|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - விக்ரம் குமார் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - விக்ரம் குமார் பல்வேறு முகங்கள்: கொரோனா நோயானது உலகத்தையே மிகுந்த அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கால கட்டத்தில் நவீன உத்திகளுடன் சித்த மருத்துவத்தின் தொன்மை மாறாமல் நோய் நீக்கிக் கொண்டிருப்பவர் மருத்துவர் விக்ரம் குமார் அவர்கள் ஆவார். விளக்கேற்றி மண்பானையில் சமைத்து நடன அசைவுகள் பயிற்றுவித்து சிக்கன் சூப் கொடுத்து நிலாச்சோறு ஊட்டி நோயாளிகளின் உடலும் உள்ளமும் இன்புற்றிருக்கச் செய்து நோய் தீர்த்து வழியனுப்பிக் கொண்டிருக்கிறது திருப்பத்தூர் கோவிட் சித்த மருத்துவ நிலையம். இத்தகைய புதுமைகளுக்குச் சொந்தக்காரர் விக்ரம் குமார் ஆவார். இவர் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன், எழுத்தாளர், பேச்சாளர், நடனக் கலைஞன், பறவைகளின் காதலன், பயண பிரியன் என்று பல்வேறு முகங்களுக்குச் சொந்தக்காரர். குணமான நோயாளிகள்: இந்த மருத்துவ நிலையம் தொடங்கி 25 நாட்கள் ஆகின்றன. இந்த மருத்துவ நிலையத்திற்கு முதலில் வந்த 78 பேர்களில் 76 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பதிவு செய்த 123 பேர்களில் 42 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த சித்த மருத்துவமனைக்கு வந்து பயன்பெறுகின்றனர். வசதிகள்: ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாவட்டமாகத் திருப்பத்தூர் மாவட்டம் திகழ்கிறது. இந்த சித்த மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. ‘தான் ஒரு நோயாளி’ என்ற உணர்வே ஏற்படாதவாறு ஒரு குடும்பமாக இந்த மருத்துவமனையில் நோயாளிகளைக் கையாளுகின்றனர். இவர்களின் பார்வைக்கு மூலிகைத் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரும்புவோர் தோட்டத்தை ரசித்தல், தண்ணீர் விடுதல் போன்ற பணிகளைப் பொழுது போக்கிற்காகச் செய்யலாம். தொலைக்காட்சி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை போக எந்நேரமும் இசை ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கும். இவை அனைத்தும் தான் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வையே நோயாளிகளுக்கு ஏற்படுத்தாது. உணவு முறைகள்: ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை மூலிகை சூப் அல்லது மூலிகைக் கசாயம் நோயாளிகளுக்கு வந்து கொண்டே இருக்கும். மேலும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மூலிகை உணவுகள் அனைத்துமே மண்பானையில் பிரத்தியேக வைத்தியர்களால் சமைக்கப்பட்டு வழங்கப்படுபவையே ஆகும். இதனால் நோயாளிகளுக்குச் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதுடன், அவர்களுக்குப் பாரம்பரியத்தின் பெருமையையும் எடுத்துரைப்பதாக அமைகிறது. சிறப்பு: இந்த சித்த மருத்துவ நிலையத்தில் மூலிகைகள் போட்ட முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனால் சுவாசத்தின் வழியாகவே நோயாளிகள் புத்துணர்ச்சி பெறுவதைக் காணமுடிகின்றது. சாம்பிராணி மேல் மூலிகைகளைப் போட்டு தூபம் போடும் பழக்கமும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது. இது முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகி்ன்றது. மேலும் குட்டிக் கதைகள், சித்த மருத்துவத்தின் வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல், யோகா பயிற்சி போன்றவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. தடுப்பு முறைகள்: கபசுரக் குடிநீரானது கொரோனா நோயாளிகளுக்குச் சிறந்த தடுப்பு மருந்தாகச் செயல்படுகிறது. இதை ஆய்வு செய்தும் மருத்துவர் விக்ரம் குமார் அவர்கள் கண்டறிந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு குழுவிற்கு கபசுரக் குடிநீரைக் கொடுத்தும், மற்றொரு குழுவிற்கு கபசுரக்குடிநீரை கொடுக்காமலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கபசுரக்குடிநீரை குடித்தவர்களிடம் நல்ல மாற்றம் இருந்ததைப் பார்க்க முடிந்தது என்று அவர் தெரிவிக்கின்றார். நோயாளிகள், பொது மக்கள், சமூக தன்னார்வலர்கள் ஆகிய அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்தால் நிச்சயம் கொரோனாவை எதிர்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றார். |
||||||||
by Lakshmi G on 02 Oct 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|