LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டார் !

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் நேற்று கைது செய்யப்பட்டார்.மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்து, காவலில் வைக்கும் படி உத்தரவிட்டார். அதன் பிறகு நடந்த  கிளர்ச்சியைத் தொடர்ந்து, அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். நீதிபதியைக் கைது செய்ததை எதிர்த்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நஷீத்தைக் கைது செய்ய நீதிமன்றம் இரண்டு முறை வாரண்ட் பிறப்பித்தது.கைதாவதில் இருந்து தப்பிப்பதற்காக, மாலேயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நஷீத் கடந்த மாதம் தஞ்சம் அடைந்தார். பின்னர், இந்திய அரசு மேற்கொண்ட சமரச முயற்சியைத் தொடர்ந்து, அவர் பதினோரு நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 23ஆம் தேதி தூதரகத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், நஷீத்தைக் கைது செய்யுமாறு உல்ஹுமாலே மாகாண நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டைத் தொடர்ந்து, அவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நஷீத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடுவார் என மாலத்தீவு அரசு வட்டரங்கள் தெரிவிக்கின்றன.

Former Maldivian President Mohamed Nasheed Arrested

Former Maldivian President Mohamed Nasheed was on Yesterday arrested by police after a warrant was issued by a court here in connection with his trial over the arrest and subsequent detention of a judge during his rule.

by Swathi   on 06 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.