LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

கண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம் !

         இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண்,பெண் இருபாளரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும்,இந்திய இளைஞர்கள் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்கியதன் பயனாய் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் இவ்வேளையில் அவர்களைக் காப்பதும்,அவர்களுக்கு நல்வழி காட்டுவதும் அவசியம் என்பதால் ஒட்டுமொத்த இந்திய சமூகம் உடனடித்தீர்வுகளில் இன்றே இறங்குவது நலம் பயக்கும் நடவடிக்கையாகும்.

      நாட்டின் பதின்மூன்றாவது,தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கும் இவ்வேளையில் இந்திய சமூகம் எதிர்பார்த்தது போல் நடை பெறாமல் போன வருத்தம் இருந்தாலும்,இனி யார் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் இந்திய சமூகத்துக்குப் பட்டை நாமம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டது.

     மேலும் அண்மைய காலமாக சிறிய சமூகமாக இந்திய சமூகம் பெயர் குறிக்கப்பட்டு,அதனை மேலும் ஒரம்கட்டும் நடவடிக்கைகள் இன்றோ நேற்றோ எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல.மாறாக நெடுக்காலமாக எல்லாம் திட்டமிட்டே நடைபெற்று வந்த இந்த உண்மையை இனியாகிலும் நாம் ஏற்கத்தான் வேண்டும். இன்றைய அவல நிலைக்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.

      இனி, நம் கையைக்கொண்டுதான் கரணம் எனும் நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்றி சமூகத்தின் அடுத்த வெற்றிக்கோட்டைத் தொடவிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்ட நமது புதிய யுத்திகளைச் சொல்லித்தருவோம்.

      தேர்தலுக்குப்பிறகு,அமைக்கப்பட்ட அமைச்சரவை இந்திய சமூகத்துக்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்குச் சாதகமாக அமைந்தது இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சாகும். இதன் அமைச்சர் கைரி ஜமாலுதின். அம்னோ இளைஞரணித் தலைவரான இவர் முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் முதன் முறையாக ஒரு தமிழருக்கு துணையமைச்சர் பதவிவழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சில ஆண்டுகள்  முன்னாள் ம.இ.கா.இளைஞரணித் தலைவர் எஸ். விக்னேஸ்வரன் இந்த அமைச்சுக்கு நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

      இன்றைய பிரதமர் நஜீப், இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சராக 1986 ஆம் ஆண்டும்,தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு முதல் அம்னோ இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.நஜீப் அவர் காலத்தில் இந்தியர்களுக்குச் செயத்தவறியதை,தற்போது பதவி ஏற்றுள்ள அமைச்சர் கைரி ஜமாலுடின் தவறாமல் செய்வார் என்று நம்புகிறோம்.சத்து மலேசியா கொள்கைப்படி பாகுபாடின்றி இந்திய இளைஞர்களுக்கு உதவ வேண்டும்.இதில் துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் கூடுதல் கவனம் செலுத்திக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.         

      1960 ஆம் ஆண்டுகளில் நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறந்த ஒரு காலம் இருந்தது மிக உண்மை.நமது இந்திய விளையாட்டாளர்கள் மட்டுமின்றி 1950 ஆம் ஆண்டுகளில் சீனர்கள் பூப்பந்துவிளையாட்டை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதுடன் தாமஸ் கிண்ணத்தைப் பல ஆண்டுகள் வெற்றி கொண்டு நாட்டுக்குப்  பெருமை சேர்த்தவர்கள்.

      1969 மே இனக்கலவரத்துக்குப் பின் அரசாங்கம் தன் மூப்பாக எடுத்த பல முடிவுகளால் தமிழர்களும்,சீனர்களும் பல துறைகளில் ஓரம் கட்டப்பட்டது போல்,விளையாட்டுத் துறையிலும் இரு இனங்களையும் முற்றாக ஓரங்கட்டியது. பூப்பந்து, நீச்சல், பௌலிங், குவாஷ், கூடைப்பந்து, மேசைப்பந்து,ஜூடோ, போன்ற விளையாட்டுகள் இன்றும் சீனர்களின் கட்டுப்பாட்டுக்களில் இருந்து வருகின்றன.சீனர்களின் பொருளாதார பலம் அவர்களை இத்துறையில் காலூன்றச் செய்துள்ளது.

     இந்தியர்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கு பெற்ற காற்பந்து,ஓட்டப்பந்தயம்,ஹாக்கி,பெருநடைப்போட்டி,டெனிஸ் ஆகிய போட்டிகளில் இந்தியர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.பொருளாதாரப் பிரச்னையினால் இவர்கள் இத்துறையில் நிலைக்க முடியாமல் போனது ஒரு புறமிருக்க,அரசாங்கம் திட்டமிட்டே இவர்களை ஒதுக்கியதுதான் உண்மை.

     விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு முறையானப் பயிற்சிகள் மூலம் உருவாக்கவேண்டியஇடம்,ஆரம்பப்பள்ளிகளும்,இடைநிலைப்பள்ளிகளும்தான்.ஆனால்,இனப்பாகுபாட்டைக்காட்டக் கூடாத பள்ளித்தலைமையாசிரியர்களும்,பள்ளி முதல்வர்களும் மலாய்க்காரர்களாக இருந்ததால்,சீன,இந்திய மாணவர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறார்கள்.

      மலேசிய விளையாட்டு மன்றம் நடத்தும் போட்டிகளில் மலாய் மாணவர்களே அதிகமாகப் பங்கு பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.இதன் தாக்கம் தேசிய நிலையிலும் பிரதிபலிக்கின்றன.தேசிய காற்பந்து போட்டிகளில் ஒருகாலத்தில் அதிகமான இந்திய விளையாட்டாளர்கள் விளையாடிய இடத்தில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்புக்கொடுப்பதுஎந்தவிதத்தில்ஞாயம்?சீனர்களைஅடியோடுஇந்தவிளையாட்டில்இல்லாமல் செய்துவிட்டு தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.

      தேசிய விளையாட்டு வாரியத்திற்கு இந்திய இயக்குநர் ஒருவரை நியமனம் செய்யவிருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார் டத்தோ மு.சரவணன் பல மலாய்க்கார அதிகாரிகள் மத்தியில் தமிழர் ஒருவரை மட்டுமே நியமிப்பது நல்ல பலனைத் தராது என்பது தெளிவு.அங்கேயும் கோட்டாமுறையில் மலாய்க்காரர்கள் பேசுவார்கள்,முடிவு செய்வார்கள்.நமக்காகப் போராடும் நபர்களை மட்டுமே நியமியுங்கள்.தலையாட்டிப் பொம்மைகளும் ஜால்ராக்களும் இனி நமக்கு வேண்டாம்.

     அமைச்சரவையில் ஓர் அமைச்சர் மட்டுமே இருந்த வேளையில் இந்தியச்முதாயம்இழந்தது அதிகம்.இனியும் அந்த கண்ணாமூச்சு வேலைகள் எல்லாம் இனியும் வேண்டாம்.நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் மீண்டும் சிறந்து விளங்க உதவுங்கள்.நமது இளைஞர்களின் மீது படிந்துள்ள கறைகளைப் போக்குங்கள்.

     இளைஞர்களாக இருக்கும் அமைச்சரும்,துணையமைச்சரும் சாதனைப்படைக்க வேண்டும்.இந்திய இளைஞர்கள் உலகளவில் சாதனைப் படைக்க உதவுங்கள்!

 

வலைத்தமிழுக்காக : வே.ம.அருச்சுணன் - மலேசியா

by Swathi   on 05 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.