LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

மரணத்தை தள்ளிப் போட முடியுமா?

எமனை எப்படி ஏமாற்றுவது? தன் மரணம் நிகழும் நேரத்தை ஒருவன் தள்ளிப் போட முடியுமா?


சத்குரு:


நீங்களோ, அந்த எமனோ உங்கள் மரணத்தை முடிவு செய்வதில்லை. முதலில் எமன் என்று யாரும் இல்லை. நீங்கள் உடல் சார்ந்து இருக்கிறீர்கள். இந்த உடலுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அந்த எல்லைகளைத் தாண்டி அதனால் தொடர முடியாது. அதை மீறி உயிர் தொடர வேண்டுமென்றால், இந்த உடலை உதறிவிட்டு, இன்னொரு உடலை ஏற்றுக் கொள்வதுதான் நடக்கும். அதைத்தான் மறுபிறவி என்கிறோம்.


ஆயுளை நீட்டிக் கொள்வதற்கு இன்னொரு வழி இருக்கிறது. அது சமாதி நிலையில் நீண்டநேரம் இருந்துவிடுவது. சமாதிநிலையில் ஒருவரது உடலியக்கம் மிகமிகக் குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட மரணமடைந்தவர் போலவே அவர் இருப்பார். அவரது இதயம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது போல் இருக்கும், குடல் இயங்காது, சிறுநீரகம் செயல்படாது. ‘உயிர்’ உடலை விட்டு பிரியாது இருக்க, உடலின் இயக்கம் எவ்வளவு தேவையோ, அவ்வளவு மட்டும் உடல் இயங்கும். இப்படி செய்யும்போது உடலின் ஆயுட்காலம் நீளும். ஆறுமாதம் சமாதியில் இருந்தால் இன்னும் ஆறு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ உயிர் வாழ்வதை நீட்டித்துக் கொள்ள முடியும். ஆனால் தனக்குரிய நேரம் முடிந்துவிட்டால் இந்த உயிர் உடலில் இருப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை.


பரிணாம வளர்ச்சியின் படி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதேபோல் மனிதனிலிருந்து அடுத்த உயிரினம் வருமோ?


சத்குரு:


குரங்காக இருந்து நீங்கள் மனிதனாக ஆனது, உங்கள் விழிப்புணர்வு இல்லாமல் நடந்த செயல். எப்போது நீங்கள் மனிதனாக வந்துவிட்டீர்களோ, இனி அடுத்த வளர்ச்சி உங்கள் விழிப்புணர்வோடுதான் நடந்தாக வேண்டும். இயற்கை அடுத்த நிலை முன்னேற்றத்தை செயல்படுத்தாது. இப்போது ஒரு புலியோ, ஒரு குரங்கோ, ஒரு பாம்போ இருக்கிறதென்றால், புலி இப்படி, குரங்கு அப்படி, பாம்பு அப்படி என்று ஒவ்வொன்றிற்கும் அதன் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. புலி எப்போதும் அப்படித்தான் இருக்கும். நான் ஒரு நல்ல புலியாக வளர்வேனா என்னும் கவலை எல்லாம் அதற்கு கிடையாது. நன்றாக சாப்பிட்டால், அது நல்ல புலியாகத்தான் வளரும்.


ஆனால் மனிதன் ‘இப்படித்தான்’ என்று வரையறுக்கப் படவில்லை. ஒரு நேரத்தில் கடவுள் போல் கருணையுடன் செயல் படுகிறான், மற்றொரு நேரமோ இரக்கமற்ற அரக்கன் போலத் திமிருகிறான். ஒருவனை 24 மணி நேரமும் நல்லவன் அல்லது 24 மணி நேரமும் கெட்டவன் என்று சொல்ல முடியாது. அவனது செயல்களை நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் அவனுக்கு உண்டு. அதை வைத்து, தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன்தான் ஒவ்வொரு நொடியும் முடிவு செய்கிறான். எனவே இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இனி மனிதன்தான் தன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை இயற்கை சிறிது சிறிதாக மாற்றங்களை செய்து, உங்களை ‘மனிதன்’ என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இதற்கப்புறம் இயற்கை உங்களைத் தள்ளாது. அதன் வேலை முடிந்துவிட்டது. இனி நீங்களாகத்தான் உச்ச நிலையை அடைய வேண்டும்.

by Swathi   on 24 Mar 2014  0 Comments
Tags: ஈஷா யோகா   death   delay death   death delay   மரணம்        
 தொடர்புடையவை-Related Articles
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !! ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
இரங்கற்பா  பாடுதற்கு இறையருள் பெற்றவனே !! இரங்கற்பா பாடுதற்கு இறையருள் பெற்றவனே !!
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !! சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!
தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம் தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம்
மரணத்தை தள்ளிப் போட முடியுமா? மரணத்தை தள்ளிப் போட முடியுமா?
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார்
கண்தானம் செய்வது எப்படி? கண்தானம் செய்வது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.