LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

மகாபலிபுரம்

மகாபல்லிபுரத்தின் சிறப்பு:

மகாபலிபுரம் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும்.

பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, நந்திக் கலம்பகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களில் மகாபலிபுரம் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

பல்லவர் ஆட்சிக் காலத்தில், முக்கிய துறைமுகமாக மாமல்லபுரமும், தலைநகராக காஞ்சிபுரமும் விளங்கியது.

நரசிம்ம பல்லவர் ஆட்சிக்காலத்தில் யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகர் கி.பி 640-இல் கடற்கரை துறைமுகமான மாமல்லபுரத்துக்கு வந்து சென்றுள்ளார்.

முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின் அரியணை ஏறிய முதலாம் நரசிம்ம பல்லவனின் பட்டப் பெயரே "மாமல்லன்'. அவரது பெயரை போற்றும்வகையில் பிற்காலத்தில் "மாமல்லபுரம்' என அழைக்கப்படலாயிற்று. மாமல்லபுரம், மகாபலிபுரம் என்றும் இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது.

கடந்த 2004-இல் ஏற்பட்ட சுநாமியில் - இந்த கடற்கரைக் கோயிலின் அமைப்பில் எந்தவித சேதாரமும் ஏற்படாமல் கம்பீரமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். கடற்கரைக் கோயிலை கடல்நீர் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பெரிய பாறாங்கற்களை பாதுகாப்பு வேலியாகக் கொட்டி இந்திய தொல்பொருள்துறை பராமரித்து வருகிறது.

இங்குள்ள கடற்கரைக் கோயில் உலக அளவில் ஒரு தலை சிறந்த பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதால் 1984-இல் "உலக பண்பாட்டுச் சின்னம்' என யுனெஸ்கோ அறிவித்தது.

பல்லவர்காலத்தில் உருவாக்கப்பட்ட சகாதேவன் ரதம், பீமன் ரதம், அர்ச்சுனன் ரதம், திரெளபதி ரதம், தருமர் ரதம் என 5 ரதங்களில் செதுக்கப்பட்ட பல்வேறு கற்சிற்ப அமைப்புகளும், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மகிஷாசூரணி மண்டபம், பட்டர் பால்ஸ் எனப்படும் வெண்ணெய் உருண்டைக் கல் போன்றவற்றைக் காண இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள அனைத்து கற்சிற்பங்களையும், கடற்கரைக் கோயில் போன்ற வரலாற்று சின்னங்களையும் சென்னை வட்டத்தின் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் மூலம் நேரடி கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

குடைவரைக் கோயில்கள்அல்லது
மண்டபங்கள்;
ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவை தவிர, புடைப்புச் சிற்பத்தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும்
காணப்படுகின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊருக்குள் வந்தவுடன் இராஜசிம்மன் கட்டிய சிவன் கோவில் முகுந்தநாயனார் கோவில் வரவேற்கிறது .

இக் கோவில் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது.


கணேச ரதம்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சேதமடையாத கோயில். மாமல்லபுரத்தில் உள்ள கற்கோயில்களில் வழிபாட்டில் இருக்கும் ஒரே சிற்பக் கோயில் இதுதான். சிவனுக்காக எழுப்பப்பட்ட கோயில், பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டது.

கிருஷ்ணர் பட்டர் பால்

‘‘கிருஷ்ணர் வெண்ணை விரும்பிச் சாப்பிடறதால இப்ப இதை ‘கிருஷ்ணா பட்டர் பால்’ என்று பெயரிடப்பட்டுள்ளது .
இந்தப் பாறை இரண்டடிதான் கீழ ஒட்டிக்கிட்டு இருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்துல ஏழு யானைகள் கொண்டு இழுத்துப் பார்த்திருக்காங்க. ஆனா, கீழ விழலையாம். அப்படியே விட்டுட்டாங்க...’’

வராகர் மண்டபம்

முற்றுப்பெற்ற அழகான குடைவரைக் கோயில். இந்தக் குடைவரையின் சுவர்களில் வராக மூர்த்தி, தாமரை மீது அமர்ந்துள்ள திருமகள், கொற்றவை மற்றும் உலகளந்த பெருமாளின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

ராய கோபுரம்

விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட கோயில். முற்றுப்பெறாமலே பாதியில் நிற்கிறது. விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கப்பட்டதால் இது ‘ராயர் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது.

