m-sanjeevi-scene-4
LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!


(வரலாற்றுக் கவிதை நாடகம்)

 

காட்சி 4

 

 

 

காலம் : முற்பகல்

இடம் : அந்தப்புரம்

வருவோர் :   ராக்காத்தா, பொன்னாத்தா, துரைசாமி  சின்ன மருது மற்றும் கறுத்தான்.

துரைசாமி   (பெரியம்மாவை நோக்கி ஓடிக் கொண்டே)
                     அம்மா! பெரியம்மா! அம்மா! பெரியம்மா!

 

பொன்னாத்தா

(வந்து கொண்டே)

நம்மால் முடியுதா அம்மம்மா - எம்மாம்
பெருஞ்சோதி என்னென்ன பேசுகிறான் அக்கா

அறிந்திருந்தா லன்றோநான் சொல்வேன்
                                    - பிரிந்திருக்க
மாட்டானாம் உன்னை மகனுனக்காம், நானென்ன
கேட்டாலும் உன்னையே காட்டுகிறான்

ராக்காத்தா
                       
(முகவாயைத் தூக்கிச் செல்லமாக)

                                     - நீட்டாதே

செல்லத் துரைராசா சேதியென்ன கேட்டிட்டாய்
கொள்ளை அறிவு கொடுமுத்தம்.
 
துரைசாமி

- இல்லையம்மா

ஓரினமாய் நாமிருக்க உட்பிரிவு நம்முன்னே
ஏறியதற் கென்னென்ன காரணமாம்?

ராக்காத்தா                                                               
- கூறிடவா?

பொல்லாத பிள்ளை பொருத்தமாய்க் கேட்டிடுவான்
எல்லாம் நமக்கெங்கே ஏற்குது-வல்லாளன்
சின்னவரைப் போன்றே சிறப்பான் துரைசாமி
என்னவரைப் போல்வா னிவனண்ணன்

(கறுத்தான் பின் தொடர. சின்னமருது வரக்கண்டு)

- மன்னவரும்

வந்திட்டார் கேளப்பா வாகாய்ப் பதிற்சொல்வார்

உன் ஐயம் எல்லாம் உணர்ந்து.


சின்ன மருது

என்ன துரைசாமி ஏதுனக்குச் சந்தேகம்?
அண்ணன் புலிபிடிக்கும் ஆற்றலினைப் பற்றியதா?
சின்ன மகன்கேட்கும் சேதியென்ன அண்ணிகூட
மன்னர் எனக்காட்டி மாற்றுவதேன் என்பக்கம்?

துரைசாமி
அப்பா நம்குலத்தில் அமைந்த விதங்கேட்டேன்
தப்பா என்கேள்வி? தகுந்த பதிலுமிவர்
செப்பா துங்களிடம் சேர்த்தா ருரைத்திடுங்கள்
எப்போ திப்பிரிவை எதற்குப் பிரித்திட்டார்?

கறுத்தான்
குலமொன்றே என்றாலும் கொண்ட தொழில் மூன்றில்

நலமென்றே முப்பெயரும் நாட்ட - பலனோ
கலந்துவிட்ட தத்தொழிலுந் தான்

சின்ன மருது
சேது அணையிட்ட செய்திவந்த நாள்முதலாய்
பாதுகாத்து வந்த பழங்குடி-தீதுவரின்
மோதுவதிம் மூத்த குடி.
 
கறுத்தான்
ஆதியிலே மோதியது அன்னியரின் முன்னாலே
பாதியிலே நம்முள் பகையாச்சே - மேதினியில்
சோதித்த திக்குலத்தைச் சூது.

துரைசாமி
சூது மலிந்ததனால் சோர்ந்திடுமோ மாவீரம்
ஏதுவரின் என்ன இசைதானே? - தோதுபட
மூதுரையாய் கொண்ட முடிவு.

பொன்னாத்தா
புலிக்குப் பிறந்திடுமோ பூனையும்? வன்தோள்
வலிக்குச் சிறந்தா வளையும் ? - பலித்தே
ஒலித்திடுமுன் புகழும் உயர்ந்து.


சின்ன மருது
துரைசாமி என்னைப்போல் தோள்வலி அண்ணன்
உரைகேட்டு ஆள்வாயா ஊரை - முறையாய்
இறையருளால் ஏற்பாய்ப் புகழ்.

(கறுத்தான் தும்மல்)

இச்சென்று போடும் இதென்ன கறுத்தானே
நச்சாகுந் தும்மலா? நல்லதா? - செச்சே நீர்
மிச்ச மிருந்தால் முடியும்.

துரைசாமி
தும்மின் வழுத்துதல் தொன்றுதொட்ட நம்வழக்கம்
உம்மின் வயது ஒரு நூறு - கம்மிபடின்
எம்மீது குற்றமிலை ஏதும் ?
 
ராக்காத்தா

ஒட்டி நிழல்போல உன்னப்பா சேர்ந்திருந்து
வெட்டிவா என்றாலே கட்டிவந்து - கொட்டிவிடும்
மட்டிலா வீரரிவர் தான்.

 

கறுத்தான்

அண்ணியின் வாழ்த்துக் கருகதையுண்

                                  டோயெனக்கு

எண்ணிவிடில் எங்கள் உயிரிரண்டோ -

                              விண்ணளவே
நண்ணிவரும் எங்களின் நட்பு.

 
சின்ன மருது
வாரும் கறுத்தான் நாம் வாட்பயிற்சி பெற்றிடச்
சேரும் இளைஞரைச் சென்றுபார்ப்போம்-வீறுடைய
மேரு நிகர் பேர்படைப் பார் -

(கறுத்தான் பின்தொடர சின்ன மருது பாசறை நோக்கிச்

                      செல்லுதல்)


(திரை)

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 2 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 2
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.