LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்- எம். பாலசஞ்சீவி - அணிந்துரை

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!


(வரலாற்றுக் கவிதை நாடகம்)

 

 

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!” என்ற இந்த நாடகம் நம் கண்ணீரால் காத்த சுதந்திர வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைத் தன்னகத்தே கொண்டது. சிவகங்கைச் சீமையை வெள்ளையர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்டு அம்முயற்சியில் வீரமரணம் எய்திய மருது சகோதரர்களின் வீரத்தை வெளிப்படுத்துவது. சின்ன மருதுவை நாடகத் தலைவனாக்கி இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

நம் நாட்டு விடுதலைப் போருக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் முக்கியமானவர்கள் மருது சகோதரர்கள். தமிழ் மக்கள் பெருமை கொள்ளத்தக்க வீரமறவர்கள் அவர்கள். அவர்களது வரலாற்றைச் சுவையும் பயனும் மிக்க வகையில் நாடகமாக்கியிருப்பது இவ்வாசிரியரின் தனிச் சிறப்பு. நடிப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்ற வகையில் இதை உருவாக்கியிருக்கிறார்.

அன்பர் திரு. பாலசஞ்சீவிக்கு நாடகத் துறையில் இது முதல் முயற்சி. இந்த முதல் முயற்சியே அதன் உட்பொரு ளாலும் அமைப்பு முறையாலும் அவரிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மென்மேலும் அவர் எழுத்துத் துறையில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தமிழ்ப் பெருமக்கள் இந்நூலுக்கு அளிக்கும் வரவேற்பு அவரது ஊக்கத்தையும் ஆக்கத்தையும் வளர்க்கத் துணைபுரியுமாக.

அன்புள்ள,
அகிலன்


__________________________________________________________________________________

கன்னித்தமிழ் நாடகக் கருவூலமான "மனோன் மணீயம்" படித்துச் சுவைத்தற்கே உரியது மேடையில் நடித்துச் சிறப்பித்தல் எளிதன்று. செகப்பிரியர் நாடகங்கள் போன்று நடிக்கவும் படிக்கவும் எனப் படைத்துத் தானே முக்கிய பாத்திர மேற்று நடித்துச் சிறப்பித்துள்ளார் நாடக ஆசிரியர் பாலசஞ்சீவி.


       ஐயனும் இளவலும் அணி நிலமகள் தன்
       செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்
       மைதவழ் பொழில்களும், வாவியும், மருவி
       “நெய் குழல் உறும் இழை” என நிலை திரிவார்
              (கம்பராமாயணம். கையடைப் படலம் 127)

 

இராம இலக்குவன் போன்று இணைபிரியாது வாழ்ந்து      ‘மருது பாண்டியர்’ என இருவருமே மன்னர்களாக இருந்தனர். விசுவாமித்திரன் வேள்வியை “மண்ணினைக் காக்                         கின்ற மன்னன் மைந்தர்கள்; கண்ணினைக் காக்கின்ற                 இமையின் காத்தனர்.". அதுபோல் வேலுநாச்சியின் விடு         தலைவேள்வியைக் காத்தவர் மருது பாண்டியர். “அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்ன வர்க்கே சரண் நாங்களே” என காளையார் கோயில் காக்கச் சரண் அடைந்தவர். அவர்களின் வீரமரணத்தால் “கன்று பிரிந்துழிக்கறவை ஒப்பக் கரைந்து" கலங்கியிருப்பாள் தமிழ்த்தாய்.

       தேச பக்தியும் தெய்வபக்தியும் அருகிவரும் இந்நாளில், “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" நாடகம் நாடெங் கும் நடிக்கப் படவும் படிக்கப்படவும் வேண்டியதாகும்.

       சுதந்திரம் வேண்டிக் கொங்குச் சீமையில் பொங்கி யெழந்து போரிட்ட வீரன் 'தீரன் சின்னமலை'. ஐந்தாண்டு கட்குமுன் கோவை வானொலியில் “சுதந்திரச் சுவாலை" என்னும் கவிதை நாடகத்தை எழுதி சின்னமலையாக நடித்த பாலசஞ்சீவியின் நடிப்பு பலர் மனதிலும் நீங்காது இன்றும்   நிலைத்து நிற்கிறது. அதையும் முழுஅளவில் படிக்கவும்           நடிக்கவும் படைத்தளிக்க வேண்டும் ஆசிரியர் பாலசஞ்சீவி           என்பது என் அவா; அவரது தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க!!


