LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​

மத்திய குற்ற புலனாய்வு துறையினர் (CBI) ஊழல் வழக்குகளில் இணை செயலாளர் மற்றும் அதற்கு மேலுள்ள அதிகாரிகளை விசாரிக்க அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் எனும் டெல்லி சிறப்பு காவல் நடைமுறை சட்டம் (DPE) பிரிவு 6A-ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை லோக்சத்தா கட்சி வரவேற்கிறது.

இதுகுறித்து லோக்சத்தா கட்சியின் தேசிய தலைவர் டாக்டர்.ஜெயபிரகாஷ் நாராயண் தெரிவிக்கையில் லோக்சத்தா இந்த  அரசியலமைப்புக்கு முரணான சட்டப்பிரிவை திரும்பப்பெற லோக்சத்தா குரல்கொடுத்து வருவதை நினைவுகூர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஊழல் தடுப்பு சட்டதிருத்தம் குறித்த கூட்டத்திலும் பாராளுமன்ற குழுவினரிடம் கட்சி சார்பில் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே இது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்று நீதிமன்றங்கள் தெரிவித்திருந்தாலும்மத்திய அரசு பிரிவு 6A-ஐ DPE சட்டத்தில் கொண்டுவந்து குற்ற புலனாய்வில் அரசு தனது அதிகாரத்தை செலுத்தியது என டாக்டர்.ஜே.பி. குறிப்பிட்டார்.

தற்போது இந்த சட்டபிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதால்மத்திய குற்றப்புலனாய்வு துறையினர் எந்தவித அரசியல் தலையீடுமின்றி ஊழல் வழக்குகளில் இனி சுதந்திரமாக எந்த அதிகாரியையும் விசாரிக்கலாம் என அவர் தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் இந்த தீர்ப்பு இனி அனைத்து அரசு ஊழியர்களையும் சரிசமமாக நடத்த வழிவகுக்கும்” என்றார்.

இதேபோல்ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசின் அனுமதியை கோரும் ஊழல் தடுப்பு சட்டம்பிரிவு 19 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம்,பிரிவு 197 ஆகியவையும் திருத்தப்பட வேண்டும் என டாக்டர்.ஜே.பி. தெரிவித்தார்.

இந்த சட்டப்பிரிவுகளை ஒவ்வொரு அரசும் ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க தவறான வழியில் பயன்படுத்துவதாக அவர் கூறினார். மேலும் தேவைப்பட்டால் இம்மாதிரியான அதிகாரங்கள் தேசிய அளவில் லோக்பால் அல்லது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கோமாநில அளவில் லோக்ஆயுக்தாவிற்கோ அளிக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

Loksatta welcomes SC verdict unshackling CBI

The Loksatta Party today welcomed the the Supreme Court judgment quashing Section 6A of the Delhi Special Police Establishment Act that mandates the Central Bureau of Investigation (CBI) to take prior sanction of the Government before investigating an officer of the rank of joint secretary and above in corruption cases.

 

In a media statement, Loksatta Party national President Dr. Jayaprakash Narayan recalled that the Loksatta for long has been demanding the repeal of the patently unconstitutional section.  In a presentation to a Parliamentary Committee on amendments to the Prevention of Corruption Act recently, the party reiterated its demand.

 

Dr. JP pointed out that when the courts held what was earlier known as the single directive unconstitutional, the Government of India incorporated Section 6 A in the DPE Act and grabbed the power to interfere in crime investigation.

 

Now that the section has been quashed, Dr. JP said, the CBI is free to investigate cases of corruption against any functionary without prior Government consent.

 

“This blow in favor of rule of law will ensure that all public servants are treated alike.”

 

Dr. JP said that Section 19 of the Prevention of Corruption Act and Section 197 of the Criminal Procedure Code which mandate prior Government sanction for proceeding against corrupt Government officials should also be amended.

 

These sections, Dr. JP said, have been routinely abused by successive Governments to shield corrupt officials. Such a power, if needed, should be transferred to the Lokpal/Central Vigilance Commission at the national level and the Lokayukta at the State level, Dr. JP suggested.

by Swathi   on 07 May 2014  0 Comments
Tags: சி.பி.ஐ   உச்ச நீதிமன்றம்   லோக்சட்டா   CBI   Loksatta        
 தொடர்புடையவை-Related Articles
உலக கழிவறை நாள் – திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராமத்திற்கு ஊக்கத் தொகை.. உலக கழிவறை நாள் – திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராமத்திற்கு ஊக்கத் தொகை..
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன? வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன?
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !! முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் !!
சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​ சி.பி.ஐ அமைப்பை அரசியல் பிடியிலிருந்து தளர்த்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக்சத்தா வரவேற்கிறது​
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !! கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.