|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். வெற்றி வேந்தன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். வெற்றி வேந்தன் உத்தம சோழபுரம்: ‘சித்தர் பூமி’ என அழைக்கப்படும் உத்தம சோழபுரத்தில் டாக்டர். வெற்றி வேந்தன் அவர்கள் நடத்தி வரும் சித்த மருத்துவ மனையில் 65 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த கொரோனா காலகட்டத்தில் இந்த மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. மிகக்குறுகிய காலத்தில் இந்த மருத்துவமனை அனைவரிடமும் பிரபலமடையக் காரணம் தரமான சிகிச்சையும், நோயாளிக்கான போதுமான வசதிகளும் ஆகும். அன்றாட நடவடிக்கைகள்: கொரோனா நோயாளிகளுக்குக் காலையில் எழுந்தவுடன் உப்பு, மஞ்சள் கலந்த வெந்நீர் வாய் கொப்பளிக்கக் கொடுக்கப்படுகிறது. மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓமம், வெண்கடுகு மற்றும் கபசுரக்குடிநீர் கொடுக்கப்பட்டு காலை 9 மணிக்கு காலையுணவு கொடுக்கப்படுகிறது. சிறிது இடைவேளைக்குப் பிறகு மூலிகைக் குடிநீர், மதிய உணவு, இரவு உணவு முடித்த பிறகு மிளகு பால், வாழைப்பழம் போன்றவை கொடுக்கப்படுகின்றன. மேலும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் அவர்கள் சொன்ன அடுத்த மூன்று நிமிடத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. மூன்று வேளைகளுக்கும் தனித்தனி மருத்துவர்கள் செயல்படுகின்றனர். இவை அனைத்தும் இந்த மருத்துவமனையின் சிறப்புத் தன்மைகளாகப் பார்க்கப்படுகின்றன. சித்தமும், யோகமும்: ‘கடவுளை அடைய முயற்சிப்பவன் பக்தன், கடவுளை அடைந்தவன் சித்தன்’. யோகமுறையில் உயரிய நிலையை அடைந்தவர் சித்தர் ஆவார். யோகம் இல்லாமல் சித்தமும், சித்தாவும் இல்லை என்று கூறலாம். யோகத்தைப் பற்றிப் பேசாத சித்தர்கள் இல்லை. யோகத்தைத் தாண்டிய நிலையே பிராணயம் ஆகும். அறிவியலாளர்களான சித்தர்கள்: சித்தர்கள் மிகப்பெரும் அறிவியலாளர்கள் ஆவர். உலகம் தன்னை அறிய முயற்சிக்கும் போதே தனித்த அடையாளத்தை உருவாக்கியவன் தமிழன் ஆவான். பிற நாடுகள் உலகத்தைக் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது உடலைக் குறித்து ஆராய்ச்சி செய்தவன் தமிழன் ஆவான். எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாத போதே, உடலை அறிவால் ஆராய்ச்சி செய்து பயிற்சிகளாலும், இயற்கை மூலிகைகளாலும் உடலைச் சரி செய்தவர்கள் சித்தர்கள். அக்காலத்திலேயே சிறந்த அறிவியலாளர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன பல விஷயங்கள் இன்றும் நம்முடைய அறிவிற்கு எட்டாதனவாக உள்ளன. அவர்கள் சொன்ன விஷயங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் மனித உடலைக் குணப்படுத்த வல்லனவாக உள்ளன. தமிழனின் மருத்துவம்: தமிழ் மொழிக்குரிய மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். நம்முடைய நாட்டின் உணவு முறைக்கும், உடல் வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் ஏற்ப நமது உடல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தவர்கள் சித்தர்கள். அதனால் தான் சித்த மருத்துவம் இன்றும் தமிழனின் உடலுக்கு ஒத்துப் போகிறது. அவனது உடலை உடனே சரி செய்கிறது. 1000 மருத்துவ முறைகள் வந்தாலும் சித்த மருத்துவ முறைக்கு எவையுமே ஈடாகாது. அறிவியல் வளர்ச்சி இல்லாத கால கட்டத்திலேயே சித்தர்கள் உடலை ஆராய்ச்சி செய்து கூறிவிட்டனர். அறிவியல் வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில் நாம் சித்தர்கள் சொன்னதை அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்து நிரூபிக்க வேண்டும். சான்றுகளைக் காட்ட வேண்டும். சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். இன்றைய உலகில் எல்லாமே அறிவியல் முறையில் நிரூபிக்கக் கூடியதே. எனவே நாம் நம்முடைய அடையாளத்தைப் பாதுகாப்பதுடன் அதை அனைவரும் அறிய முயற்சி செய்ய வேண்டும். நாம் சொல்வதை எவரும் மறுக்க முடியாத அளவிற்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.
|
||||||||
by Lakshmi G on 22 Sep 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|