மகிஷாசுரமர்த்தினி குகை

ஓலகனேஸ்வரர் கோயிலுக்குக் கீழே காணப்படும் குடைவரைக் கோயில். இந்தக் குகையில் மகிஷாசுரனை அழித்த கொற்றவையின் சிற்பம், சோமாஸ்கந்தர் சிற்பம், அனந்தசயனப் பெருமாள் சிற்பம் உள்ளிட்ட தலைசிறந்த சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.


ஓலகனேஸ்வரர் கோயில்

ஏழாம் நூற்றாண்டு கால கற்கோயில். இந்தக் கோயிலில் எரிந்த விளக்குதான் பல்லவர்கள் காலத்தில் துறைமுகக் கலங்கரை விளக்கமாக இருந்தது.

ராமாநுஜ மண்டபம்

சிவனுக்கு உரியதாகக் குடையப்பட்ட குடைவரை. சிவன், பிரம்மா, திருமால் என்று மூன்று கருவறையுடன் குடையப்பட்டது. சிவன் கோயிலான இந்தக் குடைவரை அழிக்கப்பட்டு பின்னாளில் பெருமாள் குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கு

சுழலும் விளக்கினைக் கொண்ட இந்த கலங்கரை விளக்கம் 1887ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. முற்றிலும் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டது.

1904 இல் இருந்து செயல்படுத்தப்பட்டது. இவ்விளக்கத்திற்கு அருகிலேயே இந்தியாவிலே மிகப் பழமை வாய்ந்த கி,.பி. 640 ஆம் ஆண்டு மகேந்திர பல்லவரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளது.
இக் கோவிலின் விளக்கை கலங்கரை விளக்காக பயன்படுத்தினர்.
தற்போது பல்லவரின் நினைவுச் சின்னமாக விளங்குகின்ற இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது

கடற்கரை கோவில் :

வங்காள விரிகுடாவின் ஓரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
அலைவாய் கோவில் என அழைக்கப்பட்ட கோவில். அலைகள் இக் கோவிலை தொட்டு செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டதால் இப்பெயரை பெற்றது.


இப்போது அலைகள் தொடாயவண்ணம் கற்கள் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.

8 ஆம் நூற்றாண்டில் கிரானைட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
7 பகோடாகளில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது.
7 கோயில்கள் இருந்திருக்கு. இதை ‘செவன் பகோடோஸ்’ என்று வரலாற்றில்
சொல்லி இருக்கிறார்கள்.
பகோடான்னா இந்தியில கோயில் என்று அர்த்தம். மற்றவை கடல்ல மூழ்கி இருக்கலாம்.

கற்களில் உள்ள சிலைகளும், கலைநயம் மிக்க சிற்பங்களும், இந்த இடத்தின் சிறப்பை மேலும் அதிப்படுத்துகின்றன.

கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது.

அர்ஜுனன் தவம் :

கங்கை கீழிறங்கி வருதல் எனவும் இது கூறப்படுகிறது. இந்த இடம் தான் மகாபலிபுரத்தில் மிகவும் தொன்மையான இடம். மேலும் சமகாலதிற்கு ஏற்ப அதன் மேல் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகள் தான் சிறந்தது எனலாம். இங்கு இருக்கும் கங்கை கீழே இறங்கி வருவது போன்ற சிற்பமும் அர்ஜுனன் தவம் புரியும் சிற்பமும் இந்த இடத்தின் அழகியலை மேலும் கூட்டுகின்றன.

இரதங்கள் :

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும்.

மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:

பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்.

வலையன்குட்டை இரதம்.

பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்.

கணேச இரதம்.

ஐந்து இரதங்கள் :

தர்மராஜ ரதம்.

பீம ரதம்.

அருச்சுன ரதம்.

திரௌபதை ரதம்.

நகுல சகாதேவ இரதம்.

இங்குள்ள நிலமங்கை உடனுறை ஸ்தல சயன பெருமாள் கோயில் முக்கிய வழிபாட்டுத்தலம்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வர் இங்கு அவதரித்துள்ளார்.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியிலேயே 4 கிமீக்கு முன்னால் இந்தப் புலிக்குகை இருக்கிறது .

 

மகாபலிபுரம் அழகு
by Swathi   on 16 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குடும்பத்துடன் கடம்பவனம்  சென்றுள்ளீர்களா?  பார்க்கவேண்டிய  தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம் குடும்பத்துடன் கடம்பவனம் சென்றுள்ளீர்களா? பார்க்கவேண்டிய தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம்
கண்ணைக் கவரும்  பிச்சாவரம் காடு கண்ணைக் கவரும் பிச்சாவரம் காடு
பிச்சாவரம் காடு பிச்சாவரம் காடு
ஜெகன்னாதப் பெருமாள் ஜெகன்னாதப் பெருமாள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.