LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

மாண்பிழக்கும் தமிழினம்

தமிழ் உயிர் என்பார்

அரைகுறை கற்றோர்

தமிழ் சோறு போடுமா?

மெத்தப் படித்த பஞ்சோந்திகள்

பணத்திற்காகப் பெற்ற தாயைக் கொல்லும்

பாதகர்கள்…….!

 

தமிழ்ப்படிப்போர் மூடர் என்போர்

தமிழ்த் துரோகிகள்

தமிழ் மாண்பையும் மரபுகளையும்

அழிக்கும் எத்தர்கள்

இவர்கள் கால்பதியும் பூமி

வெந்து போகும் கொடியோர்

விடும் மூச்சுக்காற்று மனித

இனத்தை அழிந்தே தீரும்………..!

 

மொழியைத் தொலைத்தவன்

இனத்தை அழித்தவன்

தமிழனைக் குழிதோண்டிப் புதைத்தவன்

இவன் படையில்

தமிழ்த் தலைவர்கள்

தொலை நோக்குப் பேராசிரியர்கள்

செல்வச்சீமான்கள்………. உலகை

உருமாற்றம் செய்யும் சிற்பிகள்

என்ன புகழ் பெற்றாலும்

பெற்ற தாயை மறக்கும்

மட்டிகள் வேரை மறப்பது

கேடுகெட்ட தமிழ் இனம் சிதைவது

கருவின் குற்றமா?

 

கொடிகட்டி வாழ்ந்த தமிழனுக்கு

இயற்கை விட்ட சாபமா?

யார் சொன்னாலும் கேட்க மறுக்கும்

மண்டை கனமா அடங்கா திமிரா?

நாள்கள் எண்ணப்படுவதை

உணரா களிமண்களா?

 

தமிழ்க்காவலர்களே………!

துணிந்து  சொல்லுங்கள்

 

தறிகெட்டு திரிந்து

தமிழைத்திட்டமிட்டு அழிக்கும்

தறுதலைகளுக்குச் செவினியறைக் கொடுக்கலாமா?

கொத்துக் குண்டுகளால் துளைக்கலாமா?

 

தமிழ்க்காவலர்களே……..!

உலகின் வழிகாட்டிகளே

நல்ல முடிவுகள் பிறந்திட வேண்டும்

செம்மொழி செழுமையுறத் திடமான

முடிவுகள் இன்றே முன்னெடுக்க வேண்டும்……!

 

தமிழர்கள் இணைய வேண்டும்

தமிழும் தமிழரினமும்

உரிமையுடன்

குறையின்றி வாழ வேண்டும்

தமிழ் விந்துக்குப் பிறந்த

அனைவரும் சிந்திக்க வேண்டும்……..!

                                  - வே.ம.அருச்சுணன்  மலேசியா

by Swathi   on 01 May 2014  2 Comments
Tags: TamilInam   தமிழ் இனம்                 
 தொடர்புடையவை-Related Articles
மாண்பிழக்கும் தமிழினம் மாண்பிழக்கும் தமிழினம்
கருத்துகள்
22-Jul-2014 07:39:12 ARULPRAKASH.A said : Report Abuse
Thamizh Mozhi Mella Aliyum Yandru I.NA SAPAI Solvathai Kettal Yen Kankalil Kannir Vadikirathu....... Thamizh Pattralan
 
01-Jul-2014 03:04:21 சுபாஷ் said : Report Abuse
மாண்பு மிகு திரு.அர்ச்சுனன் அய்யா . நான் தகவல் தொழில் நுட்பத்தில் மேலாளர் ஆகா பணிபுரிகிறேன் , தங்கள் கோபம் கண்டு பெருமை படுகிறேன் . நம் மூத்தோர்கள் அணைத்து வழிமுறைகளை முன்பே சிறப்பாக கூறி உள்ளனர் . அனால் தமிழை வைத்து கொண்டு காலம் தள்ளுவது இன்றைய நிலைக்கு கடினமாக உள்ளது . சீனா , ஜப்பான் , கோரிய , அமெரிக்க , என்று அனைவரும் தன் தாய் மொழியுள் படிபதால் அவர்கள் நல்ல நிலை காண்கிறார்கள் , அனால் மாறாக நம் தாய் திரு நாட்டில் மட்டுமே மற்ற மொழிகளை படித்து வேலை பார்த்து சம்பாதிக்கும் அவ நிலை உருவாகி உள்ளது . இதற்கு காரணம் தெரிய வில்லை அய்யா . உங்களை போல் கோவப்பட்டு என்னால் பேசத்தான் முடிகிறது . அனல் செயலில் ஒன்றும் இல்லை . உங்களை போன்ற மூத்தவர்கள் தமிழை உண்மையாக நேசிபவர்கள் இருக்கும் போதே நம் தாய் மொழிக்கு ஒரு நல்ல வழி செயுமாறு கண்ணீர் மல்க வேண்டி கேட்டு கொள்கிறேன் , இப்படிக்கு தமிழ் அடியேன் சுபாஷ் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.