LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன?

நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாரதீய ஜனதா கட்சிக்கும், தமிழக அளவில் அதிக இடங்களில் வென்ற அதிமுகவிற்கும், நேர்மையான அரசியல் மூலம் பாராளுமன்றத்தில் தடம் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து வேர்பாளர்களுக்கும் லோக்சத்தா கட்சி தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

தமிழகத்தில் அதிக இடங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில், மாநிலம் மற்றும் உள்ளாட்சி ஆகிய மூன்று இடங்களிலும் அதிக பெரும்பான்மையோடு மக்கள் தங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இதனை நல்ல முறையில் பயன்படுத்தி சில முக்கிய தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வாய்ப்பாக அதிமுக இதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.

முதலாவதாக தண்ணீர் பிரச்சனை. தமிழகத்தின் பல மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்ட நிலமாக மாறிவருகிறது. மத்திய ஆட்சி அமைக்கும் புதிய அரசோடு பேசி காவிரி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதே சமயம் தமிழகத்தில் வெகு காலமாக தூர் வாராமல் இருக்கும் நீர்நிலைகளை தூர்வாருவதும், தேவைக்கு ஏற்ப ஆற்று மணலை பயன்படுத்தி, அதிக அளவில் அது கொள்ளை போவதையும் தடுக்க வேண்டும்.

அடுத்ததாக தமிழக மீனவர் பிரச்சனைக்கும் ஒரு நிரந்தர தீர்வு காண தக்க சமயம் இது. இந்திய இலங்கை மீனவர்கள் சமீபத்தில் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எல்லை தாண்டி சென்று நம்மவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க, ஆழ் கடல் மீன் பிடிப்பிற்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு பங்கு நிதியும், மாநில அரசு ஒரு பங்கு நிதியும் கொண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் ஆழ் கடல் மீன்பிடிப்பிற்கான விசை படகுகள் வழங்கலாம். லோக்சத்தா தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும் இதை முக்கிய வாக்குறுதியாக தந்தது.

மூன்றாவதாக தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை தீர்க தென்னிந்தியாவிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்குமான மின்தடத்தை வலுப்படுத்தி அதன் திறனை அதிகரிக்க வேண்டும். சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா  ஆகிய மாநிலங்களில் உள்ள தமிழகத்தின் நிலக்கரி சுரங்கங்களை வெட்டி எடுக்கும் பணிகளை துரிதமாக்கி, வெளி நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை துவங்க வேண்டும்.

மிக முக்கியமாக அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்காக அல்லல்படும் நிலை மாற 'சேவை பெறும் உரிமை' சட்டத்தை நம் மாநிலத்திலும் , இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரவும் குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பான ஒரு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே போல் ஊழலை ஒழிக்க வலுவான லோக்ஆயுக்தாவையும் விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் லோக்சத்தா கட்சி வலியுறுத்துகிறது.​

Loks​atta Party congratulates BJP for emerging as the party with single largest majority, ADMK for securing maximum number of seats in Tamil Nadu, AAP for opening account in parliament by means of clean politics and all the victorious candidates.

Loksatta Party suggests that the ADMK government should use this golden opportunity to settle various Tamil Nadu specific issues.

First and foremost is water scarcity issue. This issue is haunting many districts in TN, particularly the delta and southern districts.The government of Tamil Nadu should hold talks with the new government in the Centre to amicably settle the Cauvery issue. It should take steps to perform regular maintenance of water resources and should prevent the theft of riverbed sand.

The issue of Tamil Nadu fishermen has been highly politicized and the failure of recent talks between Indo-Lankan fishermen suggests that this issue should be resolved at the earliest. To prevent Indian fishermen crossing the boundary, the govt should facilitate deep-sea fishing by providing grants to the fishermen to buy deep-sea fishing boats. These grants can jointly be funded by the Centre and State governments. Loksatta has also stressed this point in its manifesto.

Power corridors between South and rest of India can be strengthened and its capacity should be increased

. Mining of TN's captive mines in Chhattisgarh & Odisha should be done faster to avoid import of coal. Building more central and state owned power plants in TN along with the above recommendations will help us to get relieved from the issue of power shortage in TN.

And very importantly, 'Right To Services' act should be implemented in Tamil Nadu to eliminate bribery for getting government services. The MPs should voice in favor of this act in parliament and get this implemented in other Indian states as well. Also to investigate errant authorities, a strong institution (Lok Ayukta) should be established in the state.

by Swathi   on 16 May 2014  0 Comments
Tags: லோக்சத்தா கட்சி   Loksatta   Loksatta Party   2014 Elected MP\'s           
 தொடர்புடையவை-Related Articles
உலக கழிவறை நாள் – திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராமத்திற்கு ஊக்கத் தொகை.. உலக கழிவறை நாள் – திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராமத்திற்கு ஊக்கத் தொகை..
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன? வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன?
சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​ சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.