LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்

இராஜாஜி பதவி விலகியபின் தமிழகத்தின் முதல்வராக யார் பொறுப்பேற்க வேண்டுமென்ற கட்சி விவாதத்தில் கக்கன் அவர்களும் கலந்து கொண்டு , காமராசர் தலைமை ஏற்று முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார் . கட்சியின் ஒருமனதான முடிவுக்கு இணங்கி காமராசர் முதல்வர் பொறுப்பை ஏற்றார் . ஏழுபேர் கொண்ட அவர்தம் அமைச்சரவையில் எம் . பக்தவச்சலம் , சி . சுப்பிரமணியம் , எஸ் . எஸ் . இராமசாமிப் படையாட்சி முதலியோர் இடம் பெற்றிருந்தனர் .

காமராசர் முதல்வர் பொறுப்பை ஏற்றதும் இராஜ கோபாலச்சாரியார் நடைமுறைப்படுத்திய குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் .

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த காமராசர் முதல்வர் பொறுப்பை ஏற்றதும் கட்சித் தலைமையை எவருக்குக் கொடுப்பது என்ற விவாதம் வந்த போது கட்சியின் செயற்குழு கக்கன் அவர்களையே தெரிவு செய்தது . செயற்குழுவின் ஆணையை ஏற்றுக் கக்கன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் . அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் .

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கக்கன் 1954 முதல் 1957 வரை மாநிலத் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினார் . தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றது இதுவே முதல் முறையாகும் . இதனை ஒரு சமுதாய மறுமலர்ச்சி என்றும் , ஓர் உண்மைத் தொண்டனுக்குக் கிடைத்த வெற்றி என்றும் பல இந்தியத் தலைவர்கள் புகழ்ந்தனர் . ஆனால் , தமிழகத்தைப் பொறுத்தவரை , உண்மைத் தொண்டனுக்குப் பெருந்தலைவர் காமராசர் தந்த மரியாதை என்பதே உண்மை .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.