LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஐரோப்பா

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு மேல் வாழ்ந்து வரும் ஐக்கிய இராச்சியத்தில் (லண்டன்) சென்ற 14-10-2018ம் தேதி லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா அப்பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்றது.

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS (School of Oriental and African Studies) தமிழ்க் கல்விக்கு மிகவும் பாரம்பரியமான இடமாக இருந்தது. 1916-இல் இருபது மொழிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில், தமிழும் ஒரு மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. 1920-களில் இலங்கையில் இருந்து வந்த தலைசிறந்த கல்வெட்டு ஆய்வாளர் டான் மார்டினோ டி சில்வா விக்ரமசிங்கே (Don Martino de Zilva Wickremasinghe) தமிழ் ஆசிரியராக இங்கு பணியாற்றினார் என்பது குறிப்பித்தக்கது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் ஆங்கிலேயத் தமிழறிஞர் திரு.M.S.H.தாம்சன் அவர்களும் இங்குப் பணியாற்றியுள்ளார். இப்படியாக சுமார் 75 வருடங்களுக்கு மேல் இயங்கி வந்த SOAS தமிழ்த்துறை, இங்கிலாந்து அரசின் நிதிக்கட்டுபாட்டாலும், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததாலும் 1995-2000 காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

தமிழ் மேல் தீராக தாகம் கொண்ட ஐயா திரு. சிவா பிள்ளை தலைமையின் முயற்சியால் திரும்பவும் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ சென்ற சூலை 18, 2018 அன்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது.

ஐயா திரு. சிவா பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரில் பிறந்தவர். யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் பட்டம் பெற்றார். கடந்த 52 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். அங்கு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்ததுள்ளார். தமிழ் இணைய மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்தி வரும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) - International Forum for Information Technology in Tamil (INFITT) என்ற அமைப்பை நிறுவியவர்களுள் இவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க பயணங்களை மேற்கொண்டு தமிழின் வளர்ச்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல தன்னாலான பங்களிப்பையயும், ஊக்குவிப்பையும் செய்து வருகிறார்.

தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா நாளன்று பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்புரையாற்றியவர் தமிழகத்தின் மக்களைக் கவர்ந்த பேச்சாளர் திருமதி.ஜெயந்திஶ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பாளர்களாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் திரு. இராமசாமி பாலாஜி அவர்களும், பத்மஶ்ரீ. மார் தம்பதியினரும், டாக்டர் பென் முரேக் அவர்களும் பங்கெடுத்தது சிறப்பித்தனர்.

இலண்டன் தமிழ்த் துறையை வெற்றிகரமாக உருவாக்க, சுமார் 100 கோடிகள் தேவைப்படுகிறது. இந்த நிதியை கொண்டு, துறைத்தலைவர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என முழுத் தமிழ்த்துறையையும் கொண்டு வருவதும், மாணவர்கள் தொடர்ச்சியாக வந்து படிக்கத் தேவையான குறைந்தபட்ச கல்வி உதவித்தொகைகளை உருவாக்குவதும், பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு இருக்கும் தமிழ் பனை ஓலைச்சுவடிகள் - பாரம்பரியப் புத்தகங்கள் போன்றவற்றை மின்னாக்கம் செய்வது மற்றும் கல்லூரி வளாகத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலையை சீர்படுத்திப் பராமரிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் தோய்வின்றி நடைபெற நிதி உதவும்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை, மீண்டும் புத்தெழுச்சி பெற்று எழுவதற்குத் தமிழ் இருக்கைக்கையை அமைப்பதற்கும் மற்றும் தமிழ்த்துறைப் பணிகளை திறப்பட மேற்கொள்ள உலகம் முழுவதும் உள்ள தமிழ் மேம்பாட்டாளர்களை கொண்ட TamilChair-UK என்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒருங்கிணைத்து வருகிறது.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதி ஆதாரத்தை பெருக்க TamilChair-UK என்றக் குழு சார்பாக ஐயா திரு. சிவா பிள்ளை தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தமிழக அமைச்சரவை சகாக்களையும் தமிழக முதல்வரையும் சந்திக்க எண்ணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு நமது உலகத் தமிழர் பேரவை அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வரும் என்பதை அறுதியிட்டு சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

by Swathi   on 23 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023 சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023
மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு
வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி
செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு  6 நாட்கள் நடக்கிறது செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு 6 நாட்கள் நடக்கிறது
மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன்  சாமிவேலு  அவர்களுக்குப் புகழ்வணக்கம்! மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
சாலையின் பெயர் வள்ளுவர் வழி சாலையின் பெயர் வள்ளுவர் வழி
TNF 48 தேசிய மாநாட்டு விழா TNF 48 தேசிய மாநாட்டு விழா
"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1" - நேரலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.