கோவைக்கம்பன். கு. கோதண்டராமன்

 

________________________________________________________________________
       திரு எம். பாலஞ்சீவி, எம்.ஏ. அவர்கள் எழுதிய       “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!'' என்ற வரலாற்றுக்         கவிதை நாடகம் வரவேற்கத்தக்க புத்திலக்கியப் படைப்    பாகும். பெருங்கவிஞர் பாரதியாரின் புகழ்பெற்ற சொற் களையே தலைப்பாகக் கொண்ட இந்நாடக நூலுக்கு ஞானபீடபரிசு பெற்ற திரு.அகிலன் அவர்கள் எட்டு ஆண்டு களுக்கு முன்பே வழங்கியுள்ள அணிந்துரையைப் படித்தாலே இதன் பெருமை விளங்கும்.

       விடுதலைப் போரில் தமிழகம் பங்கு கொண்ட வரலாற்றில் தனிச் சிறப்பு வாய்ந்த பகுதி மருது பாண்டியர்கள் நடத்திய மாபெரும் விடுதலைப்போராகும். வீரபாண்டிய கட்டப்பொம்மனினும் சிறந்த வகையில் அவனுடைய உடன் பிறப்பாகிய ஊமைத்துரையுடன் இணைந்து மருது பாண்டியர் ஆங்கிலக் கம்பெனி ஆட்சியை எதிர்த்துப் போராடினர். சீரங்கப்பட்டணம் போரில் வெற்றி பெற்றதாலும் கூட சாதிக்க முடியாத சாதனையை ஆங்கிலக் கம்பெனியார் மருதுபாண்டியரைத் தலை வேறு உடல் வேறு ஆக்கிய பின்னரே சாதிக்க முடிந்தது. வேறுவகையில் சொன்னால் சீரங்கப்பட்டணப் போரில் வெள்ளையர் வெற்றி பெற்றிருந்தும் நெஞ்சம் நிலை குலையாது தென்பாண்டிச் சிங்கங்களாகிய மருது பாண்டியர்கள் வீரப்போர் புரிந்ததே விழுமியது ஆகும்.

விடுதலைப் போரில் தமிழகம் கொண்ட பங்கைத் தமிழ்மக்கள் அனைவரும்-சிறப்பாக-தமிழ் மாணவர்கள் அனைவரும் நன்றாக-அறிந்து கொள்ளுதலே நலம் பயப்ப தாகும். அவ்வகையில் அவ்வீரப் பெருமக்களின் வரலாற்றை ஆசிரியர் திரு எம். பாலஞ்சீவி அவர்கள் நாடகமாக ஆக்கி யிருப்பது பெரிதும் வரவேற்றுப் போற்றத் தக்கதாகும். தமிழ்நாட்டு மாணவர்கள் எளிதாகவும் இனிதாகவும் இந் நாடகத்தைத் தங்கள் தங்கள் பள்ளிகளில் நடித்துப் பயன் பெறலாம். தமிழ்நாட்டு நாடக மன்றங்களும் வானொலி நிலையமும் தொலைக்காட்சி நிலையமும் இந்நாடகத்தை நடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


       இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றிப் பெரிதும் பேசும் இந்தி(ய)த் தலைவர்கள் இந்திய மொழிகளில் எல்லாம் இந்த நாடகத்தை மொழியாக்கம் செய்து பரப்பலாம். உண்மையான ஒருமைப்பாட்டிற்கு இது உதவியாகும்.


       ஆசிரியர் பாலஞ்சீவி அவர்கள் 27 காட்சிகளாகப்          பிரித்து இந்த நாடகத்தைச் செய்யுள் வடிவில் எழுதியிருத்தல் தமிழ்க் கவிதைக் கலைக்கும் அவர்கள் செய்தபெருந்தொண்டாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பே 'மானங்காத்த மருது பாண்டியர்' 'மருதிருவர்' என்ற நூல்களை எழுதி        யதன் வாயிலாகத் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற எனக்கு திரு.பாலசஞ்சீவியின் முயற்சி பெருமை தருகிறது.          என்னால் முடியாததை அவர்கள் செய்திருப்பதற்காக அவருக்குத் தமிழ் மக்கள் சார்பில் உளமார்ந்த பாராட்டுதல் களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


. சஞ்சீவி
தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக் கழகம்

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.