LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

மனிதர்கள் ....

வாழுகிற

இடங்களில்

அரசியல்

அவசியம் தானோ ...


ஒரு ஆழமான

கேள்வி வந்து

என் மனம்

குடைகிறது

அவ்வப்போது ....


மொழிப்பற்று

இனப் பற்று

இவைதாண்டி

மனிதர்களை மட்டுமே

அடையாளம் கண்டு

திறமைகளை ஆராதிக்கிற

காலம் விரைவில்

வந்துவிடாத ...


ஒரு ஆவல்

வருவதுண்டு

என் அடிமனதில் ....


அவளைக் கெடுத்து

இவளைக் கெடுத்து

வாழ்க்கையில்

உயருகிற போது

பணம் தவிற வேறென்ன

துணைக்கு வந்துவிடப் போகிறது ...


ஒரு

வேதனை மிகுந்த

வினா அலையடிகிறது

சில சமயங்களில் ...


எங்கேயிருந்து

மனிதர்கள்

இதனை கற்றுக்

கொள்கிறார்கள் ...


பேராவல் வருகிறது

செய்கைகள்

மூலம் கண்டுபிடிக்க ...


“ கவனமாய்

காய் நகர்த்த

கற்றுக் கொள்ளாதது

பெரிய தவறோ “ ...


“ வெளிப்படையாய்

இருப்பது

பெரிய குற்றமோ “ ...


“ தந்திரமாய்

வாழத்தெரியாது

தவறு செய்துவிட்டோமோ “ ...


“ வியாபாரமாய் போன

வாழ்க்கைச் சூழலில்

நம்மை சரியாய்

விற்கத் தெரியவில்லையோ “ ...


என் மீது

எனக்கு

அவநம்பிக்கை வருகிறது

சுற்றுப்புற அரசியல்

நான் பாதிக்கப்படுகிற போது ...


வலியது பிழைக்கும்

எளியது வீழும்

இதுதான் எழுதப்படாத

சட்டமோ ...


தெய்வம் தெய்வம்

என்கிறோமே

அது காட்சிக்கு

வெறும் சாட்சியாக

மட்டுமே வந்து போகுமோ ....


நம்பிக்கை மிகுந்த

விசயங்களில்

என் மனது நடத்துகிற

நம்பிக்கையில்லாத்

தீர்மானங்கள் ...


எல்லோருக்கும்

மனசிருப்பது

சால்வை அணியாத

அரசியல்வாதிகளுக்கு

தெரிவதில்லையோ ...


இனியாவது

உள்ளுக்குள்ளே

சாக்கடை ஓடினாலும்

அது பன்னிரென

நம்பவைக்கிற

அரசியல் பழகவேண்டும் ....


எல்லாம்

யோசித்துவிட்டு

என் மனவேதனை

அதிகமானால்

எனது ஊர் சுடுகாடு

மட்டுமே

எனக்கு ஆறுதல் தரும் ...


“ போங்கடா

வாழ்க்கையும்

நீங்களும்

உங்க பணமும் “


என்னை பார்த்து

மெல்லச்  சிரிக்கும்

“ வாழுகிற வரைக்கும்

சந்தோசமாய்

வாழ்ந்து விட்டு வா “


யாரும் சொல்லாத

சேதிகளால் என்னை

தைரியப்படுத்தும் ...


“ என்னை பொருத்தவரைக்கும்

நீங்களெல்லாம் ஒரே இனம்

ஒரே மொழி “


என்னை பார்த்து

மெளனமாய்

ஒரு கோடி அர்த்தம்

விதைக்கும் ...


ஒரு புன்முருவலோடு

அடுத்த விடியலுக்கு

தயரகிவிடுவேன் ...


இன்னும் ரசிக்கிற

விசயங்கள் நிறைய

உண்டு நம்மைச்சுற்றி

என்கிற சந்தோசத்தில் ...


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஹைக்கூ கவிதை ஹைக்கூ கவிதை
அறம்  காப்போம் - வேளாண்மை காப்போம் அறம் காப்போம் - வேளாண்மை காப்போம்
தீண்டல் தீண்டல்
வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி
வளர்சிதை மாற்றம் வளர்சிதை மாற்றம்
விவசாயி புலம்பல் விவசாயி புலம்பல்
வச்ச குறி தப்பாது வச்ச குறி தப்பாது
இயற்கை இயற்கை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.