|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் |
||||||||
![]() மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் சித்த மருத்துவத்தின் அறிவியல் சிந்தனை: பயோ மெடிக்கல் துறையைச் சேர்ந்த டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் அவர்கள் சித்த மருத்துவத்தை அறிவியல் ரீதியாகத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ‘நீரைச் சுருக்கி மோரை பெருக்கி நெய்யுருக்கி..’ என்பது சித்தர் சொன்ன பாடல் ஆகும். நீரை நன்கு கொதிக்க வைப்பதால் சிறிது மி.லி. நீரானது ஆவியாகச் செல்லும். எனவே நீரானது சுருங்கும். அப்படி நீரைப் பருக வேண்டும். தயிரை நன்கு கடைந்து மோராகப் பருக வேண்டும். அவ்வாறு இல்லாமல் தயிராகச் சாப்பிடும் போது, அதைக் கடையும் வேலையை வயிறு செய்யும். இதனால் வயிறு வலி மற்றும் தூக்கம் ஏற்படும். நெய் உடலுக்குக் குளிர்ச்சி தருவது. எவ்வாறெனில் நெய்யைச் சாப்பிடும் போது அதனை உருக்க வெப்பம் தேவை. ஆக வயிறானது உடல் சூட்டை எடுத்துக் கொள்கிறது. இவற்றை அன்றே நம் சித்தர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். அவர்கள் எதையும் போகின்ற போக்கில் கூறவில்லை என்று கூறுகிறார் டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் அவர்கள். இந்தியாவின் முதல் 3டி புத்தகம்: ஒரு துறை வளர வேண்டுமென்றால் அது நவீனமயமாக்கப்பட வேண்டும். அதன் தொன்மையும் மாறாமல் இருக்க வேண்டும். இந்தியாவிலேயே முதன்முதலாக மூலிகை 3டி புத்தகம் ஒன்றை 3 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் அவர்கள். ஒரு தொகுதிக்கு 100 மூலிகைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கென பிரத்தியேக கண்ணாடியையும் வடிவமைத்துள்ளார். இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இக்கண்ணாடி இல்லாது பார்த்தால் கூட பிம்பம் தெரியும், கண்ணாடியுடன் பார்த்தால் முப்பரிமாண தோற்றத்தைக் கொடுக்கும் என்பதே ஆகும். இப்புத்தகம் எழுதுவதற்காகப் பல ஊர்கள், பல நாடுகள் சென்றிருக்கிறார். தானே தயாரிக்கும் மருந்துகள்: ஸ்டெத்தோஸ்கோப்பை போன்று சித்த மருத்துவத்திற்கு நாடி மீட்டரைக் கண்டுபிடிக்கும் அரிய ஆராய்ச்சியிலும் டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். அறுசுவைக்கும் நாடித்துடிப்புக்கும் தொடர்புள்ளது எனக் கூறுகிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தானே மருந்துகளைத் தயாரித்துக் கொடுக்கிறார். குழந்தையின்மை, மனநோய் போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறார். சித்தர்கள் மண்சட்டியில் மருந்து தயாரித்தார்கள். வெப்பத்திற்கு, இந்த மரத்தின் கட்டையைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இக்காலத்தில் அவ்வாறு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. எவர்சில்வர் பாத்திரத்தில் சித்தர்கள் சொன்ன அதே முறையில் மருந்துகள் தயாரிப்பதாகக் கூறுகிறார். இதனால் மூன்று நாள்களில் குணமாக வேண்டிய நோய் ஒரு சில நாட்கள் அதிகம் எடுப்பதாகக் கூறுகிறார். இளம் மருத்துவர்களுக்கும், மாணவர்களுக்கும்… இன்றைய இளம் சித்த மருத்துவர்களும், மாணவர்களும் குறைந்தது ஐந்து வருடங்களாவது மருந்துகளைத் தானே தயாரிக்க வேண்டும் என்று டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் அவர்கள் கூறுகிறார். அவ்வாறு செய்யும் போது தான் மூலிகைகளைக் குறித்த பரிச்சயமும், எந்த நோய்க்கு எந்த மூலிகை சரியாக இருக்கும் என்பது குறித்த பரிச்சயமும் நன்கு புலப்படும் என்கிறார். |
||||||||
by Lakshmi G on 01 Nov 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|