LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

மலேசிய எழுத்தாளர் சங்கம்

                                                                                     வலைத்தமிழுக்காக : வே.ம.அருச்சுணன், மலேசியா

       தமிழகத்தில் இயங்கி வரும்,தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை,இந்திய அளவிலும்,உலகளவிலும் சிறப்பாகச் செயல்படும் தமிழ்ச்சங்கங்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது.

       கடந்த 17.3.2013 சென்னையில் நடைபெற்ற விழாவில்,உலகலாவிய நிலையில் சிறந்த அமைப்பின் தலைவராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதும்; வரவேற்கத்தக்கதுமாகும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி,மலேசியத்  தமிழர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

        மறைந்த திரு.ஆதிகுமணன் அவர்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பேற்ற இளந்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்கள் துடிப்புடன், தொய்வில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பராமரிக்கவும்,வளர்க்கவும் மேற்கொண்ட  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சங்கத்தை இன்றுவரை மிகச் சிறப்பாக வழிநடத்திவருவது போற்றதக்கதாகும்.

       மலேசிய இலக்கியங்களை உலக அளவில் அறிமுகம் செய்யும் விதத்தில்,முதல் கட்டமாக இவரது தலைமையில் 2004 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கும் புதுவைக்கும் பெங்களூருக்கும் சுற்றுலா மேற்கொண்டு கருத்தரங்களும் சொற்பொழிவுகளும் நடத்தியது.அப்போது அவர்களுக்கு மூன்று மாநிலங்களிலும் உற்சாகமான வரவேற்புகள் வழங்கப்பட்டன.பல முக்கிய எழுத்தாளர்கள்,கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனிப்பை அவர்கள் பெற்றார்கள்.அப்போது அங்கு வழங்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம்’ (2004) என்னும் நூல் மலேசியத் தமிழ் வடிவங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தியது.

     மேலும்,மலேசியத்தமிழ்எழுத்தாளர்களில்இருப்பவர்கள்,மறைந்தவர்களின் 358 பெயர்கள் அடங்கிய எழுத்தாளர்கள் அகர முதலியாகத் தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்’ (2004) எனும் நூல் முக்கியமானது.

    ம.எ.ச.வெளியிட்ட ‘மலேசிய,சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் (2005)  ‘மலேசியத் தமிழ் இலக்கியம்’( 2007) ஆகிய நூல்கள் மூலம் நமது மலேசிய இலக்கியங்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், தமிழக/புதுவைப் பல்கலைக்கழகங்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்லப்படுவதில் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனின் பணி  நினைவு கூறத்தக்கதாகும்.
     
   தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு மலேசிய மண்ணில் உரியவரவேற்பும் கௌரவமும் அளித்துச் சிறப்பிக்கும் பணியை பல்லாண்டுகளாக தொடர்ந்து செய்துவரும் இவர் தமிழகத்தின் பிரபல கவிஞர்வைரமுத்து,எழுத்தாளர்களானபிரபஞ்சன், ஜெயமோகன்,
எஸ்.இராமகிருஷ்ணன்,நாவலாசிரியர் சுப்பிரபாரதிமணியம்,நடிகரும்,டைரக்டருமான சேரன் போன்றவர்களைக் கொண்டு மலேசிய எழுத்தாளர்களுக்குச் சிறுகதை,நாவல் போன்ற துறைகளில் பயிற்சி பட்டறை நடத்தி மலேசியாவில் சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சியில் தமிழக எழுத்தாளர்களின் பங்களிப்பையும் பெற்றது சங்கம் இவரின் கீழ் மேற்கொண்ட பயன் மிக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும்.இதன் மூலம் நமது படைப்புகளையும், படைப்பாளிகளையும் தமிழக எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

      தமிழகத்தில் மட்டுமின்றி, உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு எல்லாம் இலக்கியப் பயணம் மேற்கொண்டு தமிழ் மொழி,இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும்  திரு.பெ.இராஜேந்திரன் என்றும் நினைவு கூறத்தக்கதாகும்.

      அண்மையில்,உலகத் தமிழ் தஞ்சைப் பல்கலைக்கழகம்,மலேசிய மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘கரிகாழன் சோழன்’ விருதுகளும் இவரின் தொலைநோக்குப் பார்வையாலும்,அயரா உழைப்பினாலும் விளைந்த அனுகூலங்கலாகும்.
    
       எதிர்காலத்தில், இவரது சீரிய பணிகளாலும், தமிழ்த்தொண்டுகளாலும் மலேசியத் தமிழ் இலக்கியம் மேலும் சிறப்படையும் என்று நம்பலாம்.உலகத்தரத்திலான பல விருதுகளும் தவறாமல் அவரை வந்து சேர வாழ்த்துவோம்! 

by Swathi   on 21 Mar 2013  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023 சியாட்டிலில் பட்டிப்பொங்கல் விழா - 2023
மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு மூன்று இலட்சம் அமெரிக்க வெள்ளிகள் கொடுத்து ஹூஸ்டனில் தமிழ் இருக்கை அமைய பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளது தமிழ்நாடு அரசு
வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி வட அமெரிக்காவில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி
செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு  6 நாட்கள் நடக்கிறது செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கி கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு 6 நாட்கள் நடக்கிறது
மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன்  சாமிவேலு  அவர்களுக்குப் புகழ்வணக்கம்! மலேசிய மக்களின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமை துன் சாமிவேலு அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
சாலையின் பெயர் வள்ளுவர் வழி சாலையின் பெயர் வள்ளுவர் வழி
TNF 48 தேசிய மாநாட்டு விழா TNF 48 தேசிய மாநாட்டு விழா
"வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் - 1" - நேரலை
கருத்துகள்
29-May-2014 03:00:51 dr.k.gandhidass said : Report Abuse
உங்கள் தமிழ் சேவை தொடர்க இதயம் நிறைந்த vaazthukkal.valamodu,nalamodu.pughzaodu-தமிழோடு vaazhga
 
06-Feb-2014 05:49:51 பேராசிரியர் ப.சந்திரசேகரனன் said : Report Abuse
பிரமிக்க வைக்கிறது. மலேசிய வாழ் தமிழ் மக்களுக்கு இத்துனை தமிழ்ஆர்வமா? வளர்க உங்கள் ஆர்வமும் தொண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.