்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. வணிக வரித்துறை அமைச்சரின் உதவியாளர் இந்தபடத்திற்கு வரி விலக்கு அளிக்க 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக திரு. மனு கண்ணன் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் லோக் சத்தா கட்சி சார்பில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் முடிவை விரைவில் பரிசீலிக்குமாறு ஒரு இணையதள விண்ணப்பமும், இது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவலும் கோரப்பட்டன. அதற்கு அடுத்த நாளே திரைப்படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. எனினும் அவர் மீது அவதூறு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வழக்கு இயற்கை நீதி கொள்கைகளுக்கு எதிரான ஒன்று. லஞ்ச ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவர் மீது வழக்கு தொடுத்து, அவர் குற்றம் சாட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அரசின் இந்த போக்கு நகைப்புக்குரியது. மனு கண்ணன் குற்றம் சாட்டிய வணிக வரித்துறை அமைச்சர் மற்றும் அவரின் உதவியாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று லோக் சத்தா கட்சி கோருகிறது. அந்த விசாரணை முடிந்த பிறகே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் மற்றும் லஞ்சம் ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான சமூக ஆர்வலர்களுக்கும் லோக் சத்தா கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்த நேரத்தில் நினைவுபடுத்த விழைகிறோம். மேலும் தகவல் உரிமை சட்டத்தை சாமானிய மக்களிடையேகொண்டு சென்று அவர்களை அதிகாரப்படுத்தும் எனவும் லோக் சத்தா கட்சி உறுதி கொள்கிறது. அரசியல் கட்சிகளும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என்ற தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கிணங்க தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் ஆகியோரை நியமித்த முதல் அரசியல் கட்சி என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

Lok Satta Party condemns defamation case against RTI activist

The Lok Satta Party condemns the defamation case filed against Mr. Manu Kannan, director of Angusam a movie aimed at spreading awareness about RTI
 
Earlier Mr.Manu Kannan had applied for tax exemption for the movie and his petition was held up for more than a month for want of bribe. It was reported that the PA of the Minister of Commercial taxes had approached him seeking a bribe of Rs 5 lakh to give tax exemption for the movie.
 
Lok Satta Party raised an online petition to consider the tax exemption petition for the movie and filed RTI seeking details regarding the same. The tax exemption certificate was delivered the next day. However a defamation suit has also been filed against Mr. Manu Kannan by the government.
 
Lok Satta Party finds this defamation suit as a mockery of natural justice. The government will become a laughing-stock if it takes action an activist who is fighting against corruption and bribery, instead of taking action against the corrupt. The Lok Satta Party demands an investigation on the accusation made by Mr. Manu Kannan on the Commercial taxes minster and his PA. The government should take further action only after the investigation is completed.
 
Lok Satta would like to reiterate its stand on supporting RTI activists and whistle-blowers. Lok Satta stands by its commitment of empowering the common man by propagandizing the RTI act. It is also to be noted that Lok Satta is the first and only political party to appoint Public Information officer and Appellate authority under the act.
 
by Swathi   on 26 Oct 2013  0 Comments
Tags: லோக் சத்தா கட்சி   லஞ்சம்   அங்குசம்   தகவல் பெரும் உரிமை சட்டம்   Lok Satta Party   Lok Satta Katchi   RTI  
 தொடர்புடையவை-Related Articles
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்: தமிழ்நாடு லோக் சத்தா கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வாங்கிய வாக்குகளின் விபரம்:
லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !! லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !!
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்
லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !! லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !!
அங்குசம் திரைவிமர்சனம் - சமூக ஆர்வலர்களின் பார்வையில் !! அங்குசம் திரைவிமர்சனம் - சமூக ஆர்வலர்களின் பார்வையில் !!
லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !! லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !!
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.