LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

மகளெனும் கடல்.. வித்யாசாகர்!

(மகள் பற்றிய கவிதை)


1
நானும் மகளும் கடலுக்கு
போகிறோம்,
முன்னே ஓடியவள்
கரையில் தடுக்கி சடாரென
தண்ணீருள் விழுகிறாள்,
அலை மூடிக்கொள்கிறது
மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது
மகளைக் காணோம்
மகளையெங்கே காணவில்லையே
ஐயோ மகளென்று பதறி
ஓடி கடலில் குதிக்கிறேன்;

மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி
அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள்,
கையை ஆட்டி ஆட்டி ஏமாத்திட்டேனே என்கிறாள்,

தண்ணீரில் கூட வியர்த்தது
எனக்கு
உடம்பெல்லாம் பதறுகிறது..

அவள் சிரிக்கிறாள் சிரிக்கிறாள்
அப்படிச் சிரிக்கிறாள்
என்னம்மா என்கிறேன்
ஐயோ அப்பா அப்பா என்கிறாள்

பயந்தே போனேன்மா என்றுச்
சொல்லவில்லை
அவளதைக் கேட்கவுமில்லை
அவளுக்கு சிரிப்பே சோறு
சிரிப்பிற்கே விளையாட்டு

எங்கே காணினும்
கடலெங்கும் அவள் சிரிப்பு
அவள் சிரிப்பு
என் உயிரெங்கும் அவள் சிரிப்பு..
அவள் சிரிப்பு..

சிரித்து சிரித்து சிரித்து
அவளுள் இருக்கும் நான்
மெல்ல மெல்ல அடங்கியதற்கும்
அவளோடு சேர்ந்து நான்
வாய்விட்டு சிரித்ததற்கும்
இந்த கடலின்று சாட்சி..
---------------------------------------------------------

2
அப்பா
மகள்
இரண்டுமுறை எழுதவேண்டாம் போல்
ஒரேயொருமுறை எழுதுகிறேன்
கடல்..
---------------------------------------------------------

3
அப்பா நான் தண்ணீரில் இறங்கி
விளையாடப் போகிறேன்
இதலாம் பிடிங்க என்று
முதலில் ஒன்றை கொடுத்தாள்
வாங்கிக்கொண்டேன்

சரி இந்தாங்க
இதையும் பிடித்துக்கொள்ளுங்க ளென்று
இரண்டாவது கைக்குட்டையையும்
பணப்பையையும் கொடுத்தாள்
வாங்கி வைத்துக்கொண்டேன்

மூன்றாவதாய் மீண்டும் ஓடிவந்து
சரிங்கப்பா இந்தாங்க இதையும்
வைத்துக்கொள்ளுங்கள் என்றாள்

வாங்கியதும்
அப்பா பிரிக்காதீங்க என்றாள்
சரிம்மா என்றுச் சொல்லிவிட்டு
பிரித்துப் பார்த்தேன்
அது ஏதோ
புத்தகத்தில் வந்த எனது
பழைய புகைப்படம் போல இருந்தது..

கேள்வியோடு திரும்பி
அவளைப் பார்க்கிறேன்
வானத்திற்கும் பூமிக்குமாய் அவளே பெரிதாகத்
தெரிந்தாள்..
---------------------------------------------------------

4
பட்டு உனக்கு
அப்பா பிடிக்குமா என்றேன்

ம்ம் பிடிக்கு மென்றால்
எவ்வளவு பிடிக்கும் என்றேன்
ரொம்ப பிடிக்கு மென்றாள்

எவ்வளோ இந்த கடலளவு
பிடிக்குமா என்றேன்
ம்ம் இதுபோல் இன்னும்
நிறையக் கடலினளவு பிடிக்குமென்றாள்

அவளுக்கு மனசு
கடலைத் தாண்டி யிருந்தது
எனக்கு அவள்தான் கரையாக இருந்தாள்..
---------------------------------------------------------
வித்யாசாகர்

by Swathi   on 02 Nov 2015  0 Comments
Tags: மகள்   கடல்   வித்யாசாகர் கவிதைகள்   வித்யாசாகர்   Magal   Kadal   Vidhyasagar  
 தொடர்புடையவை-Related Articles
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்! உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்!
நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ - வித்யாசாகர்! நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ - வித்யாசாகர்!
காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன் காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன்
கடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி கடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி
கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன் கடல் வழிக்கால்வாய் - கவிப்புயல் இனியவன்
அலை! - இல.பிரகாசம் அலை! - இல.பிரகாசம்
உழைக்கும் மகளிர் தினம் - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம் உழைக்கும் மகளிர் தினம் - தமிழ்ச்சிற்பி.பா.பனிமயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.