LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- தமிழ் மண்ணில் சாமிகள்

மதுரை வீரன் கதை

கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.

 

எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.

 

கதை :

 

வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.

காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.

திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.

திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.

பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.

பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.

திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.

மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.

அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.

by Swathi   on 01 Aug 2013  20 Comments
Tags: மதுரை   வீரன்   மதுரை வீரன்   மதுரை வீரன் கதை   குலதெய்வங்கள்   Madurai Veeran   Madurai  
 தொடர்புடையவை-Related Articles
சண்டி வீரன் திரை விமர்சனம் !! சண்டி வீரன் திரை விமர்சனம் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
பழையனூர் நீலி பழையனூர் நீலி
மதுரை வீரன் கதை மதுரை வீரன் கதை
கருத்துகள்
17-Sep-2019 08:36:45 Tamil said : Report Abuse
Nanbargale...naam palaya kadhaiyai pesuvathai vida unmaiyana varalatrai veliyittu ulagariya seivathe nalla visayam...innum ethai naal than ithu thirithu koorpathu endre solli kondirukaporom...apo unmai varalatrai yaarthan epothuthan veliyiduvathu...
 
14-Aug-2019 11:03:40 கே.govindharaj said : Report Abuse
மை குலா தெய்வம் மதுரை வீரன்
 
05-Apr-2019 17:36:39 Muthamilselvan said : Report Abuse
காவேரில் அரசானக பிறந்து தாழ்ந்த குடும்பத்தில் வளர்ந்தூ வைகை நதி மதுரையில் வீரனாக மான்ட என் தெய்வமே!!!!!!!!! உன் புகழ் என்றூம் அழியாதூ........ இப்படிக்கு முத்தமிழ்
 
23-Jan-2019 14:33:45 THRUGNANAM said : Report Abuse
மதுரை வீரன் ஐயா உண்மையான கதை தான் என்ன என்னுடைய மெயில் கு அனுப்புங்கள் அவரின் புத்தகம் எங்கு உள்ளது
 
17-May-2018 14:43:00 Prabhakaran said : Report Abuse
Vannakam nanbargale om Sri Madurai veeran appa Story LA neraiya thappu iruku Intha Story ya Yarum penpatrathergal My 📱 number 9840320771 my face book account name Prabhakarankalpana Unngaluku Madurai veeran storyla ethana santhygam irunthal ennai thodarbu kollungal Ennaku thyrinthavaraikum nan unngaluku vakkam kodukeren
 
17-May-2018 14:42:51 Prabhakaran said : Report Abuse
Vannakam nanbargale om Sri Madurai veeran appa Story LA neraiya thappu iruku Intha Story ya Yarum penpatrathergal My 📱 number 9840320771 my face book account name Prabhakarankalpana Unngaluku Madurai veeran storyla ethana santhygam irunthal ennai thodarbu kollungal Ennaku thyrinthavaraikum nan unngaluku vakkam kodukeren
 
14-Apr-2018 07:33:52 அருளஷக்தி said : Report Abuse
மதுரை வீரனின் உண்மையான முழு கதை அனுப்புங்கள் அவர் அருந்ததியரின் குலதெய்வம் மதுரை வீரனுக்கு நிகர் இவுலகில் தெய்வம் உண்ட?
 
30-Dec-2017 03:56:44 நித்யன் said : Report Abuse
திரு மோகன்ராஜ் பதிவுகள் உண்மை தான் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் இது பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆசை திரு மோகன்ராஜ் உங்கள் தொலைபேசி ஏன் கிடைக்குமா
 
21-Aug-2017 12:34:42 Dines said : Report Abuse
Unmai
 
07-Aug-2017 07:25:27 vijayarj said : Report Abuse
Enathu kula thevam மதுரை வீரன் கோவில் எங்கே oollathu enru theriya villai எங்கே ullathu inru soolunkal pls
 
30-Jul-2017 09:22:44 kanthan said : Report Abuse
neengal sonna kathai verum padam unmay kathai veendum
 
01-Jul-2017 15:19:26 ALAGESAN said : Report Abuse
enga குலதெய்வம் kuda மதுரை வீரன் தான் சார் sulogam irukka
 
13-Jun-2017 16:00:49 mohanraj said : Report Abuse
மேலே சொன்ன கதை திரைப்பட கதை தான். ஆனால் உண்மை கதை கொஞ்சம் தான். வீரன் பெரிய போர் வீரன். என் மாமா இதை பற்றி ஆராய்ச்சி செய்து கொன்றித்தார். அவர் சென்ற வருடம் விபத்தில் இறந்து விற்றார்.அவர் கூறிய கருது படி. மதுரை வீரன் குடுபம் தோல் தொழில் செய்பவர்கள் ஆவார். தோல் என்றல் செருப்பு தேய்ப்பதை மட்டும் சொல்லிறார்கள் அது அப்படி அல்ல. அந்த காலத்தில் தோல் நாணயங்கள் மற்றும் போர் அணிகலன்கள் தயாரிக்கும் தொழில் செய்தவர்கள் மதுரை வீரன் குடும்பம். இவருக்கு மச்சக்காளை என்று ஒரு தம்பி உண்டு. வீரன் சிறந்த பலசாலி. இவர்களிடம் போர் அணிகலன்கள் மற்றும் நாணயங்கள் பெறுவதற்கும் மதுரை நாய்க்கர்ன் அமைச்சர்கள் வருவருது உண்டு. அவர்கள் குறியாதல் வீரன் மதுரையின் அரசின் படை தளபதி ஆகிறார். மீதி எல்லாம் படத்திற்காக கொஞ்சம் மாற்றப்பட்டு உள்ளது. இவரை பற்றி ஒரு பழமையான புத்தகம் ஒன்று உள்ளது. M K U யூனிவர்சிட்டி உள்ளது என்று கூறியுள்ளார். நான் இதை பற்றி ஆய்வு செய்ய இருக்கிறேன். பிறகு சரியான உண்மையை கதையை சொல்கிறான். நன்றி.
 
22-May-2017 07:44:06 M.karthick saran said : Report Abuse
Engal kuladeivam ondiveeran swamy so avara pathi edhavadhu sollunga frnds
 
18-Feb-2017 03:20:00 Matheesh Kumar said : Report Abuse
I need ayyanar ஸ்டோரி
 
10-Dec-2016 02:33:03 கவியரசு/RAMADASAN said : Report Abuse
மதுரை வீரன் அய்யா என் உயிர் ,, 🙏ஓம் ஜெய் மதுரை வீராயி நமஹ 🙏
 
27-Nov-2016 08:34:27 தினேஷ் said : Report Abuse
இது போன்ற கடவுள்களின் வரலாற்று புத்தகங்கள் ஏதேனும் இருக்கிரதா சுவாதி...???
 
25-Nov-2016 07:08:39 rajkumar said : Report Abuse
இந்த கதைக்கு பிறகு என்னநடந்தது.... மதுரைவீரன் பெயர் எப்படி வந்தது
 
30-Jun-2016 11:50:27 manoj said : Report Abuse
இதுல பதி தான் ஐயா உண்மை
 
24-Jan-2016 05:44:04 dhachanamoorthi said : Report Abuse
எனக்கு முழு கதை வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.