LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

     அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர்.ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார். அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை. மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் இருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார்.


     ‘உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; இதை நான் எப்படி அனுமதிப்பது?’ என எண்ணி மனம் குமுறினார். அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பதே சரியான முறை என்று தீர்மானமாக இருந்தார். உடனே பீர்பாலை வரவழைத்துத, ராஜ்யத்திலுள்ள எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி உத்தரவிட்டார்.


     அக்பருடைய இந்த உத்தரவைக் கேட்ட மக்கள் அனைவரும் திகிலடைந்தார்கள். ஏனென்றால், ராஜ்யத்திலுள்ள ஒவ்வொருவரும் யாருக்காவது எப்பொழுதாவது மருமகனாகத்தானே இருப்பார்கள். அரசருடைய உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பீர்பால் வெகு தீவிரமாக ஏராளமான தூக்கு மரங்களை நிறுவிக் கொண்டிருப்பதாக மக்கள் நினைத்தார்கள். தூக்கு மரங்கள் யாவும் நிறுவி முடிந்தபின், பீர்பால் அரசரைக் காணச் சென்றார். எல்லா வேலைகளும் செய்தாகி விட்டதாகவும், நாளை தூக்கில் போட்டு விடலாம் என்றும் அதற்குள் அரசர் வந்து அந்த ஏற்பாட்டைப் பார்த்து விடும்படியும் கேட்டுக் கொண்டார் பீர்பால்.


     அரசரும் பீர்பாலும் போய் பார்வையிட்டனர். நீண்ட வரிசையில் ஏராளமான தூக்கு மரங்கள் நிறுவப்பட்டிருந்தன. பீர்பால் செய்திருக்கும் ஏற்பாடுகள் யாவும் அரசருக்கு திருப்தியை அளித்தது. நீண்ட வரிசையின் முடிவில், இரண்டு தூக்கு மரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் நிறுவியிருந்ததைப் பார்த்த அக்பருக்குப் புரியவில்லை. இந்த இரண்டு விசேஷ தூக்கு மரங்கள் யாருக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன? எனக் கேட்டார் அக்பர்.‘வெள்ளிமரம், தங்களுடைய விசுவாச மிக்க ஊழியனாகிய அடியேனுக்கு; தங்க மரம் மேன்மை தங்கிய சக்கரவர்த்தி அவர்களுக்கு!’ என்று கூறினார் பீர்பால்.‘எனக்குத் தங்கமரமா?’ என்னை யார் தைரியமாக தூக்கில் போடுவது? என்று ஆச்சர்யப்பட்டார் அக்பர். ‘நீங்களாகவே!’ என்றார் பீர்பால்.


     ‘எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி நீங்கள் உத்தரவு போட்டீர்கள். அப்படி பார்க்கும்போது நீங்களும் நானும் உள்பட எல்லோரும் யாருக்காகிலும் மருமகன்களே. அதனால், தங்களுக்காக விசேஷமாக தங்கத்தினால் தயாரித்தேன். முதலாவதாக நீங்களும், அடுத்த படியாக நானும் நாளையே ஆரம்பிக்கலாம்; மற்றவர்களை அடுத்தபடியாக நிறைவேற்றலாம்” என்று கூறினார் பீர்பால். பீர்பார் கூறியவற்றைக் கேட்டதும் அக்பர் எத்தகைய முட்டாள்தனமான உத்தரவைப் போட்டு விட்டோம் என்பதை உணர்ந்ததோடு, அதை உடனடியாக அரண்மனைக்குத் திரும்பியதும் ரத்து செய்துவிடவும் தீர்மானித்தார். அக்பர் அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைக் காண அவருடைய அருமை மகள் அங்கே வந்து காத்திருந்தாள்.

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.