LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

மாலினி 22 பாளையங்கோட்டை - திரை விமர்சனம் !!

நடிகர் : க்ரிஷ் ஜே சாதார்

 

நடிகை : நித்யாமேனன்

 

இயக்கம் : ஸ்ரீ பிரியா

 

ஒளிபதிவு : மனோஜ் பிள்ளை 

 

படத்தின் ஆரம்பமே இளம் பெண் ஒருத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். அவள் ஏன் கைது செய்யப்பட்டால் என்பதை சொல்வதாக தொடங்குகிறது கதை.

 

நர்சிங் கோர்ஸ் முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக விசாவுக்காக காத்திருக்கிறார் ஒரு இளம் பெண்(நித்யா மேனன்). அவர் விசா வாங்கி தரும் தனியார் டிராவெல்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கடி போய் வந்த பழக்கத்தில் அங்கு வேலை பார்க்கும் மேனஜருடன் காதல் மலருகிறது. அந்த காதல் என்னென்ன பிரச்சனைகளில் அவளைக் கொண்டுபோய் தள்ளுகிறது? அதிலிருந்து அவள் தப்பித்தாளா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

 

படத்தின் முதல் பாதி வழக்கமான காதல் கதையாக நகர்ந்தாலும், அந்த காதலினால் அவள் சந்திக்கும் பிரச்சனைகளை இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் காட்டப்படுவதால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு வலுக்கிறது. இரண்டாம் பாதி ட்விஸ்டுக்கு மேல் டிவிஸ்ட்டாக பரபரப்பாக நகருகிறது.

 

ஹீரோயினாக வரும் நித்தியா மேனன் அருமையாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் அப்பாவி பெண்ணாக வரும் காட்சியிலும் சரி, கிளைமேக்சில் வில்லத்தனம் செய்யும் காட்சிகளிலும் சரி செமையா நடித்திருக்கிறார். 

 

நித்யா மேனனின் காதலனாக வரும் கிரிஷ்ஷின் உண்மையான முகம் தெரிய வரும் போது நம்மை அதிர வைக்கிறது. விசா வழங்கும் நிறுவனத்தின் முதலாளியாக வரும் நரேஷ் மீன் குழம்பு ரெடி பண்ணி வெச்சிட்டு சாப்பிடக் கூப்பிடு என்று நித்யாவிடம் சொல்லும் போதே அடடே இந்த ஆளு ஏதோ வில்லங்கமான ஆளாக இருப்பான் போலிருக்கிறதே என்று எண்ண வைக்கிறது. ஆனால் போகப் போக அவர் ரொம்பவே கொடூரமான ஆசாமி என்பது தெரிய வரும்போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

 

நித்யா மேனனின் தோழியாக வரும் கோவை சரளா அடிக்கடி அவரது ஸ்டைலிலேயே பேசுவது சிரிப்பு வரல..... நித்யாவின் தங்கையாக நடித்திருக்கிறார் வித்யுலேகா ராமன். சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமான கேரக்டர்.

 

பெண் ரவுடியாக வரும் ஜானகி, நித்யா மேனனை துரத்தும் காட்சிகள் செம.....

 

அரவிந்த் ஷங்கர் இசையில் பாடல்கள் பெரிதாக ஒன்றும் எடுபட வில்லை என்றலும், பின்னணி இசை பரவாயில்லை. இது போன்ற படத்தை இயக்கியதற்காகவே ஸ்ரீ பிரியாவுக்கு தனியாக பாராட்டு சொல்லியே ஆகவேண்டும். 

 

மொத்தத்தில் மாலினி 22 பாளையங்கோட்டை சமூகத்தில் நடக்கும் அவலங்களை விளக்கும் சித்திரம் !!

Balachander and Sripriya in Malini 22 Palayamkottai Audio Launch
by Swathi   on 24 Jan 2014  0 Comments
Tags: மாலினி 22 பாளையங்கோட்டை   மாலினி 22 பாளையங்கோட்டை விமர்சனம்   மாலினி 22 பாளையங்கோட்டை திரை விமர்சனம்   மாலினி 22 பாளையங்கோட்டை கதை   Malini 22 Palayamkottai   Malini 22 Palayamkottai Review   Malini 22 Palayamkottai Story  
 தொடர்புடையவை-Related Articles
மாலினி 22 பாளையங்கோட்டை - திரை விமர்சனம் !! மாலினி 22 பாளையங்கோட்டை - திரை விமர்சனம் !!
மாலினி 22 பாளையங்கோட்டை படத்தால் ஷாக் ஆன விஜய் சேதுபதி !! மாலினி 22 பாளையங்கோட்டை படத்தால் ஷாக் ஆன விஜய் சேதுபதி !!
இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக இருக்கிறது : ராதிகா சரத்குமார் !! இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக இருக்கிறது : ராதிகா சரத்குமார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.