LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

மக்களின் மகரிஷி

 18 மாதங்கள் , பாராட்டுமளவிற்குத் திறமையாக நிர்வாகத்தை நடத்தி வந்தார் லால் பகதூர் சாஸ்திரி . ரஷ்யாவில் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு அங்கே அகால மரணம் அடைந்தார் . இது மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது . இரண்டு ஆண்டு கூட முடியவில்லை . அதற்குள் மீண்டும ஒரு புதிய பிரதமரைத தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது .

“ காமராசர் கைகளில் இந்தியா பத்திரமாக இருக்கிறது - இனியும் இருக்கும் . சாஸ்திரிக்குப் பின் யார் என்பதற்கு அவர் விடை காண்பார் ” என்று உலகமே காமராசர் மீது பார்வை பதித்தது .

1965 ஜனவரி 14 ஆம்தேதி அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டம கூட்டப்பட்டது . பாராளுமன்ற காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க விவாதிக்கப்பட்டது . காரியக் கமிட்டி புதுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காமராசருக்கு வழங்கியது .

பெருந்தலைவர் இந்திய அரசியலில் புதுமைக்கு ஒரு சின்னமாகச் செயல்பட்டார் . அழைத்தவர்களில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களையும் தன்பேச்சை ஒப்புக் கொள்ள வைத்தார் . அவரது அறிவுத் திறனை டெல்லியில் கூடிய எம் . பி . க்கள் நாளெல்லாம் சொல்லிப் பாராட்டினர் .

அப்போது அதுல்யாகோஷ் காமராசரே பிரதமராக வரவேண்டும என்ற கருத்தை வெளியிட்டார் . “ என்னுடைய பெயரை இதில் இழுக்காதீர்கள் ” என்று கூறி நேருக்கு நேர் கூறி மறுத்து விட்டார் . மக்கள் அவரை மகரிஷி காமராஜ் என்று அழைத்தனர் .

இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துள்ளார் . இதனால் நாட்டு மக்களுக்கு அவரை நன்றாகத் தெரியும் . ஒரு பெண் பிரதமராக வருவதை எல்லோரும் விரும்புவார்கள் என்பதால் இந்திரா காந்தியை பிரதமராக்க பெருந்தலைவர் முடிவு செய்தார் .

மாநில முதல் மந்திரிகள் இந்திராகாந்திக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர் . 1966 ஜனவரி 16 ஆம்தேதி 16 முதல்வர்களில் 14 பேர் இந்திரா காந்தியை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்கள் .

மொரார்ஜி தேசாயும் அவரது ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் . ஜனவரி 18 ஆம்தேதி பெருந்தலைவர் மொரார்ஜி தேசாய் வீட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார் . இந்திரா காந்திக்கு மெஜாரிட்டி இருக்கிறது . ஏகமனதாக பிரதமரைத் தேர்ந்தெடுக்க வழி விடுங்கள் என்றார் . ஆனால் தேசாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை . ஓட்டுப்பெட்டி உண்மை பேசும் என்று கூறினார் . பெருந்தலைவர் பொறுமையுடன் வெளியேறினார் .

1966 ஜனவரி 19 ஆம் தேதி புதுத்தலைவரை தேர்ந்தெடுக்க பாராளுமன்றத்தில் கூட்டம் கூடினார்கள் . சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டி என்ற ஒன்று அன்றுதான் முதன்முறையாக நடந்தது .

இந்திரா காந்தியின் பெயரை நந்தா முன்மொழிய , சஞ்சீவரெட்டி வழி மொழிந்தார் . மொராஜி தேசாயின்பெயரை கே . அனுமந்தையா முன்மொழிய டி . ஆர் . பாலிவால் வழி மொழிந்தார் . ரகசிய ஓட்டெடுப்பு 2 மணி நேரம் நடந்தது . ஓட்டுப் பெட்டி பேசியது ; 355 ஓட்டுகள் பெற்று இந்திரா காந்தி வென்றார் . 169 ஓட்டுகள் பெற்று மொரார்ஜி தேசாய் தோல்வி அடைந்தார் .

காமராசரின் வலிமை என்பது அவரது சிறந்த பண்பிலும் , அரசியல் அறிவுக் கூர்மையிலும் இருந்ததை இந்தத் தேர்வு மீண்டும் நிரூபித்தது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.